Tuesday, March 23, 2010

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்! - ஜெயலலிதா



ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்..... வர வர ஜெயலலிதாவுக்கு ரெம்ப காமெடி வருகிறது. நேற்று பென்னாகரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது சில காமெடி முத்துகளை சிதறவிட்டு சென்றுள்ளார்.


பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட குரும்பட்டியில் அ.தி.மு.க., வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து, டெம்போ டிராவலர் வேனில் அமர்ந்தபடி ஜெயலலிதா பேசியதாவது: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக துவங்கப்படவில்லை.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக துணை முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் கலைஞர் அறிவித்தார். அதன்படி, அந்த திட்டத்திற்கு தேவையான நிதி உதவியை பெறுவதற்காக நான் ஜப்பான் சென்றிருந்தேன். அங்குள்ள வங்கி அதிகாரிகளிடம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை எடுத்துக்கூறினேன்.

அப்போது நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஜப்பான் நாட்டு வங்கி அதிகாரிகள் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு வந்து பார்வையிட்டனர். இதையடுத்து நிதிஉதவி அளிக்கவும் ஒப்புக்கொண்டனர். தொடக்கத்தில் இந்த திட்டத்திற்கு ரூ.1,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு திருத்திய மதிப்பீடாக ரூ.1938 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதைத்தொடர்து தர்மபுரியில் நடந்த விழாவில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் கலைஞர் அடிக்கல் நாட்டினார். அப்போது இருந்து பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. மடம் என்ற கிராமத்தில் இந்த திட்டத்திற்காக பிரமாண்டமான சமநிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு வருகிறது. அங்கு நடைபெறும் பணிகளை நானே தொடங்கி வைத்தேன்.

இந்நிலையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்படவில்லை என்று ஜெயலலிதா அம்மையார் பொய் பிரசாரம் செய்து வருகிறார். மடம் என்ற கிராமத்தில் நடக்கும் பணிகளை அவர் வந்து நேரில் பார்க்க தயாரா? அதற்கான நாள், நேரத்தை அவரே குறிக்கட்டும். நானும் வருகிறேன். அதைவிடுத்து தேர்தலுக்காக, அரசியலுக்காக தவறான செய்தியை சொல்லி உங்கள் தராதரத்தை மேலும் குறைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

சோம்பட்டி என்ற கிராமத்தில் பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறவில்லை என்று கூறுபவர்கள் அதை நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலக தயாராக இருக்கிறேன். அந்த திட்டப்பணிகள் நடப்பது உண்மையானால் அதுபற்றி குறை சொல்பவர்கள் அரசியலைவிட்டு விலக தயாரா? என்று கேட்டார்.

இதற்கான பதிலை ஜெயலலிதாவிடம் இருந்து இன்னும் காணோம். அறிக்கை எழுதி கொடுக்கும் அடிமைகள் விடுமுறையில் சென்றுவிட்டனரோ என்னவோ?

இதில் வேறு பென்னாகரத்தை, 'பொன்' விளையும் நகரமாக மாற்றுவோம் என்று அறிக்கை அறிக்கைநாயகியிடம் இருந்து. தேர்ந்து எடுக்கப் போகும் பென்னாகர சட்டமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் வெறும் பதினான்கு மாதம்தான். அ. தி.மு.க. வேட்பாளருக்கு ஒட்டு அளித்தால் இந்த குறுகிய காலத்திற்குள் பெண்ணாகரத்தை பொன் விளையும் பூமியாக மாற்றுவோம் என்கிறார் அதன் தலைவர். இப்பொழுது அவர் உறுப்பினராக இருக்கும் தொகுதியில் பொன் விளைகிறதா என்ன? இவரின் சட்ட மன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் எல்லாம் பொன் விளைந்துக் கொண்டு இருக்கிறதா?. இவர் இந்த மாநிலத்தின் முதல் அமைச்சராக பத்து ஆண்டுகாலம் இருந்தார். அந்த காலத்தில் எங்கும் பொன் விளைந்ததாக நான் கேள்விப் படவில்லை.

பென்னகர மக்களே இந்தமாதிரி பேச்சைக் கேட்டு ஏமார்ந்து போகதிர்கள். பொன் விளையும் பூமியாக மாற்றுவேன் என்று சொன்னது எதுகைக்காகத்தான். அதை உண்மை என்று எடுத்துக் கொள்ளாதிர்கள். காவிரி உங்கள் ஊருக்குப் பக்கத்தில் ஓடினாலும் இவர் ஆட்சியில் உங்களுடைய குடிநீர் பிரச்னையை தீர்க்கவில்லை. இவர் ஆட்சி காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம். அந்த காலத்தில் எந்த பெரிய தொழிச்சாளைகளும் துவங்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.

