Tuesday, April 12, 2011

வாக்காள பெருமக்களே வளமான தமிழகம் உங்கள் கையில்!

நாளைய விடியல் மே மாதம் 13 ஆம் தேதி தமிழகத்தில் வளமான ஆட்சி மலர நாளை வாக்கு சாவடிக்கு செல்லும் பொழுது சிறிது நிதானமாக சிந்தித்து கடந்த இருபது வருடங்கள் தமிழகத்தில் நடந்த நல்லவைகளையும் தீயவைகளையும் ஆராயிந்து வாக்கு எந்திரத்தில் கையை வையுங்கள்....

கடந்த 2006 முதல் 2011 நடந்த நல்லவைகள் உங்கள் பார்வைக்கு......

* விவசாய பெருமக்களுக்கு 7000 கோடி கூட்டறவு கடன் தள்ளுபடி....

* ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி.....

* இலவச வண்ண தொலைகாட்சி பெட்டி.....

* மாதம் தோறும் மலிவு விலையில் பாமாயில், பருப்பு மற்றும் மளிகை பொருள்கள்...

* விவசாய பெருமக்களுக்கு பயிர் கடன் தள்ளுபடி...

* விவசாய தொழிலாளர் நலவாரியம் உட்பட 31 அமைப்பு சார தொழிலாளர் நலவாரியம்.....

* பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் "கல்வி வளர்ச்சி நாள்" என அறிவித்து பள்ளிகளில் கல்வி விழ கொண்ட்டாட்டம் ......

* மாணவ மாணவியர்களுக்கு வாரம் 5 முட்டை அல்லது வாழைபழம்....

* கல்லுரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச பஸ் பாஸ்....

* தொழிற்கல்விக்கு நுழைவு தேர்வு ரத்து.....

* தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை.....

* 4724 திருக்கோவில்களில் திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு.....

* திருமண உதவி 25000 ரூபாயாக உயர்வு.....

* ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு தலா 6000 ரூபாய் உதவி.....

* அரசு ஊழியர்களுக்கு 200000 ரூபாய் வரை மருத்துவ உதவி வழங்கும் பிதிய காப்பீட்டு திட்டம்.....

* இதய நோய், நீரழிவு நோய், புற்றுநோய் போன்றவற்றிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உடல் பரிசோதனை செய்ய நலமான தமிழகம் திட்டம்......

* உயிகாக்கும் உயர் சிகிட்சைக்கான "கலைஞர் காப்பிட்டு திட்டம்".....

* அவசரகால மருத்துவ ஊர்தி 108 இலவச சேவை திட்டம்......

* 37 புதிய தொழிற்சாலைகள் மூலம் சுமார் 2,22,569 பேருக்கு வேலை வாய்ப்பு......

*படித்து வேலைவாய்ப்பற்ற இளைன்ஞர்களுக்கு உதவி தொகை......

* நிலவரி குறைப்பு ....

* டெஸ்மா, எஸ்மா சட்டங்கள் நீக்கம்.....

* ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமலாக்கம்......

* கலைஞர் வீடு வழங்கும் திட்டம்......

* கொடுமை காரி ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரபட்ட வேலை நியமன தடை சட்டம் ரத்து, இதன் மூலம் சுமார் 600000 பேருக்கு அரசு வேலைவாய்ப்பு.....

* அண்ணா மறுமலர்ச்சி திட்டம்.....

*வரும்முன் காப்போம் திட்டம்......

* கண்ணொளி பாதுகாப்பு திட்டம்......

* பச்சிளம், பள்ளி சிறார்களுக்கு இதய பாதுகாப்பு திட்டம்......

* முதல் தலைமுறை பட்டதாரிக்கு கல்வி கட்டணம் அரசே ஏற்றுகொள்ளும்.....

* மகாத்மா காந்தி ஊராக வேலை வாய்ப்பு திட்டம்......

* சுயவுதவி குழுக்களுக்கு 9032 கோடி ரூபாய் கடனுதவி.......

* 50 வயது கடந்த திருமணமாகாத பெண்களுக்கு உதவி தொகை.....

* முதியோர், மாற்று திறநாளிகள், கடும் ஊனமுற்றோர், விதவை களுக்கு உதவி தொகை......

* 200000 சத்துணவு தொழிளார்களுக்கு காலமுறை ஊதியம்....

* தமிழுக்கு "செந்தமிழ்" அந்தஸ்து......

இன்னும் சொல்லலாம்......

இது போன்று சாதனைகள் தொடர தி மு மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து சிறப்பான ஆட்சியமைய உங்களின் பொன்னான வாக்குகளை பதிவு செய்யவும்.


Wednesday, March 16, 2011


குமரி மாவட்டம் தி மு க வின் கோட்டை என்பது நிருபணம், கன்யாகுமரி தொகுதியால் தி மு க மீண்டும் கோட்டையில் ஆட்சியை பிடிக்கும் என்பது திண்ணமே......


தமிழக சட்டசபை தேர்தல் ஆகட்டும், அல்லது பாராளுமன்ற தேர்தலாகட்டும், கன்னியாகுமரி தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அதுதான் ஆட்சி அமைக்கும் என்பது பலாண்டுகளாக நிருபணம் ஆகிவருகிறது.

