Sunday, February 14, 2010

ஜெயலலிதாவின் அ தி மு க கூடாரம் காலியாகிறதா?

http://snapjudge.files.wordpress.com/2007/07/third_front_jj_jayalalitha_naidu_mulayam_kalam_president_poll_elections.jpg

ஆளுங்கட்சியின் அடுத்தடுத்த அதிரடிகளால், கலங்கிப் போயிருக்கிறது அ.தி.மு.க., கூடாரம். அடுத்தடுத்து, அ.தி.மு.க., எம்.எல். ஏ.,க்கள் அணி மாறி வரும் நிலையில், "அடுத்தது யார்' என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. 12 பேர் வரை தி.மு.க., பக்கம் சாய தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றரை ஆண்டுகளில் ஏராளமான சாதனைத் திட்டங்களைக் கொண்டு வந்ததன் மூலமும் தமிழக அரசியல் களத்தில், ஆளுங்கட்சி பலம் மிக்கதாய் நிற்கிறது. இந்த பலத்தை மட்டும் நம்பியிராமல், மைனாரிட்டி தி.மு.க என்று ஆளும்கட்சியை விமர்சித்து வரும் எதிர்க்கட்சியை பலவீனப்படுத்துவது தான் நம் கட்சிக்கு பலம் என்ற சித்தாந்தத்தோடு களமிறங்கியுள்ளது தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., வை வலுவிழக்கச் செய்யும் வேலைகளை ஆளுங்கட்சி செய்யவேண்டியது இல்லை ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் அணுகுமுறையுமே போதும்.

தி.மு.க., ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்திருந்த நிலையில், மதுரை வந்த துணை முதல்வர் ஸ்டாலினை அதிரடியாகச் சந்தித்தார் மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., எஸ்.வி. சண்முகம். தனது தொகுதிக்கு வளர்ச்சிப் பணிகளை செய்து தருமாறு, ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்ததாக சண்முகம் தெரிவித்தார். அதன்பின், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.வி.சேகர், முதல்வர், துணை முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் மேடையில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தினார். அ.தி.மு.க., தலைமையிடம் அவர் கொண்ட ஊடல், மோதலாகி, ஆளுங்கட்சியின் ஆசி பெற்ற, எந்தக் கட்சியும் சாராத எம்.எல்.ஏ.,வாகும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களின் வழக்கு விவகாரங்களை கவனித்து வந்த வக்கீல் ஜோதி, சேலம் செல்வகணபதி உள்ளிட்ட, "தலை'கள் ஆளுங்கட்சியில் இணைந்தன. இதன் பிறகு அ.தி.மு.க., தலைமை சற்று உஷாரானது. ஆளுங்கட்சியுடன் உறவு பாராட்டும் அ.தி.மு.க., தலைகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். நீலகிரியில் நடந்த அ.தி.மு.க., செயற்குழுவில், அதிருப்தி பட்டியலில் இடம்பெற்ற 16 மாவட்டச் செயலர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இவர்களில், சில எம்.எல்.ஏ.,க்களும் அடக்கம். கட்சித் தலைமை தங்களை அடையாளம் கண்டு கொண்டதால் தான், இந்த புறக்கணிப்பு என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.

இந்த நிலையில், அந்த 16 பேரில் ஒருவரான அனிதா ராதாகிருஷ்ணன் ஆளுங்கட்சியில் ஐக்கியமானார். இதைத் தொடர்ந்து, உஷாரான அ.தி.மு.க., தலைமை, அதிருப்தியாளர்களை கொட நாட்டுக்கு அழைத்து, பேசி, விருந்தளித்து அவர்களை உற்சாகப்படுத்தியது. கட்சித்தலைமை தங்களை பரிவுடன் பார்ப்பதால், இவர்கள் ஆளுங்கட்சியின் வலையில் விழ மாட்டார்கள் என்று அ.தி.மு.க., நினைத்தது; அதனால் சற்று அயர்ந்திருந்தது. உட்கட்சித் தேர்தலில் கூட அனைவருக்கும் பொறுப்புகளை வாரிக் கொடுத்து திருப்திப்படுத்தியது. ஆனால், கோவில்பட்டி ராதாகிருஷ்ணனும், ஜெயங்கொண்டம் ராஜேந்திரனும் இந்த கணிப்பை பொய்யாக்கியுள்ளனர்.

மேலும் ஆளுங்கட்சி அழைத்தால் தாவிக் குதித்து வர 12க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் தயாராக உள்ளனர். ஆளுங்கட்சி விரும்பினால், அவர்களை அடுத்தடுத்து அழைத்து எங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க முடியும் என ஆளுங்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment