Saturday, February 27, 2010

மரத்துப்போன கம்யூனிஸ்ட் கட்சிகள்


http://www.9p.com/games/18225/Hammer_n_Sickle180.gif


பென்னாகரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வை ஆதரிக்கப்போவதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது மூலம் அவர்களின் கட்சி முதுகெலும்பு இல்லாத ஓன்று என்பதை நிருபித்துள்ளது. சிறுதாவூரில் ஏழை எளிய மக்களின் நிலங்களை ஜெயலலிதா ஆக்கிரமித்துவிட்டார் எனவும், சுரண்டிவிட்டார் எனவும் அவர்கள் போராட்டம் நடத்திய இவர்கள் நிலைமை இன்று என்னவாயிற்று.

முல்லைப் பெரியாறு பிரச்னையில், சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ள ஐவர் குழுவில் தமிழகம் பங்கேற்க வேண்டும் என சொல்லும் தா.பாண்டியன். இந்தப் பிரச்னை பற்றி அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழில், "மீண்டும் அமைக்கப் பட்டுள்ள ஐவர் குழுவில், தமிழக அரசின் பிரதிநிதி இடம் பெறத் தேவையில்லை என தி.மு.க., பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில் நியாயமான காரணம் உள்ளது' என எழுதப்பட்டுள்ளது. இதை, பாண்டியன் படிக்கவில்லையோ? .



Tuesday, February 23, 2010

அரசியல் துரோகி


தமிழகத்தின் தென்முனையாம் குமரி மாவட்டத்தின் கன்னியாகுமரி சட்டசபை தொகுதி வரலாற்று சிறப்புமிக்கதாகும். குறிப்பாக இந்த தொகுதியில் வெற்றி பெறும் கட்சிதான் தமிழகத்தில்ஆட்சியமைக்கும். மற்றொரு சிறப்பும் உண்டு அதாவது கன்னியாகுமரி தொகுதியை உள்ளடக்கிய திருசெந்தூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறும் அணிதான் மத்தியில் ஆட்சியமைக்கும். இவ்வளவு சிறப்புமிக்க தொகுதியில் இருந்து ஒரு முறை தமிழக சட்டசபைக்கு தேர்வு பெற்று மந்திரி பதவியும் பெற்ற துரோகத்தின் மறுபெயரான த----ய் சு---ம் செய்த அட்டூழியங்கள் தான் எத்தனை எத்தனை.

நெல்லை மாவட்டம் ஊரல்வாய்மொழி தான் இவருடைய சொந்த ஊர், அவருடைய தாயாரின் ஊர்தான் குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை. அரசியலில் அரிசுவடி கூட தெரியாத அரைவேக்காட்டு அரசியல்வாதி முதலில் அதிமுகவில் உள்ள அமைச்சர்களுக்கு பெண்களை கூட்டிகொடுக்கும் மாமா வேலைதான் பார்த்து வந்தான்.

இவன் துரோகத்தின் மொத்த உருவம் என்பதற்கு அடுகடுகான ஆதாரங்கள் பல்லாயிரம் உள்ளது.

இவன் ஒரு சாதி வெறியான், நாடார் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் குமரி மாவட்டத்தில் அவர்களின் உதவியால் பதவி சுகம் அனுபவித்த இவன் தன்னுடன் ஒரு நாடார் சமுதாய மக்களையும் நெருங்கவிடமாட்டான், மற்ற அரசு உயர் பதவிகளிலும் நாடார் மக்களை வர அனுமதிக்க மாட்டான்.

நாடார் இனமே மோசம் என காட்டுவதற்காக தன்னுடன் எப்பொழுதும் ரௌடி பட்டியலில் உள்ளவர்களை தன்னுடனே வைத்து கொள்வான். நல்லவர்களே தன் பக்கம் வர அனுமதிக்கமாட்டன், அவர்கள் அரசியலில் பெரிய பதவிகளுக்கு வருவதையும் அனுமதிக்கமாட்டன்.

சென்னையில் வக்கீல் தொழில் படிப்பு முடிந்ததும் அதிமுகவின் சீனியர் வக்கீல் பட்டாபிராமன் என்பவரின் கீழ் ஜூனியர் வக்கீலாக பணியாற்றிய போது அவருக்கு எதிராக பெரிய சதி திட்டம் தீட்டி அவரை பதவியில் இருந்து நீக்க காரணமாக இருந்தான். இதன் மூலம் அந்த பதவியை தனக்கு கிடைக்கும் படி பார்த்துகொண்டான்.

அதன் பிறகு நாம் எல்லாம் அறிந்திருக்கும் ஆதி ராஜாராம் அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அதிமுக தலைமை முடிவு செய்திருந்த சமயத்தில் அவர் மீது கிருமினல் வழக்கு இருப்பதாக தலைமையிடம் கூறி அவருக்கு பதவி கிடைக்காமல் செய்து அந்த பதவியை (3 April 1996 to 18 May 2002) பெற்றுகொண்டான்.