குமரி மாவட்டத்தில் உள்ள அதிமுக கட்சியின் முன்னணியினர் (தளவாய் சுந்தரத்தின்) துரோக செயல்களால் கொதிபடையும் அதிமுக வினர் தமிழகத்தின் பொற்கால ஆட்சியாம் தமிழக முதல்வரின் செயல்பாடுகளால் ஈர்க்கபட்டு தி மு வில் இணையும் நிகழ்ச்சிகள் நடைபெற்று குமரி மாவட்ட அதிமுகவினர் முற்றிலுமாக தி மு வில் இணைந்ததின் காரணமாக இன்று குமரி மாவட்டம் தி மு கவின் கோட்டையாக மாறியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

அறிக்கை நாயகி துரோகத்தின் மறுபெயர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின் மூலம் கன்னியாகுமரி தொகுதியில் பிரபலம் இல்லாத பச்சைமால் என்பவர் போட்டியிட இருபத்தின் காரணமாக கன்னியாகுமரி மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பெற்றுள்ள அமைச்சர் சுரேஷ் ராஜன் வெற்றி உறுதி செய்யபட்டுள்ளது.


தளவாய்
சுந்தரத்திற்கும் போட்டியிட வாய்ப்பு மறுக்கபட்டுள்ளது...... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.......




Friday, February 4, 2011

தி மு கவிற்கு ஏன் ஒட்டு போடவேண்டும்?

5 முறை தமிழகத்தின் முதல்வராக தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டுவரும் தமிழகமுதல்வரின் சாதனைகளை பாருங்கள்.....பின் சிந்தித்து பாருங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று.....

ஒருகோடி ஏழைகளுக்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்.

இலவச கலர் டிவி
இந்தியாவில் முதன் முறையாக கோவையில் வேளாண் பல்கலைக்கழகம்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்

உழவர் சந்தைகள்
மே தினத்துக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை.


மானிய விலையில் மளிகைப் பொருள்கள் மற்றும் 1 கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி.

வருமுன் காப்போம் திட்டம்,
சேலம் உருக்காலை,
நெய்வேலி 2-வது சுரங்கம் மற்றும் மின் திட்டம்,

சென்னையில் டைடல் பூங்கா
குடிசை மாற்று வாரியம்,
குடிநீர் வடிகால் வாரியம்,
கை ரிக்ஷாக்களை ஒழித்தது.

மகளிர் சுய உதவிக்குழு திட்டம்,

தமிழ் -ஆங்கிலம் இருமொழித் திட்டம்,
12-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம்

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து

பஸ்கள் நாட்டுடைமை, போக்குவரத்து கழகங்கள் உருவாக்கம்

புதுமுக வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி.
கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் ரத்து

ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம்
விதவைகள் மறுமண உதவித் திட்டம்,
கலப்பு திருமணத்தை ஊக்குவிக்க நிதி உதவி


உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு.
3.5 சதவீத தனி ஒதுக்கீடு,
அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு,
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம்,
பெண்களுக்கும் சொத்துரிமை சட்டம்,
அரசுப் பணியில் பெண்களுக்கு 30 சதவீத ஒதுக்கீடு.


பெரியார் நினைவு சமத்துவபுரம்
உருது அகாதெமி

குமரி முனையில் திருவள்ளுவர் சிலை
தைத் திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது,

காமராஜர் பிறந்தநாளை கல்வி வளச்சி நாளாக அறிவித்தது.

வருமான வரம்புக்கு உட்பட்டு பெண்களுக்கும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி.

பிற்படுத்தபட்டோருக்கு 25-லிருந்து 31 சதவீதமாகவும்,
தாழ்த்தப்பட்டோருக்கு 16-லிருந்து 18 சதவீதமாகவும் இட ஒதுக்கீட்டை உயர்த்தியது.

உருது பேசும் முஸ்லிம்கள், கொங்கு வேளாளர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது.

வன்னியர் சீர்மரபினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு அளித்தது.

தமிழ்ப்பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் சலுகை,

மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றியது. "மெட்ராஸ்' என்பதை சென்னை என மாற்றியது.


இத்தனையும் செய்த கலைஞருக்கு கைகொடுப்போம்.......
வரும் தேர்தலில் தி மு கூட்டணிக்கு வாக்களிப்போம்.........
தமிழா நாம் நன்றி மறவாமல் இருப்போம்.......

Saturday, January 22, 2011

ராஜதந்திரம் என்றால் கலைஞர்தான்


இன்றைய தினமலரில் வந்த ஒரு கட்டுரையில் சில நாட்களுக்கு முன்னாள் மத்திய அரசில் மந்திரி சபை மாற்றியமைக்கபட்டதில் தமிழக முதல்வர் கலைஞரின் ராஜதந்திரம் எவ்வாறு செயல்படுத்தபட்டுள்ளது என்று அருமையாக எழுதியிருந்தார்கள்.

ஆம், தமிழக முதல்வர் ஒரு சிறந்த அரசியல் பண்பாளர் மட்டுமல்ல சிறந்த ராஜதந்திரியும் என்பதற்கு எண்ணிலடங்க நிகழ்வுகள் அடங்கும்.

அரசியல்வாதி என்பவர் சிறந்த நிர்வாகியாக இருந்தால் மட்டும் போதாது ஒரு ராஜதந்திரியாகவும் இருக்கவேண்டும் என்பது உலகநியதி. அதை நாம் ஆராய்ந்தால் அது நூற்றுக்கு நூறு கலைஞருக்கு பொருந்தும்.