ஏன் தமிழ்நாட்டை கொள்ளை அடித்து மொட்டையடித்து போதாதா இன்னும் சுரண்ட வேண்டுமா? உன் ஆட்சியில் எலிக்கறி சாப்பிட்ட மக்கள் வயிறார உணவு சாப்புடுவது பிடிக்கவில்லியா? நீ சொல்லிட்டு சசிகலாவோடு சென்று விடுவாய் உன்னை யார் கேள்வி கேட்பது? அதான் ஆண்டிபட்டி பார்த்தா தெரியவில்லையா ஒரு நன்றி கூட சொல்ல போகாத உன் யோகிதைதை என்ன சொல்லுவது.

கொடநாடு ராணிக்கு மக்களை பற்றி என்ன தெரியும்? சும்மா சவுடால் விட கூடாது. சாத்தான்குளத்தை தேவன் குளமாக மாற்றுவேன் !!! ஆண்டிபட்டியை அரசன்பட்டியாக மாற்றுவேன் !!! நடந்தது என்ன ? ? ?


Friday, March 12, 2010

ஜெயலலிதாவும் அவருடைய அறிக்கையும்



எனது ஆட்சியில் தான் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டம், நினைவு இல்லம் அமைக்கப்பட்டது' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிடபட்ட அறிக்கையில் (யாரோ காசுக்கு எழுதி கொடுத்து) உள்ள முரண்பாடுகள் போலவே அவரது அரசியல் வாழ்கையும்.

அ.தி.மு.க., ஆட்சியிலும் தியாகிகளுக்கு நினைவு மண்டபங்கள் எழுப்பப்பட்டன. வ.உ.சிதம்பரனார் நினைவாக திருநெல்வேலியில் 75 லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டி முடிக்கப் பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், தொரப் பள்ளிக்கு அருகிலுள்ள மோர் னப்பள்ளியில் ராஜாஜிக்கு மணிமண்டபம் அமைக்க ஒரு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத் தில் தீரன் சின்னமலைக்கு மணி மண்டபம் அமைக்க மூன்று எக்டேர் நிலம் 19.67 லட்சம் ரூபாய் செலவில் கையகப்படுத்தப்பட்டது. இரட்டை மலை சீனிவாசனுக்கு நினைவுச் சின்னம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முத்துராமலிங்கத் தேவர் கடைசி காலத்தில் வாழ்ந்த மதுரை, திருநகர் இல்லம் நினைவு இல்லமாக உருவாக்கப்படும் என்று அறிவித்தது ஆகியவை, எனது ஆட்சியில் மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள். (அப்படி என்றால் எதுவுமே நிறைவேற்ற படவில்லை)

ராமசாமி ரெட்டியாருக்கு மணிமண்டபம் அமைக்க, விழுப்புரம் மாவட்டம், ஓமந்தூர் கிராமத்தில் 06.5 எக்டேர் நிலம் எனது ஆட்சியில் கையகப்படுத்தப்பட்டு, 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கருத்துரு தயாரிக்க திட்டமிடப்பட்டது. (சரி இதுவும் நிறைவேற்ற படவில்லை, நல்ல காமெடி! வ.உ.சிதம்பரனார் தவிர யாருக்கும் எதுவும் செய்யப்படவில்லை என்பதை ஒத்துக்கொண்டுள்ளார்)

அம்மாடி, நோக்கு என்ன இதில மட்டும் அக்கறை, நீ பாட்டுக்கும் கொட நாட்டிலே குந்திகிட்டு அறிக்கை விட்டுடறே. நீ அவா கட்டின கட்டடத்திற்கு திறப்பு விழா மட்டும் தானே செய்தீர். கோயம்பேடு பஸ் நிலையம், சென்னை மருத்துவமனை என்ன நம்ம அண்ணா, காமராஜ், ராஜாஜி, எம் ஜி ஆர் என்று எல்லோருக்கும் அவர் தான் நினைவு மண்டபம் கட்டினரும்மா நீங்கள் பேசறது ரொம்ப தப்பு வரலாறு எல்லோருக்கும் தெரியும் புது கதை எல்லாம் சொல்லப்படாது.

எம் ஜி ஆர் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்த நீங்கள் அவருடைய படத்தையே பொது கூட்ட மேடைகளிலே போடவில்லையே. அவருடையே பெயருக்கு எவ்வளவு களங்கம் விளைவித்தீர்கள் என்பது பொது மக்களுக்கு நன்றாகவே தெரியும். இனியும் உங்களை நம்ப மாட்டார்கள்.

