Friday, February 12, 2010

ஜெயலலிதாவும் ஜோதிடமும்


கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றுக்கு 2,500 ரூபாயாக வழங்க வலியுறுத்தி, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா தலைமையில் இன்று 13ம் தேதி, விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. "நிறைந்த அமாவாசை நாளில் களம் இறங்கி போராடினால், எதிரிகளை நிச்சயம் வெல்ல முடியும்' என்று ஜோதிடர்கள் கூறியதால் தான், குறிப்பிட்ட அந்த தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஆளும் கட்சிக்கு எதிராக அறிக்கைப் போர் நடத்தி வந்தார் ஜெயலலிதா. அ.தி.மு.க.,வும் களத்தில் இருக்கிறது என்பதை வெளியில் தெரியப்படுத்துவதற்காக அவ்வப்போது மாவட்ட அளவில் கட்சி நிர்வாகிகள் தலைமையில் சிறு சிறு போராட்டம் நடத்த உத்தரவிட்டார். இருந்தும், அடுத்தடுத்து நடந்த இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது.


இந்நிலையில், அ.தி.மு.க.,வில் புதிய நிர்வாகிகள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில் மூத்த நிர்வாகிகள் பலர் ஓரங்கட்டப்பட்டனர். பதவி கிடைக்காத பலர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தவும், மீண்டும் மக்கள் முன் தோன்றி அ.தி.மு.க., உயிரோட்டத்துடன் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டவும் திட்டமிட்டார். அதற்காக, தன்னுடைய ஆஸ்தான ஜோதிடர்களிடம் சமீபத்தில் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். அவர்கள் ஆலோசனைப்படி, விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சிவராத்திரிக்கு பின் வரும் நிறைந்த அமாவாசை நாள் பிப்.,13ம் தேதி. அமாவசை அன்று செய்யும் எந்த காரியமும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. ஜெயலலிதா எந்த காரியம் செய்தாலும், நாள், நட்சத்திரம் பார்த்து செய்யக்கூடியவர். அந்த வகையில் அமாவாசையன்று போராட்டம் நடத்தினால் எதிரிகளுக்கு அடுத்தடுத்து தொல்லை ஏற்படும், எதிரிகளை வீழ்த்த முடியும் என்ற ஜோதிடர்களின் கூற்றுப்படி ஆர்ப்பாட்டத்துக்கு 13ம் தேதி நாள் குறித்துள்ளார். மேலும், ஆர்ப்பாட்டம் நடைபெறும் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நல்லநேரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பிப்ரவரி 13ம் தேதி நிறைந்த அமாவாசை, திருவோணம் நட்சத்திரம். இந்த நட்சத்திரம் விஷ்ணு பகவானுக்கு உகந்த நட்சத்திரம். அன்று சகுனி கரணம். கும்ப ராசி, லக்கனத்தில் குரு உள்ளார். ஏழாவது இடத்தை குரு, சூரியன், சுக்கிரன் பார்க்கின்றனர். குரு பார்க்க கோடி நன்மை என்பர். அத்துடன் சூரியனும், சுக்கிரனும் பார்ப்பதால் பலம் அதிகரிக்கும்; எதிரிகள் பலம் குறையும். அதையெல்லாம் கணித்த ஜோதிடர்கள், இந்த நாளில் போராட்டம் நடத்தினால் எதிரிகளை வீழ்த்த முடியும் என்று கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் தான் ஜெயலலிதா, தன் தலைமையில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.


ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் கூட, ஜோதிடர்கள் கணித்து கொடுத்த திசையில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அங்கு வடக்கு திசை நோக்கி மேடை அமைத்து வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஜெயலலிதா, வடக்கு திசை நோக்கி நின்றபடி தான் பேசுவார். அதற்கு தக்கபடி தான் பணிகள் நடந்து வருகின்றன.

ஆட்சியில் அதிகாரப்போதையில் ஆட்டம் போடுவதும் ஆட்சியில் இல்லாத போது பணிவாக நடப்பதுபோல பாசாங்கு காட்டுவதும் கைதேர்ந்த நடிகை ஜெயலலிதா. மீண்டும் இவரை நம்பி ஏமாற தமிழகம் தயாரில்லை. அதிமுக கட்சி இனி தேறாது.

No comments:

Post a Comment