Wednesday, December 29, 2010

ஜெயலலிதா ஆட்சி செய்த லட்சணம் - முதல்வர் கலைஞரின் பதில்



தனது ஆட்சிக்காலத்தில் ஒரு சிறு தவறு கூட நடைபெறாத தூய்மையான ஆட்சி நடத்தியதால் தான், தன் மீது பொய் வழக்கு போட ஒன்றுமே கிடைக்கவில்லை என ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைக்கு, தமிழக முதல்வர் கருணாநிதி பதில் தூய்மையான ஆட்சி நடத்தியது ஜெயயலிதாவா? என தொடங்கும் இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது


ஜெயலலிதாவின் அறிக்கைகள் சிலவற்றைப் படிக்கும்போது, "அவருக்கு ஏன் நீங்கள் பதில் சொல்கிறீர்கள்'' என்று கூட சிலபேர் என்னைக் கேட்கிறார்கள். கேட்பவர்கள் எழுதத் தெரிந்தவர்கள்தான்! ஆனால் அவர்களே இது ஏன் வீண் வேலை என்று கருதுகிறார்கள் போலும்! அதனால்தான் என்னைக் கேட்கிறார்கள்; அது எப்படியோ போகட்டும்! ஜெயலலிதாவின் அறிக்கைகள் சிலவற்றைப் படிக்கும்போது சிரிப்பை அடக்கிக்கொள்ள முடிவதில்லை.


இதற்கோர் உதாரணம் கூறட்டுமா? ஜெயலலிதாவின் 26-ந் தேதிய அறிக்கையில் "2001-2006 ஆட்சி காலத்தில் ஒரு சிறு தவறு கூட நடைபெறாத தூய்மையான ஆட்சியை நான் நடத்தியதால் என் மீது பொய் வழக்குப் போட கருணாநிதிக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை'' என்ற வாசகங்களைப் படித்தபோது சிரிப்பு வராமல் என்ன செய்யும்? ஒரு சிறு தவறுகூட நடைபெறாத தூய்மையான ஆட்சியாம்! அதைப் படிக்கின்ற- அ.தி.மு.க. ஆட்சியிலே பணியிழந்த மக்கள் நலப்பணியாளர்களும்- சாலைப்பணியாளர்களும்- பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு அலுவலர்களும்- எஸ்மா, டெஸ்மா சட்டங்களுக்கு ஆளான தொழிலாளர்களும் தங்களுக்குள் என்ன நினைத்துக்கொள்வார்கள்!


கம்னிஸ்டு கட்சிகள் போட்டி

தூய்மையான ஆட்சி நடத்தியிருக்கிறார்களாம்- அதனால்தான் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியினரும், இந்திய கம்ïனிஸ்டு கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு ஜெயலலிதா அணியிலே "நான் முந்தி'' - "நீ முந்தி'' என்று யார் அவருக்கு "முந்தி''யாக இருப்பது என்று பந்தயம் கட்டிக்கொண்டு அணி திரளுகிறார்கள் போலும்!


முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றுக்கொண்டதே தூய்மையற்ற ஆட்சிக்கு உதாரணமாக அமைந்தது. அவர் பதவியேற்றது பற்றி 15-5-2001 தேதிய "இந்து'' தனது தலையங்கத்தில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து உறுதியாக தடை செய்யப்பட்ட ஒருவர் (ஜெயலலிதா) முதல்-அமைச்சராவது இதுவே முதல் முறை என்றும், சட்டப்படி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் இத்தகைய பதவியில் அமர்வதும் இதுவே முதல்முறை என்றும், இருநிலைகளிலும் அவருடைய செயல் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வையே மீறுவதோடு சட்ட ரீதியாகவும், நியாயப்பூர்வமாகவும் வேதனை அளிக்கும் வினாக்களை எழுப்பியுள்ளது என்றும் எழுதியது.


அன்றைய ஆனந்தவிகடன் வார இதழ் தனது தலையங்கத்தில், தன்மீதுள்ள களங்கத்தை சட்டரீதியாக துடைத்தெறிந்த பிறகே முதல்வர் பதவியில் ஜெயலலிதா அமர வேண்டும், அதுதான் கண்ணியமும், கவுரவமுமிக்க அந்தப் பதவிக்கும் அழகு, அவருக்கும் அழகு என்று எழுதியது.