திமுக ஆட்சி அமைந்தவுடன் 6 மாதத்தில் கலைந்து விடும் ஆருடம் சொன்னார்கள் அரசியல் அறிவிலிகள். திமுக ஆட்சியை 5 வருடம் அசைக்க முடியாமல் ஆட்சி செய்தது அவருடைய ராஜதந்திரம்.

அஞ்சாநெஞ்சர் அழகிரிக்கு பதவி கொடுத்து தென் மாவட்டங்களில் நடந்த எல்லா இடை தேர்தல்களிலும் வெற்றி பெற்று, அதிமுக, மதிமுக,கம்யூனிஸ்ட் கோட்டைகளை தகர்த்து எறிந்தது அவருடைய ராஜதந்திரம்

இலவசமாக ஏழைகளுக்கு எல்லா நல திட்ட உதவிகளை செய்து, ஏழைகளின் இதயங்களை கவர்ந்து, அவர்களின் ஓட்டு வங்கியை திமுக பக்கம் திருப்பியது அவருடைய ராஜதந்திரம்

ஈழம் பிரச்சினைய கிழப்பி, பாராளுமன்ற தேர்தலில் அரசியல் ஆதாயம் தேட முயன்ற எதிர்கட்சிகளை தோற்கடித்து, மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர உதவி செய்தது அவருடைய ராஜதந்திரம்

திமுக வை விமர்சித்து பேசிய இளங்கோவனை ஒன்றும் எதிர்த்து பேசாமல் அவரை இப்போது பேசவிடாமல் செய்தது அவருடைய ராஜதந்திரம்

ராஜா, ராஜா என்று ஊடகங்கள் எல்லாம் கூப்பாடு போட்டு கொண்டு இருக்கும் போது, அமைதியாக அதை எதிர்கொண்டது அவருடைய ராஜதந்திரம்

காங்கிரஸ் உடன், கூட்டு வைக்க ஜெயலலலிதா செய்த முயற்சிக்கு அமைதியா செக் வைத்து, மீண்டும் காங்கிரஸ் உடன்தான் கூட்டணி என்று உறுதி செய்தது அவருடைய ராஜதந்திரம்

இன்னும் எவ்வளவோ அடுக்கிகொண்டே போகலாம்.

இது எல்லாம் கலைஞர் என்ற தனிப்பட்ட ஒரு மனிதனால் மட்டுமே சாத்தியம். 60 ஆண்டு கால அரசியலில் எதிர் காட்சிகளுக்கு தண்ணி காட்டி கொண்டு இருக்கும் கலைஞர் இந்திய நாட்டின் சாணக்கியர். எதிர்த்தவர்கள் எல்லாம் அடையாளம் தெரியாமல் போனது ஒரு சோக கதை. தூற்றுவோர் தூற்றினாலும் 87 வயதிலும் வெற்றி பெற்று கொண்டு இருக்கும் கலைஞர் ஒரு சாணக்கியர் என்பது மறுபதற்கில்லை. மறுத்தவர்கள் அரசியலில் வாழ்ந்ததும் இல்லை.

நாம் போட்ட ஓட்டுல தமிழ் நாடில் உள்ள ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்குமே மருத்துவ காப்பீடு, எந்த அரசு குடுத்துச்சு இந்த உலகத்துல? எவனும் யோசிக்க முடியாதத கலைஞர் செஞ்சார், எத்தனையோ ஏழை குடும்பம் 2 லட்சம் வரை ஆதாயம் அடஞ்சுருக்கு. இது போதும் நாம் போட்ட வோட்டுக்கு. குறைகளை மட்டும் பார்க்காமல் நிறைகளை பார்போம்.

தமிழகத்தில் நாளையே ஒரு இயற்கை பேரிடர் ஏற்பட்டு உங்கள் உடமைகளை இழந்து விட்டால், நீங்களும் , உங்கள் குடும்பத்தாரும் கவலை பட வேண்டாம். ஒரு ருபாய் அரிசி, உடுக்க உடை, இருக்க கான்கரிட் வீடு, மருத்துவ காப்பீடு திட்டம் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.

இதுதான் கலைஞரின் ஆட்சியின் மகத்துவம்.......

Wednesday, December 29, 2010

ஜெயலலிதா ஆட்சி செய்த லட்சணம் - முதல்வர் கலைஞரின் பதில்



தனது ஆட்சிக்காலத்தில் ஒரு சிறு தவறு கூட நடைபெறாத தூய்மையான ஆட்சி நடத்தியதால் தான், தன் மீது பொய் வழக்கு போட ஒன்றுமே கிடைக்கவில்லை என ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி பதில் தூய்மையான ஆட்சி நடத்தியது ஜெயயலிதாவா? என தொடங்கும் இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது


ஜெயலலிதாவின் அறிக்கைகள் சிலவற்றைப் படிக்கும்போது, "அவருக்கு ஏன் நீங்கள் பதில் சொல்கிறீர்கள்'' என்று கூட சிலபேர் என்னைக் கேட்கிறார்கள். கேட்பவர்கள் எழுதத் தெரிந்தவர்கள்தான்! ஆனால் அவர்களே இது ஏன் வீண் வேலை என்று கருதுகிறார்கள் போலும்! அதனால்தான் என்னைக் கேட்கிறார்கள்; அது எப்படியோ போகட்டும்! ஜெயலலிதாவின் அறிக்கைகள் சிலவற்றைப் படிக்கும்போது சிரிப்பை அடக்கிக்கொள்ள முடிவதில்லை.