கடந்த தமிழக சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கபட்ட இவன் தனது தொகுதியை தவிர மற்ற தொகுதியில் அதிமுகாவோ அல்லது தோழமை கட்சிகளோ வந்து விடகூடாது என்று எண்ணி நாகர்கோயில் தொகுதி நமக்கு பாதகமாக இருக்கும் என்று பொய் கூறி கட்சி முன்னோடிகளை போட்டிஇடவிடாமல் தவிர்த்தான் (பின் மதிமுகாவிற்கு ஒதுக்கபட்டது). இதன் காரணமாக வெற்றி வாய்ப்பில் இருந்த கன்னியாகுமரி, நாகர்கோயில் மற்றும் குளச்சல் (பச்சைமால் கண்டிப்பாக தோல்வி அடைவான் என்று தெரிந்தும் கடைசி நிமிடத்தில் மாற்றி அவனுக்கு வாங்கி கொடுத்த தொகுதி) தொகுதிகள் உட்பட அனைத்து தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பை இழக்க காரணமாக இருந்தான்.

இவன் ஒரு பொம்பளை பொறுக்கி, உதாரணமாக தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசபட்ட டாக்டர் பெண்மணியும், ரயிலில் கட்டிபுரண்ட ஜெயலட்சுமியும்.

குமரி மாவட்ட அதிமுகவை பொறுத்தவரை கட்சி முன்னோடிகள் யாருக்குமே இவன் மேல் நல்ல எண்ணம் கிடையாது, இதன் காரணமாக எம் ஜி யார் கால ரத்தத்தின் ரத்தங்கள் யாரும் தற்பொழுது கட்சியில் தொடரமுடியாமல் விலகிவிட்டனர். தற்பொழுது மக்களை சுரண்டும் கிரிமினல்களை கட்சியில் சேர்த்து பொறுப்புகள் வழங்கி போலி அரசியல் பண்ணிகொண்டிருக்கிறான்.

பொதுப்பணி துறை அமைச்சராக இருந்த பொழுது சிறிய அளவு பணத்தினை கட்சியினருக்கு கொடுத்துவிட்டு அதனை கூட்டம் நடைபெறும் போது சொல்லிகாட்டி அவமானபடுத்துவான். இதனால் வெறுப்படையும் கட்ச்சிகாரன் எவரும் இவனை மதிப்பதில்லை. இதன் காரணமாக குமரி மாவட்ட அதிமுக கரைய துவங்கி தற்பொழுது குமரி மாவட்ட அதிமுக கூடாரம் முற்றிலும்காலியாகிவிட்டது.

சுகாதார துறை அமைச்சரான பின் ஊழல் செய்து சம்பாதித்த அனைத்து சொத்துகளும் கேரளா, சென்னை, தோவாளை மற்றும் கன்னியாகுமரியை சேர்ந்த பினாமிகள் பெயரில் பதுக்கிவைத்துள்ளான்.

இனி வரும் காலங்களில் வரும் அனைத்து தேர்தல்களிலும் குமரி மாவட்டத்தை பொறுத்தவரை கலைஞரின் பொற்கால ஆட்சியின் பயனாகவும், கூப்பிட்ட குரலுக்கு ஓட்டோடிவந்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துவரும் அமைச்சர் சுரேஷ் ராஜன் அவர்களின் முயற்ச்சியாலும் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதுமே திமுகாவின் கோட்டை என்பதை நிருப்பிக்கும் என்பதில் ஐயமில்லை.










Sunday, February 21, 2010

ஜெயலலிதாவின் திசை திருப்பும் நாடகம்


தமிழ்நாட்டில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. மதவாதத்துக்கும் தீய சக்திகளுக்கும் எதிராக உருவானதுதான் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி. இந்த கூட்டணியை உடைத்து விடலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார்.

தி.மு.க.விடம் இருந்து காங்கிரசை பிரித்து விட்டு, பிறகு காங்கிரசுடன் கூட்டணி ஏற்படுத்தி விடலாம் என்று ஜெயலலிதா கனவு கண்டு கொண்டிருக்கிறார். அவரது பகல் கனவு ஒரு போதும் பலிக்கப்போவது இல்லை. அவர் பகல் கனவு காண்பதை நிறுத்த வேண்டும்.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. 2011-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் கூட தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும். அந்த தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றிகளைக் குவித்து சாதனை படைக்கும்.

சமீப காலமாக அ.தி. மு.க.வில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், கட்சி மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள், ஜெயலலிதாவின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தி அடைந்து, அவரிடம் இருந்து விலகி வருகிறார்கள். இதனால் விரக்தி அடைந்துள்ள ஜெயலலிதா, இதுபற்றி மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காக திசை திருப்பும் நடவடிக்கையாக காங்கிரசுடன் கூட்டணி என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் போன்றவையும் கூட மக்களின் கவனத்தை திசை திருப்பும் செயல்தான்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வெளி நாட்டைச் சேர்ந்தவர் என்று முன்பு ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். கூட்டங்களில் எல்லாம் சோனியா வெளிநாட்டுக்காரர் என்றார். இந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஜெயலலிதா இப்போது என்ன சொல்கிறார் என்பதை அறிய விரும்புகிறேன்.