முதல்வர் கலைஞர் தியாகிகளுக்கு என்ன என்ன செய்தேன் என்பதில் ஒரு சிலவற்றை பட்டியல் இட்டார். அப்படியே இருந்தாலும் உன்னால் வரலாற்று சின்னம் என்ன நிருவப்பட்டது. இருந்த கண்ணகி சிலையை அகற்றியது தான் உன் சாதனை.

அதிமுக தொண்டர்களே சீக்கிரம் சிந்திபீர்!

அனைத்து அதிமுக எம்எல்ஏக்களே உங்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், உங்கள் தொகுதி 33% சதவீத இட ஒதுக்கீட்டுக்கு பிறகு உங்களில் பலபேருக்கு திரும்பவும் சீட்டு கிடைக்காது, ஆகவே இப்போதே அதாவது ராஜ்ய சபா தேர்தலுக்கு முன்பே திமுக விற்கு சென்றுவிட்டால், உங்களுக்கு மிகவும் லாபம், மேலும் அதிமுக வில் மரியாதை கொஞ்சம் கூட இல்லை, மேலும் ஒருமுறை தேர்தலில் வென்றவர்களுக்கு மறுபடியும் டிக்கெட் கொடுக்கும் வழக்கம் அதிமுகவில் இல்லை, எப்போதுமே புதுமுகங்களுக்கு தான் சீட்,ஆகவே சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நீங்கள் திமுக விற்கு சென்றால், உங்களுக்கு நிச்சயம் எதிர்காலம் இருக்கும்.




Tuesday, March 9, 2010

ஜெயலலிதாவின் வயிறெரிச்சல்


முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனநாயக நெறிமுறைகளை அரசியலிலும், ஆட்சியிலும் கடைபிடித்து வருவதுடன், தமிழக மக்களின் தரம் உயர தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்கள் தீட்டிப் பணியாற்றி மாமன்றத்திற்கு சிறப்பு சேர்த்து வரும் நமது முதல்வரின் உருவப்படத்தை புதிய சட்டசபை வளாகத்திலும், பழைய சட்டசபை வளாகத்திலும் வைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யபட்டது. இதனை தாங்கி கொள்ளமுடியாத ஜெயலலிதா இது சட்டமன்ற மரபுகளுக்கு முரணான செயல் என்று புலம்புகிறார்.

போக்குவரத்து கழகத்துக்கு ஜெ .ஜெயலலிதா என்றும், திரைப்பட நகருக்கு ஜெயலலிதா திரைப்பட நகரம் என்றும், உன்னுடைய அடிமைகள் (அ தி மு க மந்த்ரிகள்) பெயர் வைகவில்ல்லையா?? அப்போ என்னகே போனது மரபுகள்.



அறிக்கை நாயகி, போராட்ட தலைவிக்கு ஒரு ஐடியா - கலைஞரை எதிர்த்து போராட்டம் நடத்த நீங்களும், உங்கள் அ தி மு க கட்சி அடிமைகளும் ஏதாவது மறியல் செய்யுங்கள். அதையும் நம்பி உங்கள் ஐந்து அறிவு படைத்த அ தி மு க கட்சி அடிமைகளும் போஸ்டர் அடித்து ஆட்டம் போடுவார்கள் செய்விங்களா கொடை நாட்டு ராணி.



இப்படியே போனால் இருக்கிற கொஞ்சம் MLAக்கள் கூட திமுக-வை நாடி வந்துவிடுவார்கள்.



முதலவர் விடுத்த அழைப்பை ஏற்று சட்டமன்ற திறப்புவிழாவுக்கு வாருங்கள்.............

Saturday, March 6, 2010

சுனாமியால் சுருட்டபட்ட பாலம் - கலைஞரின் கனிவு



பழையாறு கடலுடன் கலக்கும் பொழிமுகத்தின் இரு கரையிலும் அமைந்துள்ள கடற்கரை கிராமங்கள் கீழமணக்குடி மற்றும் மேல மணக்குடி.

இந்த இரு கிராமத்தை சேர்ந்தவர்களும் ஒரு புறத்தில் இருந்து இன்னொரு புறத்திற்கு செல்ல 21 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும். பழையாற்றின் மீது பாலம் கட்டினால் இப்படி சுற்றி செல்வது குறையும் என்று இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.


இதை ஏற்று 1999-ம் ஆண்டு ரூ.8.47 கோடி செலவில் முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி இங்கு பாலம் கட்டினார். அதன் பின்பு ஏற்பட்ட சுனாமியால் இந்த பாலம் சேதம் அடைந்தது. (பிரமாண்டமாக கட்டபட்ட இந்தப்பாலம் மூன்று பகுதிகளை உடையது அதில் இரண்டு பகுதிகள் மட்டுமே உள்ளது மீதி ஒருபகுதி என்னவாயிற்று என்பது தெரியவில்லை (படத்தில் காணலாம்)

எனவே அங்கு மீண்டும் புதிய பாலம் கட்ட கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முதல்- அமைச்சர் கருணாநிதி அங்கு மீண்டும் பாலம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்க உத்தரவிட்டார்.


அதன்படி ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து வருகிற 16-ந்தேதி அங்கு புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.


சுற்றுலா துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் இந்த தொகுதியில் போட்டியிடும் போது தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். அதன் அடிப்படையிலேயே இந்த மாபெரும் பாலமும் அமைக்கபடுகிறது. இதன் மூலம் குமரி சட்டமன்ற தொகுதி மக்கள் மட்டுமலாமல் அனைத்து மக்களும்பயன்பெறுவார்கள்.


5-வது முறையாக ஆட்சிக்கு வந்த முதல்- அமைச்சர் கருணாநிதி கீழமணக்குடி- மேல மணக்குடி இடையே இணைப்பு பாலம் கட்ட அனுமதிவழங்கியுள்ளார். அங்கு ரூ.21 கோடி செலவில் புதிய பாலம் அமைய உள்ளது. வருகிற 16-ந்தேதி அடிக்கல்நாட்டு விழா நடக்கிறது.


மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். நிகழ்ச்சிக்கு நான் தலைமை தாங்குகிறேன். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.

Monday, March 1, 2010

பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய துணை முதல்வர்




துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 58 வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். செனடாப் சாலையில் உள்ள வீட்டில் அதிகாலையில் 6.30 மணிக்கு எழுந்து புத்தாடை அணிந்தார். பின்னர், குடும்பத்துடன் கோபாலபுரம் வீட்டுக்கு சென்று தந்தையும் முதல்வருமான கருணாநிதி, தாய் தயாளு அம்மாள் ஆகியோரிடம் ஆசி பெற்றார். அங்கிருந்து காலை 7 மணிக்கு தனது வீட்டுக்கு வந்தார். அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் துணை மு தல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கூட்டம் கட்டுக் கடங்காமல் போனதால் போலீசார் அவர்களை வரிசையாக துணை முதல்வருக்கு வாழ்த்துசொல்ல அனுப்பினர்.


வீட்டில் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். அவருக்கு மனைவி துர்கா கேக் ஊட்டினார்.

அப்போது மகன் உதய நிதி, மகள் தாமரை, மருமகன் சபரீஸ்வரன், மருமகள் கிருத்திகா, பேரன் அன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.


பின்னர் ஆயிரம் விளக்கு தி.மு.க. சார்பில் வீட்டு பந்தலில் வைக்கப்பட்டு இருந்த கேக்கை மு.க.ஸ்டாலின் வெட்டினார். அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொண்டர்கள் “தளபதி வாழ்க” என்று கோஷமிட்டனர். புதுச்சேரி முதல்- அமைச்சர் வைத்திலிங்கம், மத்திய மந்திரி நாராயணசாமி, புதுச்சேரி சபாநாயகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

மத்திய மந்திரி மு.க. அழகிரி, கனிமொழி எம்.பி., மு.க. தமிழரசு ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்:    கருணாநிதியிடம் வாழ்த்து
கவர்னர் பர்னாலா, அவரது துணைச் செயலாளர் விவேகானந்தன் மூலம் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை, பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோரும் நேரில் வாழ்த்தினர்.

தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். எனவே, கட்- அவுட், பேனர்கள் வைக்கப்பட வில்லை. கொடி தோரணங்களும் அதிக அளவில் கட்டப்படவில்லை.

வீட்டுக்கு வந்த தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தினார்கள்.

தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்களும், நிர்வாகிகளும் வந்து இருந்த னர். பழங்கள் சீர்வரிசை தட்டுக்களை கொண்டு வந்து கொடுத்தனர்.மேலும் வாழ்த்து தெரி வித்தவர்கள் விவரம் வருமாறு:-

சபாநாயகர் ஆவுடையப்பன், துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, மத்திய மந்திரிகள் ராசா, ஜெகத்ரட்சகன், நெப்போலியன், தயாநிதி மாறன், காந்தி செல்வன், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எ.வ.வேலு, பொங்கலூர் பழனிச்சாமி, தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, பரிதி இளம்வழுதி, மதிவாணன், மைதீன்கான், பூங்கோதை, கீதாஜீவன், தமிழரசி, மேயர் மா.சுப்பிரமணியன்.

சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வி.எஸ்.பாபு, ஜெ.அன் பழகன், திருவள்ளுர் மாவட்ட செயலாளர் சிவாஜி, முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், சற்குண பாண்டியன், செஞ்சி ராமச்சந்திரன், செல்வகணபதி, பொன்னுசாமி, ராதிகாசெல்வி, சுப்புலட்சுமி ஜெகதீசன், இந்திரகுமாரி, முன்னாள் எம்.பி.க்கள் எல். கணேசன், குப்புசாமி, பு.த. இளங்கோவன், எம்.பி.க்கள் சுகவனம், ஜெயத்துரை, கிருஷ்ணசாமி, அசன் முகமது ஜின்னா.

சட்டசபை கொறடா சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் சுதர்சனம், சிவபுண்ணியம், அனிதா ராதாகிருஷ்ணன், தாம்பரம் ராஜா, அப்பாவு, கிருஷ்ணகிரி செங்குட்டுவன், கம்பம் ராமகிருஷ்ணன், யசோதா, விஷ்ணுபிரசாத், விடியல் சேகர், காயத்திரி தேவி, ராணி வெங்கடேசன், சிறுபான்மை நல ஆணைய தலைவர் வின்சென்ட் சின்னதுரை, பேராயர் எஸ்றா சற்குணம், முன்னாள் எம்.எல்.ஏ. சைதை கிட்டு, நிர்வாகிகள் ஆர்.டி. சீதாபதி, ஆலந்தூர் பாரதி, துறைமுகம் காஜா, தொ.மு.ச. பொருளாளர் சிங்கார ரத்தினசபாபதி, பெரம்பூர் பகுதி பொருளாளர் எஸ்.பி. கணேசன், இந்திய முஸ்லிம்லீக் சென்னை மாவட்ட தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், அருந்ததி மக்கள் கட்சி தலைவர் வலசை ரவிச்சந்திரன்.

சென்னை கலெக்டர் ஷோபனா, அதிகாரிகள் தீனபந்து, இறையன்பு, ராஜேந்திரன், முத்துசாமி, காமராஜ், ராஜேஷ் லக்கானி, இளங்கோ, உமாமகேஸ்வரி, ராஜாராமன், ரகுபதி, செல்லமுத்து, ஜேக்கப், முன்னாள் அதிகாரி காசி விசுவநாதன், போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண், கமிஷனர்கள் ராஜேந்திரன், ஜாங்கிட், போலீஸ் அதிகாரிகள் சுனில்குமார், சேஷாயி, ரவி, நடராஜன், ஜார்ஜ், துரைராஜ், சிவனாண்டி, ரத்தினவேல்.

எம்.ஏ.எம்.ராமசாமி, மியாட் மருத்துவமனை இயக்குனர் மோகன்தாஸ், காசிமுத்து மாணிக்கம், சுப.வீரபாண்டியன், என். ஜி.ஓ. சங்க தலைவர் சூரியமூர்த்தி, ஆசிரியர் மன்ற தலைவர் மீனாட்சி சுந்தரம், இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ். நடிகர்கள் ரவிச்சந்திரன், எஸ்.வி.சேகர், தியாகு, சந்திரசேகர், வினாயகா மிஷன் சேர்மன் சண்முகசுந்தரம்.

திருவண்ணாமலை இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் 58 பேர் சீர் வரிசை தட்டுகளுடன் வந்து வாழ்த்தினார்கள்.

அன்பகம் கலை, ஐ.கென்னடி, ரூசோ, சிட்கோ வாசு, வி.எஸ்.ராஜு, கண்ணன், அன்புதுரை, ஆர்.டி. சேகர், வி.எஸ்.ரவி, மதன்மோகன், ஏழுமலை, மகேஷ்குமார், ரங்கநாதன், தெரு வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் அலிமா சம்சுகனி உள்பட ஏராளமானோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, அமைச்சர் அன்பழகன், மத்திய மந்திரி ஜி.கே.வாசன், நடிகர் ரஜினி காந்த், பா.ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல.கணேசன் ஆகியோர் டெலிபோனில் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பல்லாவரம் மோகன், காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் முன்னிலையில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க. வில் சேர்ந்தார்.

இது போல் விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் முருகேசனும், மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து இன்று தி.மு.க.வில் இணைந்தார்.