இதற்கோர் உதாரணம் கூறட்டுமா? ஜெயலலிதாவின் 26-ந் தேதிய அறிக்கையில் "2001-2006 ஆட்சி காலத்தில் ஒரு சிறு தவறு கூட நடைபெறாத தூய்மையான ஆட்சியை நான் நடத்தியதால் என் மீது பொய் வழக்குப் போட கருணாநிதிக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை'' என்ற வாசகங்களைப் படித்தபோது சிரிப்பு வராமல் என்ன செய்யும்? ஒரு சிறு தவறுகூட நடைபெறாத தூய்மையான ஆட்சியாம்! அதைப் படிக்கின்ற- அ.தி.மு.க. ஆட்சியிலே பணியிழந்த மக்கள் நலப்பணியாளர்களும்- சாலைப்பணியாளர்களும்- பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு அலுவலர்களும்- எஸ்மா, டெஸ்மா சட்டங்களுக்கு ஆளான தொழிலாளர்களும் தங்களுக்குள் என்ன நினைத்துக்கொள்வார்கள்!


கம்னிஸ்டு கட்சிகள் போட்டி

தூய்மையான ஆட்சி நடத்தியிருக்கிறார்களாம்- அதனால்தான் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியினரும், இந்திய கம்ïனிஸ்டு கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு ஜெயலலிதா அணியிலே "நான் முந்தி'' - "நீ முந்தி'' என்று யார் அவருக்கு "முந்தி''யாக இருப்பது என்று பந்தயம் கட்டிக்கொண்டு அணி திரளுகிறார்கள் போலும்!


முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றுக்கொண்டதே தூய்மையற்ற ஆட்சிக்கு உதாரணமாக அமைந்தது. அவர் பதவியேற்றது பற்றி 15-5-2001 தேதிய "இந்து'' தனது தலையங்கத்தில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து உறுதியாக தடை செய்யப்பட்ட ஒருவர் (ஜெயலலிதா) முதல்-அமைச்சராவது இதுவே முதல் முறை என்றும், சட்டப்படி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் இத்தகைய பதவியில் அமர்வதும் இதுவே முதல்முறை என்றும், இருநிலைகளிலும் அவருடைய செயல் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வையே மீறுவதோடு சட்ட ரீதியாகவும், நியாயப்பூர்வமாகவும் வேதனை அளிக்கும் வினாக்களை எழுப்பியுள்ளது என்றும் எழுதியது.


அன்றைய ஆனந்தவிகடன் வார இதழ் தனது தலையங்கத்தில், தன்மீதுள்ள களங்கத்தை சட்டரீதியாக துடைத்தெறிந்த பிறகே முதல்வர் பதவியில் ஜெயலலிதா அமர வேண்டும், அதுதான் கண்ணியமும், கவுரவமுமிக்க அந்தப் பதவிக்கும் அழகு, அவருக்கும் அழகு என்று எழுதியது.


இடைக்கால முதல்-அமைச்சர்

ஜெயலலிதாவை முதல்-அமைச்சராக நியமித்தது சட்டப்படி செல்லாது என்று தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் 21-9-2001 அன்று உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.பி.பரூச்சா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் வழங்கிய ஒருமனதான தீர்ப்பில் "தமிழக முதல்வராக ஜெயலலிதா நியமனம் செய்யப்பட்டது செல்லாது. அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இனியும் அவர் முதல்-அமைச்சராக நீடிக்க முடியாது'' என்று கூறிய பிறகுதான்; ஜெயலலிதாவின் வழக்கறிஞரான கே.கே.வேணுகோபால், நீதிபதிகளிடம் மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு சில நாட்கள் அவகாசம் தேவையென்று கேட்டார். அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி, "முதல்-அமைச்சர் இறந்தால் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறதே; இவ்வளவு பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் ஒரு கட்சி எந்த நேரத்திலும் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாமே'' என்று கூறினார்கள். இதுவும் ஒரு தூய்மையான ஆட்சிக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ்தானே? இதற்கு பிறகுதான் இடைக்கால முதலமைச்சர் பதவி பன்னீருக்கு கிடைத்தது!


கொலை முயற்சி வழக்கு

சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த பரிதி இளம்வழுதி மீது கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்ததோடு, 17-5-2001 அன்று கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இது ஜெயலலிதா பதவியேற்ற மூன்றாம் நாளிலே செய்த தூய்மையான ஆட்சி நிர்வாகம்! 23-5-2001 அன்று பரிதியின் ஜாமீன் மனுவிலே உயர்நீதிமன்ற நீதிபதி கூறும்போது, பரிதி மீது புகார் கொடுத்தவரே, அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் போலீசார் பரிதி மீது கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்தது ஏன் என்று தெரியவில்லை என்று தெரிவித்தார். பரிதி இளம்வழுதி மட்டுமல்ல, ஆற்காடு வீராசாமியின் தம்பியை 26-5-2001 அன்றும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமனை 27-5-2001 அன்றும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த புரசை ரெங்கநாதனை 30-5-2001 அன்றும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த தாமரைக்கனி போன்றவர்களையும் கைது செய்தனர்.