யூரியா உர விலை உயர்வு பிரச்சினை காரணமாக தி.மு.க.-காங்கிரஸ் உறவில் உரசல் ஏற்பட்டிருப்பதாக சொல்வதெல்லாம் பத்திரிகைகளின் யூகங்களாகும். இந்த உர பிரச்சினை பற்றி சரியாக சொல்ல வேண்டுமானால் இது தி.மு.க. - காங்கிரஸ் உறவை பலப்படுத்தும் உண்மையான உரமாக உள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் கலைஞர் கூறினார்.

Thursday, February 18, 2010

கொட்டைப் பாக்குக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள்

http://www.natureandscience.org/kids/images/Red_Chameleonsmall.jpg

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு புதிய மாநிலச் செயலாளராக ஜி.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.ராமகிருஷ்ணன் ஒரு கூட்டத்தில் பேசும்போது, ஏப்ரல் 19-ந் தேதியன்று புதிய தலைமைச் செயலகம் முன்பாக குடிசை மக்களுக்கு குடி மனைப்பட்டா வழங்கக் கோரி பட்டினிப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.


அதுபற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி தனது முரசொலி கடிதத்தில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குடி மனைப்பட்டாக்கள் எந்த அளவிற்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆளும் மாநிலங்களிலே எந்த அளவிற்கு குடி மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்தும், புள்ளி விவரங்களோடு பதில் அளித்திருந்தார்.


அந்தக் கடிதத்திற்குப்பதில் எழுதுவதாக கருதிக்கொண்டு அந்தக் கட்சியின் சார்பில் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதா? என்ற தலைப்பிலே ஒரு அறிக்கை விடப்பட்டுள்ளது. கருணாநிதி பட்டுக்கோட்டைக்குத்தான் வழி சொல்லியிருக்கிறார். அது கொட்டைப்பாக்குக்கு விலை சொல்வதைப் போல மார்க்சிஸ்டுகளுக்கு தெரிய காரணம்- அவர்கள் அரசியல் ரீதியாக வலிந்து போய் தாங்களே மேடை போட்டு, அழையாதார் வீட்டு விருந்தாளியைப் போல - சிறுதாவூர் சீமாட்டியின் தயவிற்காக காத்திருக்கும் நிலையில் அப்படித்தான் தெரியும்.


குடி மனைபட்டா கோரி போராட்டம் நடத்தத்துடிக்கின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளை கேட்பது எல்லாம், தி.மு.க. ஆட்சியை விட வேறு எந்த ஆட்சியிலாவது இந்த அளவிற்கு குடிமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதா?


எதற்காகவாவது இந்த ஆட்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் குறிக்கோள்.


பட்டினி போராட்டத்தைக் கூட எல்லா இடங்களையும் விட்டு விட்டு தமிக அரசின் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு பிரமாண்டமான புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு திறக்கப்படுகின்ற நேரத்தில் அந்த அலுவலகத்திற்கு முன்னால் பட்டினிப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பது என்பது அவர்களின் வயிறெரிச்சல் தான் காரணம்.


ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வறுமை காரணமாக ஒருவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தஞ்சை மாவட்டத்திலே தற்கொலை செய்து கொண்ட போது, நள்ளிரவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ. சிவபுண்ணியம் இல்லத்திற்கே காவல் துறையை அனுப்பி மிரட்டினார்களே, அது போன்ற ஆட்சிதான் புனித ஆட்சியாக மார்க்சிஸ்டுகளுக்கு தோன்றுகிறது போலும்.


சட்டப்பேரவையில் ஜெயலலிதா ஒரு முறை பேசும் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் மார்க்சிஸ்ட் சித்தாந்தம் பற்றிக்குறிப்பிட்டார். இதனால்தான் அவர்கள் மக்களுக்குப் பயன் இல்லாமல் போய் விட்டனர். எப்போது பார்த்தாலும், எங்கே பார்த்தாலும் போராட்டம், போராட்டம் என்று தான் இருப்பார்கள். அல்லது செயற்குழு கூட்டம் கூட்டி மூன்று, நான்கு நாட்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள். 19 ஆயிரம் உள்ளாட்சி மன்றத் தொகுதிகளில் எதிர்க்கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்யவே அனுமதிக்கப்படவில்லை என்றெல்லாம் குறிப்பிட்டார். இதை எதிர்த்து பட்டினி போராட்டம் நடத்த மார்க்சிஸ்டுகளுக்கு துணி வில்லை.


ஜெயலலிதாவே கம்யூனிஸ்டு கட்சியைப்பற்றி விமர்சிக்கும் போது, கம்யூனிஸ்டுகள் வெத்து வேட்டு போராட்டம் நடத்துவார்கள். அவர்கள் பேராசைக்காரர்கள். குழாய்ச்சண்டைக் கோமாளிகள் என்றும் உண்டியல் (தகரம்) கண்டு பிடிக்கப்பட்டதே அவர்களுக்காகத்தான் என்றும், என்றும் சொன்னாரே, அப்படிச்சொல்வதுதான் பட்டுக்கோட்டைக்குச் செல்லும் உகந்த வழியாக மார்க்சிஸ்டுகளுக்கு தோன்றுமா?