இடைக்கால முதல்-அமைச்சர்

ஜெயலலிதாவை முதல்-அமைச்சராக நியமித்தது சட்டப்படி செல்லாது என்று தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் 21-9-2001 அன்று உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.பி.பரூச்சா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் வழங்கிய ஒருமனதான தீர்ப்பில் "தமிழக முதல்வராக ஜெயலலிதா நியமனம் செய்யப்பட்டது செல்லாது. அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இனியும் அவர் முதல்-அமைச்சராக நீடிக்க முடியாது'' என்று கூறிய பிறகுதான்; ஜெயலலிதாவின் வழக்கறிஞரான கே.கே.வேணுகோபால், நீதிபதிகளிடம் மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு சில நாட்கள் அவகாசம் தேவையென்று கேட்டார். அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி, "முதல்-அமைச்சர் இறந்தால் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறதே; இவ்வளவு பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் ஒரு கட்சி எந்த நேரத்திலும் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாமே'' என்று கூறினார்கள். இதுவும் ஒரு தூய்மையான ஆட்சிக்கு கொடுக்கப்பட்ட சான்றிதழ்தானே? இதற்கு பிறகுதான் இடைக்கால முதலமைச்சர் பதவி பன்னீருக்கு கிடைத்தது!


கொலை முயற்சி வழக்கு

சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த பரிதி இளம்வழுதி மீது கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்ததோடு, 17-5-2001 அன்று கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இது ஜெயலலிதா பதவியேற்ற மூன்றாம் நாளிலே செய்த தூய்மையான ஆட்சி நிர்வாகம்! 23-5-2001 அன்று பரிதியின் ஜாமீன் மனுவிலே உயர்நீதிமன்ற நீதிபதி கூறும்போது, பரிதி மீது புகார் கொடுத்தவரே, அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் போலீசார் பரிதி மீது கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்தது ஏன் என்று தெரியவில்லை என்று தெரிவித்தார். பரிதி இளம்வழுதி மட்டுமல்ல, ஆற்காடு வீராசாமியின் தம்பியை 26-5-2001 அன்றும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமனை 27-5-2001 அன்றும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த புரசை ரெங்கநாதனை 30-5-2001 அன்றும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த தாமரைக்கனி போன்றவர்களையும் கைது செய்தனர்.


ஏன் என்னையே 29-6-2001 அன்று நள்ளிரவில் வீடு புகுந்து படுக்கையறை வரை வந்து கைது செய்த சம்பவமும் நடைபெற்றது. கைது செய்ததோடு விட்டார்களா? அதையொட்டி முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் தாக்கப்பட்டதோடு கைதும் செய்யப்பட்டார்கள். மு.க.ஸ்டாலினை கைது செய்து மதுரை சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றனர். மதுரையில் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், மு.க.அழகிரி போன்றவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள். இவையெல்லாம் ஜெயலலிதாவின் தூய்மையான ஆட்சிக்கான சான்றுகள்!


வளர்ப்பு மகன் கைது

30-5-2001 தேதிய "இந்தியன் எக்ஸ்பிரஸ்'' "பழி வாங்கும் நாடகம், இரண்டாம் கட்டம்'' என்ற தலைப்புடனும், "போயஸ் தோட்டத்தை விட தமிழ்நாடு பெரியது என்பதை எப்போது ஜெயா உணரப்போகிறார்?'' என்ற துணைத் தலைப்புடனும் தலையங்கமே எழுதியது. அந்தப் பழைய பத்திரிகைகளையெல்லாம் வாங்கி இப்போது ஜெயலலிதா படிக்கலாமே?