ஏன் என்னையே 29-6-2001 அன்று நள்ளிரவில் வீடு புகுந்து படுக்கையறை வரை வந்து கைது செய்த சம்பவமும் நடைபெற்றது. கைது செய்ததோடு விட்டார்களா? அதையொட்டி முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் தாக்கப்பட்டதோடு கைதும் செய்யப்பட்டார்கள். மு.க.ஸ்டாலினை கைது செய்து மதுரை சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றனர். மதுரையில் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், மு.க.அழகிரி போன்றவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள். இவையெல்லாம் ஜெயலலிதாவின் தூய்மையான ஆட்சிக்கான சான்றுகள்!


வளர்ப்பு மகன் கைது

30-5-2001 தேதிய "இந்தியன் எக்ஸ்பிரஸ்'' "பழி வாங்கும் நாடகம், இரண்டாம் கட்டம்'' என்ற தலைப்புடனும், "போயஸ் தோட்டத்தை விட தமிழ்நாடு பெரியது என்பதை எப்போது ஜெயா உணரப்போகிறார்?'' என்ற துணைத் தலைப்புடனும் தலையங்கமே எழுதியது. அந்தப் பழைய பத்திரிகைகளையெல்லாம் வாங்கி இப்போது ஜெயலலிதா படிக்கலாமே?


11-6-2001 அன்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என்று கூறப்பட்ட சுதாகரனையே போலீசார் கைது செய்தனர். அதைப்பற்றி "தி பயனீர்'' ஏடு "பத்ரகாளியாக மாறி வஞ்சம் தீர்க்கும் ஆத்திரத்துடன் செயல்பட்டு வரும் ஜெயலலிதா'' என்ற தலைப்பில் கட்டுரை தீட்டியது. அதே ஜுன் திங்களில் என் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டபோது- தற்போது ஜெயலலிதாவின் தூதராக இருந்து கொண்டு அவரை விழுந்து விழுந்து ஆதரிக்கும் "துக்ளக்'' - 27-6-2001 இதழில் "கருணாநிதியை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே இந்தப் பிரச்சினை இந்த வகையில் கையாளப்படுகிறது என்ற சந்தேகத்திற்கு இடம் உண்டு. இம்மாதிரி விஷயத்தில் காட்டப்பட வேண்டிய பொறுப்புணர்வுமிக்க அணுகுமுறையை இந்த அரசு காட்டவில்லை. இது நல்லதல்ல'' என்று எழுதியிருந்தது.


சாலைப்பணியாளர்கள் கைது

தூய்மையான ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக ஜெயலலிதா 2002-ம் ஆண்டில் எந்த காரணமும் இல்லாமல் பத்தாயிரம் சாலைப்பணியாளர்களை இரவோடு இரவாக பணி நீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பினார். இதனை எதிர்த்து சாலைப்பணியாளர்கள் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், ``பணி நீக்கம் செய்தது சட்ட விரோதமானது.


அந்த உத்தரவு செல்லாது. அதை ரத்து செய்கிறோம். அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. கடந்த அரசு மக்கள் நலத்திட்டங்கள் படி வேலை வழங்கியது. அதை இந்த அரசு ரத்து செய்தது தவறானது. ஒரு அரசு நல்ல வேலை வாய்ப்பு நிறுவனமாகத் திகழ வேண்டுமே தவிர, இது போல செயல்படக்கூடாது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்றெல்லாம் தீர்ப்பு கூறப்பட்டது.


நள்ளிரவில் கைது

"தி ஸ்டேட்ஸ்மேன்'' ஆங்கில நாளேடு எழுதிய தலையங்கத்தில், "தமிழக சட்டமன்ற தி.மு.கழக உறுப்பினர்களில் ஒருவரும், இரண்டு முறை சென்னை மாநகர மேயராக இருந்தவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகளின் மீது நள்ளிரவிலே கைது செய்ததின் மூலம், உச்சநீதிமன்றம் 1994-ம் ஆண்டிலும், 1997-ம் ஆண்டிலும் முறையே ஜோகிந்தர் குமார் வழக்கிலும், டி.கே.பாசு வழக்கிலும் கைது செய்வதற்காக வழங்கிய விதிமுறைகளையெல்லாம் எந்த அளவிற்கு மதிக்கவில்லை என்பதை மீண்டும் ஒரு முறை அ.தி.மு.க. அரசாங்கம் செய்து காட்டியிருக்கின்றது. மு.க.ஸ்டாலினின் தந்தை மு.கருணாநிதி இரண்டாண்டுகளுக்கு முன்பு சாதாரண குற்றச்சாட்டுகளின் பேரில் இதைப்போலவே நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது, எதிர்காலத்தில் அரசியல் சட்டக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் வேண்டுமென்றே தகராறினை உருவாக்கும் இதுபோன்ற எண்ணத்தைத் தவிர்க்க வேண்டுமென்று மத்திய அரசின் உள்துறை, மாநில அரசினை எச்சரித்தது.


எந்த காரணத்தை முன்னிட்டும் இது போன்ற துரதிருஷ்டவசமான செயல்களில் மற்றொரு முறை ஈடுபடாத அளவிற்கு மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் மத்திய அரசு அப்போது தெரிவித்திருந்தது. 2001-ம் ஆண்டு மீண்டும் பதவியேற்ற நாள் முதல் ஜெயலலிதாவின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைகளே அதன் செயல்பாடுகளாக உள்ளன'' என்று எழுதியிருந்தது.