கீழத்தஞ்சையில் குடியிருப்போருக்கு இலவச மனைப்பட்டா வழங்கியது. கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டம், தியாகத்தால் தான் என்று ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். போராட்டம் நடத்தி விட்டால், தியாகம் செய்து விட்டால் மட்டும் சட்டம் வந்து விடுமா?


அதை மதிக்கின்ற அரசாக தி.மு.க. அரசும், கலைஞர் இருந்ததால் தானே அந்தச் சட்டம் வந்தது. மணலியாருக்கு புரிந்த இந்த உண்மை ராமகிருஷ்ணனுக்கு புரியாமல் போய் விட்டதா? வாதத்திற்குப் பதில் சொல்லலாம், விதண்டா வாதம் செய்தால் என்ன செய்வது, கொட்டைப்பாக்கையே நினைத்துக் கொண்டிருந்தால் பட்டுக்கோட்டைக்கு வழி தெரியாது! இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் புரிந்து கொண்டால் நல்லது.

Wednesday, February 17, 2010

பொழுதுபோகாத கம்யூனிஸ்ட்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL4R7VO0TZCQCNaStbb4H8OJohUQi00C5N7yuA-Y9-J1s7WAMLxJ_aQ4TtK5NeRe7LOgLh7HlykFEX2zecHg3RjK9zticvCHKbJG0s21ZwvdqaFZ-SUn1kmIyqGERL0QpRfRe7_3UCBSc/s400/vomit+wow.jpg

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலராக ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வந்ததும், அரசியல் நாகரிகத்தின்படி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து செய்தி அனுப்பினேன். அதே நாளில், அவர் மாநிலச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டு நடந்த முதல் கூட்டத்திலேயே ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 19ம் தேதி, புதிய சட்டசபை முன், குடிசை மக்களுக்கு குடிமனை பட்டா கோரி, மாபெரும் பட்டினிப் போராட்டம் நடத்தப்போவதாக கூறியுள்ளார். தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை லட்சம் பேருக்கு குடிமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது; மார்க்சிஸ்ட் கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் வழங்கப்பட்ட பட்டா எவ்வளவு என்பதை அவர் ஒப்பிட்டுக் காட்டியிருந்தால், அவர் போராடுவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளலாம்.

கடந்த 2006 - 2007ம் ஆண்டில் மட்டும் தமிழகத்திலே வழங்கப்பட் வீட்டுமனைப் பட்டாக்களின் எண்ணிக்கை 76,662. அதே ஆண்டில் மேற்கு வங்கத்தில் வழங்கப்பட்ட பட்டாக்கள் 1,577 தான். 2007-08ம் ஆண்டில் தமிழகத்தில் மூன்று லட்சம்; மேற்கு வங்கத்தில் 1,839. கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு தான் என்றில்லை; அதற்கு முன் 1996 - 2001ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்களின் எண்ணிக்கை மட்டும் ஒன்பது லட்சத்து 50 ஆயிரத்து 449. மார்க்சிஸ்ட்கள் இன்று வலிந்துபோய், தாங்களே தங்கள் செலவில் மேடை போட்டு ஆதரிக்கும் அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் 2001 - 2006 வரை, ஐந்தாண்டுகளில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 60 ஆயிரத்து 625. இம்முறை தி.மு.க., ஆட்சியில் இதுவரை வழங்கப்பட்டுள்ள பட்டாக்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 99 ஆயிரத்து 917.

அரசு புறம்போக்கு நிலங்களில் பத்தாண்டுகளுக்கும் மேல் வீடுகளைக் கட்டிக் குடியிருப்போருக்கு, அந்த ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்தி பட்டா வழங்க, அரசாணை வெளியிடப்பட்டது. மூன்று லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட வேண்டும் என கலெக்டர்களுக்கு ஆணையிடப்பட்டு, அதற்காகவே அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், இலவச வீட்டுமனை பெற, வருமான வரம்பை முற்றிலும் நீக்கி, கிராமப்புறங்களில் நான்கு சென்ட், நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் இரண்டு சென்ட்டும் இலவச வீட்டு மனைக்காக வழங்க தனி அரசாணையும் வெளியிடப் பட்டது. வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவதற்கான குறைந்தபட்ச கால வரம்பு, மூன்று ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

