Saturday, March 6, 2010

சுனாமியால் சுருட்டபட்ட பாலம் - கலைஞரின் கனிவு



பழையாறு கடலுடன் கலக்கும் பொழிமுகத்தின் இரு கரையிலும் அமைந்துள்ள கடற்கரை கிராமங்கள் கீழமணக்குடி மற்றும் மேல மணக்குடி.

இந்த இரு கிராமத்தை சேர்ந்தவர்களும் ஒரு புறத்தில் இருந்து இன்னொரு புறத்திற்கு செல்ல 21 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும். பழையாற்றின் மீது பாலம் கட்டினால் இப்படி சுற்றி செல்வது குறையும் என்று இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.


இதை ஏற்று 1999-ம் ஆண்டு ரூ.8.47 கோடி செலவில் முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி இங்கு பாலம் கட்டினார். அதன் பின்பு ஏற்பட்ட சுனாமியால் இந்த பாலம் சேதம் அடைந்தது. (பிரமாண்டமாக கட்டபட்ட இந்தப்பாலம் மூன்று பகுதிகளை உடையது அதில் இரண்டு பகுதிகள் மட்டுமே உள்ளது மீதி ஒருபகுதி என்னவாயிற்று என்பது தெரியவில்லை (படத்தில் காணலாம்)

எனவே அங்கு மீண்டும் புதிய பாலம் கட்ட கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முதல்- அமைச்சர் கருணாநிதி அங்கு மீண்டும் பாலம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்க உத்தரவிட்டார்.


அதன்படி ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து வருகிற 16-ந்தேதி அங்கு புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.


சுற்றுலா துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் இந்த தொகுதியில் போட்டியிடும் போது தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். அதன் அடிப்படையிலேயே இந்த மாபெரும் பாலமும் அமைக்கபடுகிறது. இதன் மூலம் குமரி சட்டமன்ற தொகுதி மக்கள் மட்டுமலாமல் அனைத்து மக்களும்பயன்பெறுவார்கள்.


5-வது முறையாக ஆட்சிக்கு வந்த முதல்- அமைச்சர் கருணாநிதி கீழமணக்குடி- மேல மணக்குடி இடையே இணைப்பு பாலம் கட்ட அனுமதிவழங்கியுள்ளார். அங்கு ரூ.21 கோடி செலவில் புதிய பாலம் அமைய உள்ளது. வருகிற 16-ந்தேதி அடிக்கல்நாட்டு விழா நடக்கிறது.


மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். நிகழ்ச்சிக்கு நான் தலைமை தாங்குகிறேன். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.

No comments:

Post a Comment