நக்கீரன் கோபால்

பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை பொடா சட்டத்தின்கீழ் கைது செய்ததோடு, அவருடைய மாமனார் ஆர்.எஸ்.பாண்டியனை 6-7-2003 அன்று அழைத்துச் சென்றபோது கொடூரமாக மிரட்டியதின் காரணமாக அவர் தூக்குப்போட்டுக்கொண்டு இறந்தே போனார். இதுதான் ஜெயாவின் தூய்மையான ஆட்சிக்கு உதாரணமா?


தமிழகத் தணிக்கைத் துறை அதிகாரி தீத்தன் 31-7-2004 அன்று அ.தி.மு.க. அரசின் தவறான அணுகுமுறையால் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்று அறிக்கை கொடுத்தார் என்பதற்காக- அந்தத் தணிக்கைத் துறை அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வழக்குத் தொடுத்ததோடு, அவருக்கு எதிராக ஏடுகளில் எல்லாம் முழுப் பக்க விளம்பரங்களும் தரப்பட்டன. அந்த ஜெயலலிதாதான் இப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தணிக்கைத் துறை அதிகாரி கொடுத்த அறிக்கையை தலையிலே தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்.


இலவச மின்சாரம் ரத்து

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த எம்.கே.பாலன் சென்னையில் 30-12-2001 அன்று கடத்திச் செல்லப்பட்டவர் பின்னர் கண்டுபிடிக்கப்படவே இல்லை. 2003-ம் ஆண்டு மார்ச் திங்களில் ஜெயலலிதா அரசு மின் கட்டணங்களை சுமார் 1400 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தியது. தி.மு.கழக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை அ.தி.மு.க. அரசு ரத்து செய்தது.

7-5-2002 அன்று "பிளாஸ்டிக்'' பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து சட்டப்பேரவையில் ஒரு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. 30-1-2003 அன்று இந்த சட்ட முன்வடிவு அ.தி.மு.க. அரசினராலேயே திரும்பப் பெறப்பட்டது. இடையில் என்ன நடந்தது? தூய்மையான ஆட்சிக்குத்தான் வெளிச்சம்!


2003-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற அரசு அலுவலர், ஆசிரியர் போராட்டம் ஜெயாவின் தூய்மையான ஆட்சி நிர்வாகத்திற்கு மற்றும் ஓர் சான்றாகும். அரசு ஊழியர்களை அவர்களுடைய வீடுகளுக்கே சென்று நள்ளிரவில் போலீசார் கைது செய்த கொடுமையும் அப்போது நடைபெற்றது. சுமார் 2 லட்சம் அரசு அலுவலர்கள் தங்கள் நிலைக்கு விளக்கமளிக்க வாய்ப்பு அளிக்கப்படாமலே வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். அது குறித்த வழக்கிலே என்ன தீர்ப்பு வருமோ என்றுகூடக் காத்திருக்காமல், புதிதாக 15,500 பேரை பணி நியமனம் செய்தார்கள். வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று, பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு அலுவலர்களை மீண்டும் பணியிலே அமர்த்த நீதிபதி உத்தரவிட்டார்.


மதமாற்ற தடை சட்டம்

2002-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் வாரத்தில் ஜெயலலிதா அரசு மற்றுமோர் தூய்மையான நிர்வாகத்திற்கு உதாரணமாக, மதம் மாறுவதைத் தடை செய்து அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அதைக் கண்டித்து தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தும் ஜெயா கேட்கவில்லை. 2003-ம் ஆண்டு ஜுன் திங்கள் முதல் வாரத்தில் போப் ஆண்டவரே அதனைக் கண்டித்தார். அதுபற்றிகூட ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், "இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் நிறைவேற்றும் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ போப்புக்கு எந்த விதமான அதிகாரமும் கிடையாது, உரிமையும் கிடையாது'' என்றார். இந்தச் செய்தியைக் கூட கன்னியாகுமரி மாவட்ட கிறித்தவர்கள் சிலர் மறந்து விட்டது தான் ஆச்சரியத்திலும் ஆச்சர்யம்!


திரைப்படத் துறையிலும் ஜெயலலிதாவின் தூய்மையான நிர்வாகம் குறுக்கிடாமல் இல்லை. 2003-ம் ஆண்டு திரைப்படத் துறையினர் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியிருந்த நேரத்தில் ஜெயா ஆட்சியில் படப்பிடிப்புக் கட்டணங்கள் எல்லாம் 25 மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டது.


ஜெயலலிதா தனது ஒவ்வொரு அறிக்கையிலும் இந்த ஆட்சியிலே மணல் கொள்ளை, விலை உயர்வு என்றெல்லாம் எழுதத் தவறுவதில்லை.


