Wednesday, February 17, 2010

பொழுதுபோகாத கம்யூனிஸ்ட்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL4R7VO0TZCQCNaStbb4H8OJohUQi00C5N7yuA-Y9-J1s7WAMLxJ_aQ4TtK5NeRe7LOgLh7HlykFEX2zecHg3RjK9zticvCHKbJG0s21ZwvdqaFZ-SUn1kmIyqGERL0QpRfRe7_3UCBSc/s400/vomit+wow.jpg

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலராக ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வந்ததும், அரசியல் நாகரிகத்தின்படி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து செய்தி அனுப்பினேன். அதே நாளில், அவர் மாநிலச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டு நடந்த முதல் கூட்டத்திலேயே ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 19ம் தேதி, புதிய சட்டசபை முன், குடிசை மக்களுக்கு குடிமனை பட்டா கோரி, மாபெரும் பட்டினிப் போராட்டம் நடத்தப்போவதாக கூறியுள்ளார். தி.மு.க., ஆட்சிக் காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை லட்சம் பேருக்கு குடிமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது; மார்க்சிஸ்ட் கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் வழங்கப்பட்ட பட்டா எவ்வளவு என்பதை அவர் ஒப்பிட்டுக் காட்டியிருந்தால், அவர் போராடுவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளலாம்.

கடந்த 2006 - 2007ம் ஆண்டில் மட்டும் தமிழகத்திலே வழங்கப்பட் வீட்டுமனைப் பட்டாக்களின் எண்ணிக்கை 76,662. அதே ஆண்டில் மேற்கு வங்கத்தில் வழங்கப்பட்ட பட்டாக்கள் 1,577 தான். 2007-08ம் ஆண்டில் தமிழகத்தில் மூன்று லட்சம்; மேற்கு வங்கத்தில் 1,839. கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு தான் என்றில்லை; அதற்கு முன் 1996 - 2001ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்களின் எண்ணிக்கை மட்டும் ஒன்பது லட்சத்து 50 ஆயிரத்து 449. மார்க்சிஸ்ட்கள் இன்று வலிந்துபோய், தாங்களே தங்கள் செலவில் மேடை போட்டு ஆதரிக்கும் அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் 2001 - 2006 வரை, ஐந்தாண்டுகளில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 60 ஆயிரத்து 625. இம்முறை தி.மு.க., ஆட்சியில் இதுவரை வழங்கப்பட்டுள்ள பட்டாக்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 99 ஆயிரத்து 917.

அரசு புறம்போக்கு நிலங்களில் பத்தாண்டுகளுக்கும் மேல் வீடுகளைக் கட்டிக் குடியிருப்போருக்கு, அந்த ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்தி பட்டா வழங்க, அரசாணை வெளியிடப்பட்டது. மூன்று லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட வேண்டும் என கலெக்டர்களுக்கு ஆணையிடப்பட்டு, அதற்காகவே அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், இலவச வீட்டுமனை பெற, வருமான வரம்பை முற்றிலும் நீக்கி, கிராமப்புறங்களில் நான்கு சென்ட், நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் இரண்டு சென்ட்டும் இலவச வீட்டு மனைக்காக வழங்க தனி அரசாணையும் வெளியிடப் பட்டது. வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவதற்கான குறைந்தபட்ச கால வரம்பு, மூன்று ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

இன்றைக்கும் தமிழகத்தில் உள்ள 21 லட்சம் குடிசைவாசிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை அறிவித்து, அதற்கான துவக்க விழா, மார்ச் 3ம் தேதி திருச்சியில் நடக்க உள்ளது. இந்த ஆண்டு, முதல் கட்டமாக மூன்று லட்சம் குடிசை வீடுகள், கான்கிரீட் வீடுகளாக 1,800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளன. அவர்களின் வாழ்த்தைப் பெற்று, ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணப்போகிற நம்மைப் புண்படுத்தும் முறையில், மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் பட்டினிப் போராட்டத்தை அறிவித்திருப்பது எத்தகைய பண்பாடு என்பதை, நாகரிக உலகம் நன்கு புரிந்துகொள்ளும். போர் குணத்தோடு பொறுப்புக்கு வந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலர் ராமகிருஷ்ணன், முதலில் மேற்குவங்கத்தில் முரசு கொட்டும் சிங்கம் ஆகட்டும்; தமிழகத்தில் அவர் நடத்தவிருக்கும் பட்டினிப் போராட்டத்தை பிறகு வைத்துக் கொள்ளலாம். இல்லையேல், "கூரை ஏறி குருவி பிடிக்க முடியாதவர், வானத்தைக் கீறி, வழி காட்டுவாரா' என கேட்க நேரிடும். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

போயஸ் கார்டனில் மாங்காய் பறிக்க வக்கில்லாத கம்யூனிஸ்ட்கள், அம்மாவின் ஆட்சியின்போது, வைகோ நெடுங்காலம் உள்ளே இருந்ததை பார்த்து, காம்ரேடுகள் அரண்டுபோய் கிடந்தனர். போராடுவதை பற்றி அவர்கள் வாய் திறக்கவில்லையே. இப்போது குதிக்கிறார்கள். மேற்கு வங்கத்திற்கும் கேரளாவுக்கும் சீனாவுக்கும் அடிவருடிகள்.

No comments:

Post a Comment