11-6-2001 அன்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என்று கூறப்பட்ட சுதாகரனையே போலீசார் கைது செய்தனர். அதைப்பற்றி "தி பயனீர்'' ஏடு "பத்ரகாளியாக மாறி வஞ்சம் தீர்க்கும் ஆத்திரத்துடன் செயல்பட்டு வரும் ஜெயலலிதா'' என்ற தலைப்பில் கட்டுரை தீட்டியது. அதே ஜுன் திங்களில் என் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டபோது- தற்போது ஜெயலலிதாவின் தூதராக இருந்து கொண்டு அவரை விழுந்து விழுந்து ஆதரிக்கும் "துக்ளக்'' - 27-6-2001 இதழில் "கருணாநிதியை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே இந்தப் பிரச்சினை இந்த வகையில் கையாளப்படுகிறது என்ற சந்தேகத்திற்கு இடம் உண்டு. இம்மாதிரி விஷயத்தில் காட்டப்பட வேண்டிய பொறுப்புணர்வுமிக்க அணுகுமுறையை இந்த அரசு காட்டவில்லை. இது நல்லதல்ல'' என்று எழுதியிருந்தது.


சாலைப்பணியாளர்கள் கைது

தூய்மையான ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக ஜெயலலிதா 2002-ம் ஆண்டில் எந்த காரணமும் இல்லாமல் பத்தாயிரம் சாலைப்பணியாளர்களை இரவோடு இரவாக பணி நீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பினார். இதனை எதிர்த்து சாலைப்பணியாளர்கள் உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், ``பணி நீக்கம் செய்தது சட்ட விரோதமானது.


அந்த உத்தரவு செல்லாது. அதை ரத்து செய்கிறோம். அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. கடந்த அரசு மக்கள் நலத்திட்டங்கள் படி வேலை வழங்கியது. அதை இந்த அரசு ரத்து செய்தது தவறானது. ஒரு அரசு நல்ல வேலை வாய்ப்பு நிறுவனமாகத் திகழ வேண்டுமே தவிர, இது போல செயல்படக்கூடாது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்றெல்லாம் தீர்ப்பு கூறப்பட்டது.


நள்ளிரவில் கைது

"தி ஸ்டேட்ஸ்மேன்'' ஆங்கில நாளேடு எழுதிய தலையங்கத்தில், "தமிழக சட்டமன்ற தி.மு.கழக உறுப்பினர்களில் ஒருவரும், இரண்டு முறை சென்னை மாநகர மேயராக இருந்தவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகளின் மீது நள்ளிரவிலே கைது செய்ததின் மூலம், உச்சநீதிமன்றம் 1994-ம் ஆண்டிலும், 1997-ம் ஆண்டிலும் முறையே ஜோகிந்தர் குமார் வழக்கிலும், டி.கே.பாசு வழக்கிலும் கைது செய்வதற்காக வழங்கிய விதிமுறைகளையெல்லாம் எந்த அளவிற்கு மதிக்கவில்லை என்பதை மீண்டும் ஒரு முறை அ.தி.மு.க. அரசாங்கம் செய்து காட்டியிருக்கின்றது. மு.க.ஸ்டாலினின் தந்தை மு.கருணாநிதி இரண்டாண்டுகளுக்கு முன்பு சாதாரண குற்றச்சாட்டுகளின் பேரில் இதைப்போலவே நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது, எதிர்காலத்தில் அரசியல் சட்டக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் வேண்டுமென்றே தகராறினை உருவாக்கும் இதுபோன்ற எண்ணத்தைத் தவிர்க்க வேண்டுமென்று மத்திய அரசின் உள்துறை, மாநில அரசினை எச்சரித்தது.


எந்த காரணத்தை முன்னிட்டும் இது போன்ற துரதிருஷ்டவசமான செயல்களில் மற்றொரு முறை ஈடுபடாத அளவிற்கு மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் மத்திய அரசு அப்போது தெரிவித்திருந்தது. 2001-ம் ஆண்டு மீண்டும் பதவியேற்ற நாள் முதல் ஜெயலலிதாவின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைகளே அதன் செயல்பாடுகளாக உள்ளன'' என்று எழுதியிருந்தது.


நக்கீரன் கோபால்

பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை பொடா சட்டத்தின்கீழ் கைது செய்ததோடு, அவருடைய மாமனார் ஆர்.எஸ்.பாண்டியனை 6-7-2003 அன்று அழைத்துச் சென்றபோது கொடூரமாக மிரட்டியதின் காரணமாக அவர் தூக்குப்போட்டுக்கொண்டு இறந்தே போனார். இதுதான் ஜெயாவின் தூய்மையான ஆட்சிக்கு உதாரணமா?