இன்றைக்கும் தமிழகத்தில் உள்ள 21 லட்சம் குடிசைவாசிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை அறிவித்து, அதற்கான துவக்க விழா, மார்ச் 3ம் தேதி திருச்சியில் நடக்க உள்ளது. இந்த ஆண்டு, முதல் கட்டமாக மூன்று லட்சம் குடிசை வீடுகள், கான்கிரீட் வீடுகளாக 1,800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளன. அவர்களின் வாழ்த்தைப் பெற்று, ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணப்போகிற நம்மைப் புண்படுத்தும் முறையில், மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் பட்டினிப் போராட்டத்தை அறிவித்திருப்பது எத்தகைய பண்பாடு என்பதை, நாகரிக உலகம் நன்கு புரிந்துகொள்ளும். போர் குணத்தோடு பொறுப்புக்கு வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலர் ராமகிருஷ்ணன், முதலில் மேற்குவங்கத்தில் முரசு கொட்டும் சிங்கம் ஆகட்டும்; தமிழகத்தில் அவர் நடத்தவிருக்கும் பட்டினிப் போராட்டத்தை பிறகு வைத்துக் கொள்ளலாம். இல்லையேல், "கூரை ஏறி குருவி பிடிக்க முடியாதவர், வானத்தைக் கீறி, வழி காட்டுவாரா' என கேட்க நேரிடும். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

போயஸ் கார்டனில் மாங்காய் பறிக்க வக்கில்லாத கம்யூனிஸ்ட்கள், அம்மாவின் ஆட்சியின்போது, வைகோ நெடுங்காலம் உள்ளே இருந்ததை பார்த்து, காம்ரேடுகள் அரண்டுபோய் கிடந்தனர். போராடுவதை பற்றி அவர்கள் வாய் திறக்கவில்லையே. இப்போது குதிக்கிறார்கள். மேற்கு வங்கத்திற்கும் கேரளாவுக்கும் சீனாவுக்கும் அடிவருடிகள்.

Sunday, February 14, 2010

ஜெயலலிதாவின் அ தி மு க கூடாரம் காலியாகிறதா?

http://snapjudge.files.wordpress.com/2007/07/third_front_jj_jayalalitha_naidu_mulayam_kalam_president_poll_elections.jpg

ஆளுங்கட்சியின் அடுத்தடுத்த அதிரடிகளால், கலங்கிப் போயிருக்கிறது அ.தி.மு.க., கூடாரம். அடுத்தடுத்து, அ.தி.மு.க., எம்.எல். ஏ.,க்கள் அணி மாறி வரும் நிலையில், "அடுத்தது யார்' என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. 12 பேர் வரை தி.மு.க., பக்கம் சாய தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றரை ஆண்டுகளில் ஏராளமான சாதனைத் திட்டங்களைக் கொண்டு வந்ததன் மூலமும் தமிழக அரசியல் களத்தில், ஆளுங்கட்சி பலம் மிக்கதாய் நிற்கிறது. இந்த பலத்தை மட்டும் நம்பியிராமல், மைனாரிட்டி தி.மு.க என்று ஆளும்கட்சியை விமர்சித்து வரும் எதிர்க்கட்சியை பலவீனப்படுத்துவது தான் நம் கட்சிக்கு பலம் என்ற சித்தாந்தத்தோடு களமிறங்கியுள்ளது தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., வை வலுவிழக்கச் செய்யும் வேலைகளை ஆளுங்கட்சி செய்யவேண்டியது இல்லை ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் அணுகுமுறையுமே போதும்.

தி.மு.க., ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்திருந்த நிலையில், மதுரை வந்த துணை முதல்வர் ஸ்டாலினை அதிரடியாகச் சந்தித்தார் மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., எஸ்.வி. சண்முகம். தனது தொகுதிக்கு வளர்ச்சிப் பணிகளை செய்து தருமாறு, ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்ததாக சண்முகம் தெரிவித்தார். அதன்பின், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.வி.சேகர், முதல்வர், துணை முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் மேடையில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தினார். அ.தி.மு.க., தலைமையிடம் அவர் கொண்ட ஊடல், மோதலாகி, ஆளுங்கட்சியின் ஆசி பெற்ற, எந்தக் கட்சியும் சாராத எம்.எல்.ஏ.,வாகும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களின் வழக்கு விவகாரங்களை கவனித்து வந்த வக்கீல் ஜோதி, சேலம் செல்வகணபதி உள்ளிட்ட, "தலை'கள் ஆளுங்கட்சியில் இணைந்தன. இதன் பிறகு அ.தி.மு.க., தலைமை சற்று உஷாரானது. ஆளுங்கட்சியுடன் உறவு பாராட்டும் அ.தி.மு.க., தலைகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். நீலகிரியில் நடந்த அ.தி.மு.க., செயற்குழுவில், அதிருப்தி பட்டியலில் இடம்பெற்ற 16 மாவட்டச் செயலர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இவர்களில், சில எம்.எல்.ஏ.,க்களும் அடக்கம். கட்சித் தலைமை தங்களை அடையாளம் கண்டு கொண்டதால் தான், இந்த புறக்கணிப்பு என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.

