Saturday, January 22, 2011

ராஜதந்திரம் என்றால் கலைஞர்தான்


இன்றைய தினமலரில் வந்த ஒரு கட்டுரையில் சில நாட்களுக்கு முன்னாள் மத்திய அரசில் மந்திரி சபை மாற்றியமைக்கபட்டதில் தமிழக முதல்வர் கலைஞரின் ராஜதந்திரம் எவ்வாறு செயல்படுத்தபட்டுள்ளது என்று அருமையாக எழுதியிருந்தார்கள்.

ஆம், தமிழக முதல்வர் ஒரு சிறந்த அரசியல் பண்பாளர் மட்டுமல்ல சிறந்த ராஜதந்திரியும் என்பதற்கு எண்ணிலடங்க நிகழ்வுகள் அடங்கும்.

அரசியல்வாதி என்பவர் சிறந்த நிர்வாகியாக இருந்தால் மட்டும் போதாது ஒரு ராஜதந்திரியாகவும் இருக்கவேண்டும் என்பது உலகநியதி. அதை நாம் ஆராய்ந்தால் அது நூற்றுக்கு நூறு கலைஞருக்கு பொருந்தும்.

திமுக ஆட்சி அமைந்தவுடன் 6 மாதத்தில் கலைந்து விடும் ஆருடம் சொன்னார்கள் அரசியல் அறிவிலிகள். திமுக ஆட்சியை 5 வருடம் அசைக்க முடியாமல் ஆட்சி செய்தது அவருடைய ராஜதந்திரம்.

அஞ்சாநெஞ்சர் அழகிரிக்கு பதவி கொடுத்து தென் மாவட்டங்களில் நடந்த எல்லா இடை தேர்தல்களிலும் வெற்றி பெற்று, அதிமுக, மதிமுக,கம்யூனிஸ்ட் கோட்டைகளை தகர்த்து எறிந்தது அவருடைய ராஜதந்திரம்

இலவசமாக ஏழைகளுக்கு எல்லா நல திட்ட உதவிகளை செய்து, ஏழைகளின் இதயங்களை கவர்ந்து, அவர்களின் ஓட்டு வங்கியை திமுக பக்கம் திருப்பியது அவருடைய ராஜதந்திரம்

ஈழம் பிரச்சினைய கிழப்பி, பாராளுமன்ற தேர்தலில் அரசியல் ஆதாயம் தேட முயன்ற எதிர்கட்சிகளை தோற்கடித்து, மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர உதவி செய்தது அவருடைய ராஜதந்திரம்

திமுக வை விமர்சித்து பேசிய இளங்கோவனை ஒன்றும் எதிர்த்து பேசாமல் அவரை இப்போது பேசவிடாமல் செய்தது அவருடைய ராஜதந்திரம்

ராஜா, ராஜா என்று ஊடகங்கள் எல்லாம் கூப்பாடு போட்டு கொண்டு இருக்கும் போது, அமைதியாக அதை எதிர்கொண்டது அவருடைய ராஜதந்திரம்

காங்கிரஸ் உடன், கூட்டு வைக்க ஜெயலலலிதா செய்த முயற்சிக்கு அமைதியா செக் வைத்து, மீண்டும் காங்கிரஸ் உடன்தான் கூட்டணி என்று உறுதி செய்தது அவருடைய ராஜதந்திரம்

இன்னும் எவ்வளவோ அடுக்கிகொண்டே போகலாம்.

இது எல்லாம் கலைஞர் என்ற தனிப்பட்ட ஒரு மனிதனால் மட்டுமே சாத்தியம். 60 ஆண்டு கால அரசியலில் எதிர் காட்சிகளுக்கு தண்ணி காட்டி கொண்டு இருக்கும் கலைஞர் இந்திய நாட்டின் சாணக்கியர். எதிர்த்தவர்கள் எல்லாம் அடையாளம் தெரியாமல் போனது ஒரு சோக கதை. தூற்றுவோர் தூற்றினாலும் 87 வயதிலும் வெற்றி பெற்று கொண்டு இருக்கும் கலைஞர் ஒரு சாணக்கியர் என்பது மறுபதற்கில்லை. மறுத்தவர்கள் அரசியலில் வாழ்ந்ததும் இல்லை.

நாம் போட்ட ஓட்டுல தமிழ் நாடில் உள்ள ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்குமே மருத்துவ காப்பீடு, எந்த அரசு குடுத்துச்சு இந்த உலகத்துல? எவனும் யோசிக்க முடியாதத கலைஞர் செஞ்சார், எத்தனையோ ஏழை குடும்பம் 2 லட்சம் வரை ஆதாயம் அடஞ்சுருக்கு. இது போதும் நாம் போட்ட வோட்டுக்கு. குறைகளை மட்டும் பார்க்காமல் நிறைகளை பார்போம்.

தமிழகத்தில் நாளையே ஒரு இயற்கை பேரிடர் ஏற்பட்டு உங்கள் உடமைகளை இழந்து விட்டால், நீங்களும் , உங்கள் குடும்பத்தாரும் கவலை பட வேண்டாம். ஒரு ருபாய் அரிசி, உடுக்க உடை, இருக்க கான்கரிட் வீடு, மருத்துவ காப்பீடு திட்டம் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.

இதுதான் கலைஞரின் ஆட்சியின் மகத்துவம்.......