தமிழகத் தணிக்கைத் துறை அதிகாரி தீத்தன் 31-7-2004 அன்று அ.தி.மு.க. அரசின் தவறான அணுகுமுறையால் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்று அறிக்கை கொடுத்தார் என்பதற்காக- அந்தத் தணிக்கைத் துறை அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வழக்குத் தொடுத்ததோடு, அவருக்கு எதிராக ஏடுகளில் எல்லாம் முழுப் பக்க விளம்பரங்களும் தரப்பட்டன. அந்த ஜெயலலிதாதான் இப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தணிக்கைத் துறை அதிகாரி கொடுத்த அறிக்கையை தலையிலே தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்.


இலவச மின்சாரம் ரத்து

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த எம்.கே.பாலன் சென்னையில் 30-12-2001 அன்று கடத்திச் செல்லப்பட்டவர் பின்னர் கண்டுபிடிக்கப்படவே இல்லை. 2003-ம் ஆண்டு மார்ச் திங்களில் ஜெயலலிதா அரசு மின் கட்டணங்களை சுமார் 1400 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தியது. தி.மு.கழக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை அ.தி.மு.க. அரசு ரத்து செய்தது.

7-5-2002 அன்று "பிளாஸ்டிக்'' பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து சட்டப்பேரவையில் ஒரு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. 30-1-2003 அன்று இந்த சட்ட முன்வடிவு அ.தி.மு.க. அரசினராலேயே திரும்பப் பெறப்பட்டது. இடையில் என்ன நடந்தது? தூய்மையான ஆட்சிக்குத்தான் வெளிச்சம்!


2003-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற அரசு அலுவலர், ஆசிரியர் போராட்டம் ஜெயாவின் தூய்மையான ஆட்சி நிர்வாகத்திற்கு மற்றும் ஓர் சான்றாகும். அரசு ஊழியர்களை அவர்களுடைய வீடுகளுக்கே சென்று நள்ளிரவில் போலீசார் கைது செய்த கொடுமையும் அப்போது நடைபெற்றது. சுமார் 2 லட்சம் அரசு அலுவலர்கள் தங்கள் நிலைக்கு விளக்கமளிக்க வாய்ப்பு அளிக்கப்படாமலே வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். அது குறித்த வழக்கிலே என்ன தீர்ப்பு வருமோ என்றுகூடக் காத்திருக்காமல், புதிதாக 15,500 பேரை பணி நியமனம் செய்தார்கள். வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று, பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு அலுவலர்களை மீண்டும் பணியிலே அமர்த்த நீதிபதி உத்தரவிட்டார்.


மதமாற்ற தடை சட்டம்

2002-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் வாரத்தில் ஜெயலலிதா அரசு மற்றுமோர் தூய்மையான நிர்வாகத்திற்கு உதாரணமாக, மதம் மாறுவதைத் தடை செய்து அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அதைக் கண்டித்து தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தும் ஜெயா கேட்கவில்லை. 2003-ம் ஆண்டு ஜுன் திங்கள் முதல் வாரத்தில் போப் ஆண்டவரே அதனைக் கண்டித்தார். அதுபற்றிகூட ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், "இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் நிறைவேற்றும் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ போப்புக்கு எந்த விதமான அதிகாரமும் கிடையாது, உரிமையும் கிடையாது'' என்றார். இந்தச் செய்தியைக் கூட கன்னியாகுமரி மாவட்ட கிறித்தவர்கள் சிலர் மறந்து விட்டது தான் ஆச்சரியத்திலும் ஆச்சர்யம்!


திரைப்படத் துறையிலும் ஜெயலலிதாவின் தூய்மையான நிர்வாகம் குறுக்கிடாமல் இல்லை. 2003-ம் ஆண்டு திரைப்படத் துறையினர் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியிருந்த நேரத்தில் ஜெயா ஆட்சியில் படப்பிடிப்புக் கட்டணங்கள் எல்லாம் 25 மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டது.


ஜெயலலிதா தனது ஒவ்வொரு அறிக்கையிலும் இந்த ஆட்சியிலே மணல் கொள்ளை, விலை உயர்வு என்றெல்லாம் எழுதத் தவறுவதில்லை.