இந்த நிலையில், அந்த 16 பேரில் ஒருவரான அனிதா ராதாகிருஷ்ணன் ஆளுங்கட்சியில் ஐக்கியமானார். இதைத் தொடர்ந்து, உஷாரான அ.தி.மு.க., தலைமை, அதிருப்தியாளர்களை கொட நாட்டுக்கு அழைத்து, பேசி, விருந்தளித்து அவர்களை உற்சாகப்படுத்தியது. கட்சித்தலைமை தங்களை பரிவுடன் பார்ப்பதால், இவர்கள் ஆளுங்கட்சியின் வலையில் விழ மாட்டார்கள் என்று அ.தி.மு.க., நினைத்தது; அதனால் சற்று அயர்ந்திருந்தது. உட்கட்சித் தேர்தலில் கூட அனைவருக்கும் பொறுப்புகளை வாரிக் கொடுத்து திருப்திப்படுத்தியது. ஆனால், கோவில்பட்டி ராதாகிருஷ்ணனும், ஜெயங்கொண்டம் ராஜேந்திரனும் இந்த கணிப்பை பொய்யாக்கியுள்ளனர்.

மேலும் ஆளுங்கட்சி அழைத்தால் தாவிக் குதித்து வர 12க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் தயாராக உள்ளனர். ஆளுங்கட்சி விரும்பினால், அவர்களை அடுத்தடுத்து அழைத்து எங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க முடியும் என ஆளுங்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Friday, February 12, 2010

ஜெயலலிதாவும் ஜோதிடமும்


கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றுக்கு 2,500 ரூபாயாக வழங்க வலியுறுத்தி, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா தலைமையில் இன்று 13ம் தேதி, விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. "நிறைந்த அமாவாசை நாளில் களம் இறங்கி போராடினால், எதிரிகளை நிச்சயம் வெல்ல முடியும்' என்று ஜோதிடர்கள் கூறியதால் தான், குறிப்பிட்ட அந்த தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஆளும் கட்சிக்கு எதிராக அறிக்கைப் போர் நடத்தி வந்தார் ஜெயலலிதா. அ.தி.மு.க.,வும் களத்தில் இருக்கிறது என்பதை வெளியில் தெரியப்படுத்துவதற்காக அவ்வப்போது மாவட்ட அளவில் கட்சி நிர்வாகிகள் தலைமையில் சிறு சிறு போராட்டம் நடத்த உத்தரவிட்டார். இருந்தும், அடுத்தடுத்து நடந்த இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது.


இந்நிலையில், அ.தி.மு.க.,வில் புதிய நிர்வாகிகள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில் மூத்த நிர்வாகிகள் பலர் ஓரங்கட்டப்பட்டனர். பதவி கிடைக்காத பலர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தவும், மீண்டும் மக்கள் முன் தோன்றி அ.தி.மு.க., உயிரோட்டத்துடன் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டவும் திட்டமிட்டார். அதற்காக, தன்னுடைய ஆஸ்தான ஜோதிடர்களிடம் சமீபத்தில் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். அவர்கள் ஆலோசனைப்படி, விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சிவராத்திரிக்கு பின் வரும் நிறைந்த அமாவாசை நாள் பிப்.,13ம் தேதி. அமாவசை அன்று செய்யும் எந்த காரியமும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. ஜெயலலிதா எந்த காரியம் செய்தாலும், நாள், நட்சத்திரம் பார்த்து செய்யக்கூடியவர். அந்த வகையில் அமாவாசையன்று போராட்டம் நடத்தினால் எதிரிகளுக்கு அடுத்தடுத்து தொல்லை ஏற்படும், எதிரிகளை வீழ்த்த முடியும் என்ற ஜோதிடர்களின் கூற்றுப்படி ஆர்ப்பாட்டத்துக்கு 13ம் தேதி நாள் குறித்துள்ளார். மேலும், ஆர்ப்பாட்டம் நடைபெறும் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நல்லநேரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பிப்ரவரி 13ம் தேதி நிறைந்த அமாவாசை, திருவோணம் நட்சத்திரம். இந்த நட்சத்திரம் விஷ்ணு பகவானுக்கு உகந்த நட்சத்திரம். அன்று சகுனி கரணம். கும்ப ராசி, லக்கனத்தில் குரு உள்ளார். ஏழாவது இடத்தை குரு, சூரியன், சுக்கிரன் பார்க்கின்றனர். குரு பார்க்க கோடி நன்மை என்பர். அத்துடன் சூரியனும், சுக்கிரனும் பார்ப்பதால் பலம் அதிகரிக்கும்; எதிரிகள் பலம் குறையும். அதையெல்லாம் கணித்த ஜோதிடர்கள், இந்த நாளில் போராட்டம் நடத்தினால் எதிரிகளை வீழ்த்த முடியும் என்று கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் தான் ஜெயலலிதா, தன் தலைமையில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.


ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் கூட, ஜோதிடர்கள் கணித்து கொடுத்த திசையில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அங்கு வடக்கு திசை நோக்கி மேடை அமைத்து வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஜெயலலிதா, வடக்கு திசை நோக்கி நின்றபடி தான் பேசுவார். அதற்கு தக்கபடி தான் பணிகள் நடந்து வருகின்றன.