பெங்களூர் நீதிமன்றம்

அவருடைய தூய்மையான ஆட்சியிலே மணல் கொள்ளை பற்றி 4-5-2003 தேதிய "கல்கி'' தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்த ஒரு பகுதி இதோ:- "நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருந்தே தீரும் என்பதற்கு மணல் குவாரி காண்டிராக்ட் நிதர்சன எடுத்துக்காட்டு! அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில நாட்களுக்குள்ளேயே ஆற்று மணல் விலை கணிசமாக உயர்ந்தது. ஏன் இந்தத் திடீர் விலை உயர்வு என்று விசாரித்த போது, அதெல்லாம் கண்டுக்காதீங்க, தேவையில்லாமல் தலையை நுழைச்சா, மீண்டு வருமா சந்தேகம் தான் என்ற பதிலே கிடைத்தது. அதற்கேற்பத்தான் இன்று, தட்டிக் கேட்கப்போன ஓர் அதிகாரி, மணல் லாரியாலேயே இடித்துத் தள்ளப்பட்டு பரிதாபமாக உயிர் துறந்திருக்கிறார். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி இவர் மட்டுமல்ல, இவருக்கு முன்னும் பலர் இருந்திருக்கிறார்கள். மணல் குவாரியில் இறங்கிய காண்டிராக்டர்களுக்கு இவ்வளவு துணிவு எங்கிருந்து வந்தது? ஒரு லாரி லோடுக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து வாங்கப்படும் லஞ்சப் பணம்தான் இத்தகைய துணிவைத் தர முடியும். அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியுள்ள லஞ்ச ஊழலும், அதன் நேரடி விளைவான அரசியல் தலையீடும் நீக்கப்பட்டாலன்றி சண்முகசுந்தரம் போன்ற அரசு அதிகாரிகள் பலரை நாம் பரிதாபமாகப் பலி கொடுக்கத்தான் நேரும்''- ஜெயலலிதாவின் தூய்மையான ஐந்தாண்டு கால ஆட்சிக்கு இந்த ஒரு உதாரணம் போதாதா?

இந்த பட்டியலை இத்துடன் நிறுத்திவிடுகிறேன். ஜெயலலிதா 2001-2006-ம் ஆண்டு தூய்மையான நிர்வாகம் நடத்தியதாகவும், அதனால்தான் அவர் மீது வழக்குப் போடவில்லை என்றும் அறிக்கையில் எழுதியிருந்த காரணத்தால் இத்தனை விளக்கங்களையும் அளித்துள்ளேன். 1991-1996-ம் ஆண்டுகளில் அவர் ஆட்சியிலே இருந்த போது நடத்திய ஊழல்களுக்காக போடப்பட்ட வழக்குகளே பெங்களூர் போன்ற சிறப்பு நீதிமன்றங்களில் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கையில் 2001-2006-ம் ஆண்டு நடைபெற்றவைகளுக்காக வழக்கு என்றால், அது எப்போதுதான் முடியுமோ?

இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

Tuesday, November 16, 2010

ஊழலின் ஊற்றுக்கண் ஜெயலலிதா


இன்று மத்திய அமைச்சர் ராஜா விவகாரத்தில் எவ்வளவு அரசியல் ஆதாயம் தேடமுடியுமோ அவ்வளவு ஆதாயம் தேட முயற்ச்சிக்கும் வாய்த்த ராணிக்கு நியாபக மறதி அதிகம் போலும், தான் செய்த ஊழல்கள் எல்லாம் தமிழக மக்கள் மறந்து போயிருப்பார்கள் என்ற எண்ணமோ?

இந்தம்மா சினிமாவில் சான்சு இல்லாததால் அரசியலில் வந்து ஏழைகளின் நிலத்தை அபகரித்தார், பல இடங்களில் பங்களாக்கள், முந்திரி தோட்டம், எஸ்டேட், லண்டனில் ஒரு நட்சத்திர ஹோட்டல், சசிகலாவின் உறவு மகனின் தடால் புடா பல ஆயிரம் கோடிகளில் நடத்திய யாருமே கண்டிராத (உழலில் கொள்ளையடித்த பணத்தில்) சென்னையில் அலங்கார கல்யாணம் ......

ஊழல் என்றால் என்னவென்று அறியாத உத்தமி தான் இந்த ஜெயலலிதா..... போட்ட கையெழுத்தையே நான் போடவில்லை என்று அந்தர் பல்டியடித்த வாய்த்த ராணி இன்று நரி போல் ஊளை இடுவதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.....

நீ நீதிபதி கண்டித்தும் எனது கையெழுத்து இல்லை என்று சாதித்தவர், நீ சொல்ல என்ன தகுதி உள்ளது என்னமோ காந்தி அவதாரம் போன்று சொல்கிறாய் ஊழலின் பொக்கிஷம் நீ உனது பழைய நாட்களை எண்ணிப்பார்....

இழப்புக்கும், ஊழலுக்கும் வித்யாசம் தெரியாத நீயெல்லாம் மனித பிறவி.....

ஜனாதிபதிக்கு தந்தி அனுப்ப சொல்லும் உனக்கு கூடவே தமிழக மக்களை இன்னொரு தந்தியும் ஜனாதிபதிக்கு அனுப்ப சொல்ல வேண்டும். அது என்னவென்றால், எதற்காக என்றால், தமிழகத்தில் ஜெயலலிதா என்பவர் அளவுக்கு அதிகமாக சொத்துகளை வாங்கிய வழக்கு ஒன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது, குற்றவாளி ஜெயலலிதா என்பவர் வாய்தா வாங்கியே பன்னிரண்டு வருடங்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார். ஆகவே தமிழகத்தின் நலன் கருதி அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தந்தி அனுப்ப சொல்லுங்க அம்மா. அதே போல ஜெயலலிதா என்பவர் வெளிநாட்டில் இருந்து காசோலையாக பிறந்தநாள் பரிசு அந்நிய செலாவணி மோசடி வழக்கிலும் வாய்தா வாங்கி வருகின்றார். அதே போல 1993 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை வருமான வரி, சொத்து வரிகளை இந்த ஜெயலலிதா கட்டாமல் வரி எய்ப்பு செய்த வழக்கு ஒன்றும் இருக்கின்றது, அதிலும் தக்க நடவடிக்கை எடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாண்புமிகு ஜனாதிபதிக்கு தந்தி அனுப்ப சொல்லுங்கள் அம்மா. உங்களுக்கு புண்ணியமாய் போகும்.