ஆட்சியில் அதிகாரப்போதையில் ஆட்டம் போடுவதும் ஆட்சியில் இல்லாத போது பணிவாக நடப்பதுபோல பாசாங்கு காட்டுவதும் கைதேர்ந்த நடிகை ஜெயலலிதா. மீண்டும் இவரை நம்பி ஏமாற தமிழகம் தயாரில்லை. அதிமுக கட்சி இனி தேறாது.

Thursday, February 11, 2010

நன்றி பாராட்டாத இடதுசாரிகள்


தீண்டாமை என்ற கடும் விஷத்தை, நாட்டில் ஒரு துளி கூட இல்லாமல் துடைத்தெறிய இயலவில்லை என்பதை, இன்றைய நாட்டுநடப்பு காட்டி வருகிறது. ஜாதிக் கொடுமைகள், தீண்டாமைத் தீமைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக, இன்னும் தலை நிமிர்ந்து தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் போன்ற ஊர்களில், எந்த ஆட்சியிலும் ஊராட்சித் தேர்தல்களைக் கூட நடத்த முடியாமல் இருந்தது. நடந்தால் தலைவர்களாக தலித்கள் தான் வர முடியும் என்பதால், அவர்கள் உயிரோடு இருக்க முடியாத நிலை. இந்த சகிக்க முடியாத கொடுமையை அகற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமக்குண்டு என்பதை நினைத்துப் பார்த்து, 2006ம் ஆண்டு அந்த ஊர்களில் ஊராட்சித் தேர்தலை நடத்தி, அதில் வென்றவர்களை சென்னை கலைவாணர் அரங்கத்துக்கு அழைத்து பாராட்டி, பரிசு வழங்கினோம்.

மதுரையை அடுத்த உத்தபுரத்தில், தலித்கள் தாண்டிச் செல்லக் கூடாது என்பதற்காக, உயர் வகுப்பினர் கட்டியிருந்த சுவரை, கலெக்டரையும், போலீசாரையும் போனில் அழைத்துப் பேசி, இடிக்கச் செய்து, ஜாதி வெறியைத் தணித்தோம். அதைப் போலவே, கோவையில் உள்ள பெரியார் நகரில், 20 ஆண்டுகளுக்கு மேலாக அருந்ததியர் வசிக்கிற பகுதியில், எழுப்பப்பட்டிருந்த சுவர் அகற்றப்பட்டது. தலித்களை விட மோசமான நிலையில் அவமதிக்கப்பட்ட அருந்ததிய மக்களை, அடித்தளத்தில் வீழ்ந்து கிடக்கிற சூழலில் இருந்து கைதூக்கிவிட, அவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளித்தோம். கட்சிகள் சிலவற்றின் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை நடைமுறைப்படுத்தினால், கோரிக்கைகளை வைத்த கட்சிகள், தங்களுக்குத் தாங்களே நன்றி பாராட்டிக் கொள்வதும், கோரிக்கைகளை நிறைவேற்றிய அரசின் செயலை இருட்டடிப்பு செய்வதும், தங்கள் நிரந்தர சாமுத்ரிகா லட்சணங்களில் ஒன்றாகப் பதிய வைத்துக் கொண்டிருக்கின்றன.

விருந்திட்டோர்க்கு நன்றி கூறாமல், விருந்தை அருந்தியவர்களுக்கு நன்றியும், பாராட்டும் கூறி, நடமாடிக் கொண்டிருப்பவர்களை வாழ்த்துவோம், வணங்குவோம். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Tuesday, February 9, 2010

முதல்வர் கருணாநிதிக்கு 'திருக்குறள் பேரொளி' விருது

முதல்வர் கருணாநிதியின் திருக்குறள் பணிகளைப் பாராட்டி "திருக்குறள் பேரொளி' விருதை உலகத் திருக்குறள் பேரவை அமைப்பு வழங்குகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் அதற்கான விழா பிப்ரவரி 10-ல் நடைபெறும்.

இது குறித்து உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

சென்னையில் வள்ளுவர் கோட்டம்,​​ குமரி முனையில் வள்ளுவருக்கு 133 அடி சிலை,​​ பெங்களூரில் திறக்கப்படாமல் இருந்த வள்ளுவர் சிலையைத் திறந்தது,​​ 1,330 குறள்களையும் ஒப்பிக்கும் குழந்தைகளுக்கு பொற்கிழி பரிசு ஆகியவை முதல்வர் கருணாநிதியின் அரிய சாதனையாகும்.

திருக்குறளைப் பொறுத்தவரை எழுத்து,​​ சொல்,​​ செயல் என்று மூன்று விதமான சேவைகளையும் முதல்வர் கருணாநிதி செய்துள்ளார்.​ செய்தும் வருகிறார்.

அவரது இந்த அரிய பணிகளைப் பாராட்டி "உலகத் திருக்குறள் பேரவை' அமைப்பு சார்பில் "திருக்குறள் பேரொளி' என்ற விருதினை வழங்க உள்ளோம்.அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புதன்கிழமை ​(பிப்ரவரி 10) நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படும்.​

ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள்,​​ குஜராத் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.​ கோகுலகிருஷ்ணன்,​​ தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கின்றனர்.

விழாவில் கருணாநிதியின் திருக்குறள் பணிகள் பற்றி திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி மாணவர்கள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.​ குன்றக்குடியைச் சேர்ந்த இரண்டு கால்களும் ஊனமுற்ற சக்திவேல் என்ற இளைஞர் வரைந்த கருணாநிதியின் ஓவியங்கள் நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்படும் என்றார் பொன்னம்பல அடிகளார்.

கலைஞர் அரசின் சாதனைகள் தொடர ஆதரவு தாருங்கள்: அமைச்சர் சுரேஷ்ராஜன்


முதல்-அமைச்சர் கருணாநிதி, தமிழ் சமுதாயத்துக்கு எண்ணற்ற திட்டங்களை செய்து வருகிறார். இது அனைவருக்கும் தெரியும். கலைஞர் ஆட்சியில்தான் மக்கள் பயன்பெறும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

வேறு எந்த ஆட்சியிலும் இந்த அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு மனிதனும் கலைஞர் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களில் ஏதாவது ஒரு திட்டத்திலாவது பயன்பெற்று இருப்பார் என்பது உறுதி.

ஆட்சி பொறுப்பேற்ற 4 ஆண்டுகளுக்குள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மட்டுமல்லாது சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார். இன்னும் ஒரு ஆண்டில் பொதுத்தேர்தல் வர உள்ளது. கலைஞர் அரசின் சாதனை திட்டங்கள் தொடர பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் சுரேஷ் ராஜன் அவர்கள் பேசினார்கள்.

Thursday, February 4, 2010

அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க முயற்சியா?


பென்னாகரம் இடைத்தேர்தல் ஜனவரி 20-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.​ பொங்கல் பண்டிகை இடையில் வந்ததால் அத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.பின்னர், பென்னாகரம் தொகுதியில் திருத்திய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.​ தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஜனவரி 1-ல் தருமபுரியில் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இடைத்தேர்தலை சந்திப்பது என்ற தீர்மான முடிவுடன் தி.மு.க.வும், பா.ம.க.​ தேர்தல் களத்தில் இறங்கியது, மற்றும் வேட்பாளரையும் அறிவித்து முழு வீச்சுடன் தேர்தல் பணியாற்றி வந்தது.​

ஆனால்,​​ பென்னாகரம் தேர்தலில் அ.தி.மு.க.​ மட்டும் ஆர்வம் காட்டவில்லை.​ மேலும்,​​ தனது ஆதரவுக் கட்சிகளைத் தூண்டிவிட்டு,​​ வாக்காளர் பட்டியலில் முறைகேடு என்று குற்றம்சாட்டியது.​ இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்,​​ அதுவரை இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க.​ ஆதரவுக் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தன.

ஜெயலலிதா ஆதரவுக் கட்சிகள் மனு அளித்த ஒரு மணி நேரத்துக்குள்,​​ வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தது.​ அதுவரை திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டாம் என்றும் அறிவித்தது.

இதன் மூலம் பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் சூழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் துணை போயிருக்கிறது.இதனால் தேர்தல் ஆணையம் நடுநிலையிலிருந்து தவறியிருக்கிறது என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க முடியாது.​ தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.


Tuesday, February 2, 2010

டெல்லி செல்கிறார் துணை முதல்வர் மு க ஸ்டாலின்


நாடு முழுவதும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.


இதைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒரு வழிமுறையை கண்டறிவது குறித்து விவாதிக்க, புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஜனவரி 27-ந் தேதியன்று, அனைத்து மாநில முதல்-மந்திரிகள் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மறுநாளில், உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக இந்த கூட்டம் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டது.


இந்தநிலையில், வரும் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் டெல்லியில் பிரதமர் தலைமையில் முதல்-மந்திரிகள் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகம் சார்பில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். பிப்ரவரி 6-ந் தேதி நடைபெறும் முதல்நாள் கூட்டத்தில், விலைவாசி உயர்வு பற்றி அனைத்து முதல்வர்களுடனும் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.


இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பேசுகிறார்கள். துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதில் பேசுகிறார்.


மறுநாள் 7-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பற்றிய முக்கிய விவாதத்தை பிரதமர் மேற்கொள்கிறார். இந்த கூட்டத்தில், உள்நாட்டு பாதுகாப்புக்கென தனி அமைச்சகத்தை அமைப்பது, தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் முதல்-மந்திரிகளின் கருத்துக்கள் கேட்கப்படும்.


நக்சல்கள் ஒழிப்பு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, கடலோர பாதுகாப்பு, உளவு தகவல்களை திரட்டுதல், அவற்றை மத்திய-மாநில உளவுத்துறையினர் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற பல்வேறு விஷயங்கள் பற்றியும் பேசப்படும். இந்த இரண்டாவது நாள் கூட்டத்திலும் அனைத்து முதல்-மந்திரிகளும் பேசுகிறார்கள்.