நீதி, நேர்மை, தர்மம், வெட்க, மானம், சூடு, சொரணை பற்றி பேச இந்த ஜெயாக்கு என்ன தகுதி இருக்கு. டான்சி ஊழலில் மாட்டி நாடே காரி துப்பினபோதும் பதவியை இறுக பிடித்துகொண்டவர். சோனியாவை மதிக்காத ஜெயா இப்போ போய் காலில் விழுகிறார். தேர்தல் கமிஷன் மீட்டிங் போது டெல்லி மீட்டிங் வளாகத்தில் சோனியாவை சந்திக்க வழியில் காத்து கிடந்தார். இளங்கோவனை தூண்டிவிட்டு DMK உறவை உடைக்க பார்த்து அந்த ஆளே வெளியேறும் நிலையில் திண்டிவனம் ராமமூர்த்தி போல இருக்கிறார்.

Saturday, September 18, 2010

விஜயகாந்துக்கு சில கேள்விகள்



தே.மு.தி.க., சார்பில் நடைபெற்ற முப்பெரும்விழாவில் பேசியதில் இருந்து....

1. எனது விழுப்புரம் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலையை வைக்கவிடாமல் தடுத்து விட்டனர்.

என்னது விழுப்புரம் மாவட்டம் உங்க மாமனார் சீதனமா தந்ததோ? அப்ப விழுப்புரம் மாவட்டம் மட்டும் உனது மாவட்டமா....

2. எனது விருதகிரி படத்தை வெளிவரவிடாமல் பல்வேறு வகையில் இடையூறு செய்கின்றனர்.

என்ன ஒரு சுயநலம்......உனக்கு மக்கள் மேல் அக்கறை இல்லை உனக்கு உனது படம்தான் முக்கியம்......

3. செம்மொழி மாநாட்டால் தமிழக மக்களுக்கு என்ன பயன்?

தெலுங்கனான உனக்கு தமிழின் மீது எப்படி அக்கறை வரும்...... அதுல கேள்வி வேற......கழுதைக்கு தெரியுமா செந்தமிழ் மாநாட்டின் அருமை......

மாநாட்டு மூலமா என்ன மாதிரி பயன் வேண்டும் என்று நினைக்கிறாய்.......

4. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 66 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால், 93 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.

ஆனால் முன்னாள் முதல்வர் ஆட்சியில் வேலை வாய்ப்பு தடை சட்டம் என்று ஓன்று இருந்ததே அப்பொழுது எங்கே சென்றீர்....

5. நான் நினைத்தால் கூட்டணி அமைத்து எத்தனை கோடி வேண்டுமானும் சம்பாதித்திருப்பேன்.

நீங்கள் கட்சி ஆரம்பித்தது அதற்குதானே...... அதுதான் உண்மை..... அடுத்த தேர்தலில் ஜெயிச்சி எதனை கோடி வேண்டுமானாலும் சம்பாதிங்க....... உங்கள் கட்சியின் கொள்கையும் அதுதானோ?

6. இது முப்பெரும் விழா அல்ல; கருணாநிதி ஆட்சிக்கு முடிவு கட்டும் விழா

சரி இந்த நல்லாசி கண்டிப்பாக உனக்கு பிடிக்காது.....உனக்கு ஜெயலலிதா ஆட்ச்தான் பிடிக்கும்........சரி உன் கட்சியின் கொள்கை என்ன?

திரு விஜயகாந்த் அவர்களே, முதலில் அரசியல் பேசுவதற்கு முன்பு உங்களது தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள், தேச தந்தை காந்தியும், பெருந்தலைவர் காமராஜரும் கடைசிவரை தாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்கள், ஆனால் உங்களிடம் அதில் எதுவும் இல்லை, அனைத்து அரசியல் கட்சியையும் குறைசொல்லித்தான் நீங்கள் கட்சி ஆரம்பித்தீர்கள் என்பதை வசதியா மறந்துவிட்டீர்கள், வாரிசு அரசியல் பற்றி பேசும் உங்களுக்கு என்ன தகுதி இருக்குது (சுதிஸ் யாரு, அவனுக்கு ஏது இவ்வளவு பணம் உன் பொண்டாட்டிக்கு என்ன தெரியும் அரசியல பத்தி), கூட்டணியே இல்லை என்ற உங்களுக்கும் இன்று நீங்கள் பேசுவதற்கும் முரண்பாடுகள் நிறைய .உங்களுக்கு என்ன தகுதி இருக்குது என்பதை மேடையில் விளக்குங்கள். தேர்தல் நெருங்க நெருங்க உங்களது பேச்சில் ஏகப்பட்ட முரண்பாடுகள்.

முரண்பாடே உன்பெயர்தான் விஜயகாந்தோ?