பெங்களூர் நீதிமன்றம்

அவருடைய தூய்மையான ஆட்சியிலே மணல் கொள்ளை பற்றி 4-5-2003 தேதிய "கல்கி'' தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்த ஒரு பகுதி இதோ:- "நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருந்தே தீரும் என்பதற்கு மணல் குவாரி காண்டிராக்ட் நிதர்சன எடுத்துக்காட்டு! அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில நாட்களுக்குள்ளேயே ஆற்று மணல் விலை கணிசமாக உயர்ந்தது. ஏன் இந்தத் திடீர் விலை உயர்வு என்று விசாரித்த போது, அதெல்லாம் கண்டுக்காதீங்க, தேவையில்லாமல் தலையை நுழைச்சா, மீண்டு வருமா சந்தேகம் தான் என்ற பதிலே கிடைத்தது. அதற்கேற்பத்தான் இன்று, தட்டிக் கேட்கப்போன ஓர் அதிகாரி, மணல் லாரியாலேயே இடித்துத் தள்ளப்பட்டு பரிதாபமாக உயிர் துறந்திருக்கிறார். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி இவர் மட்டுமல்ல, இவருக்கு முன்னும் பலர் இருந்திருக்கிறார்கள். மணல் குவாரியில் இறங்கிய காண்டிராக்டர்களுக்கு இவ்வளவு துணிவு எங்கிருந்து வந்தது? ஒரு லாரி லோடுக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து வாங்கப்படும் லஞ்சப் பணம்தான் இத்தகைய துணிவைத் தர முடியும். அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியுள்ள லஞ்ச ஊழலும், அதன் நேரடி விளைவான அரசியல் தலையீடும் நீக்கப்பட்டாலன்றி சண்முகசுந்தரம் போன்ற அரசு அதிகாரிகள் பலரை நாம் பரிதாபமாகப் பலி கொடுக்கத்தான் நேரும்''- ஜெயலலிதாவின் தூய்மையான ஐந்தாண்டு கால ஆட்சிக்கு இந்த ஒரு உதாரணம் போதாதா?

இந்த பட்டியலை இத்துடன் நிறுத்திவிடுகிறேன். ஜெயலலிதா 2001-2006-ம் ஆண்டு தூய்மையான நிர்வாகம் நடத்தியதாகவும், அதனால்தான் அவர் மீது வழக்குப் போடவில்லை என்றும் அறிக்கையில் எழுதியிருந்த காரணத்தால் இத்தனை விளக்கங்களையும் அளித்துள்ளேன். 1991-1996-ம் ஆண்டுகளில் அவர் ஆட்சியிலே இருந்த போது நடத்திய ஊழல்களுக்காக போடப்பட்ட வழக்குகளே பெங்களூர் போன்ற சிறப்பு நீதிமன்றங்களில் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கையில் 2001-2006-ம் ஆண்டு நடைபெற்றவைகளுக்காக வழக்கு என்றால், அது எப்போதுதான் முடியுமோ?

இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

Tuesday, November 16, 2010

ஊழலின் ஊற்றுக்கண் ஜெயலலிதா


இன்று மத்திய அமைச்சர் ராஜா விவகாரத்தில் எவ்வளவு அரசியல் ஆதாயம் தேடமுடியுமோ அவ்வளவு ஆதாயம் தேட முயற்ச்சிக்கும் வாய்த்த ராணிக்கு நியாபக மறதி அதிகம் போலும், தான் செய்த ஊழல்கள் எல்லாம் தமிழக மக்கள் மறந்து போயிருப்பார்கள் என்ற எண்ணமோ?

இந்தம்மா சினிமாவில் சான்சு இல்லாததால் அரசியலில் வந்து ஏழைகளின் நிலத்தை அபகரித்தார், பல இடங்களில் பங்களாக்கள், முந்திரி தோட்டம், எஸ்டேட், லண்டனில் ஒரு நட்சத்திர ஹோட்டல், சசிகலாவின் உறவு மகனின் தடால் புடா பல ஆயிரம் கோடிகளில் நடத்திய யாருமே கண்டிராத (உழலில் கொள்ளையடித்த பணத்தில்) சென்னையில் அலங்கார கல்யாணம் ......

ஊழல் என்றால் என்னவென்று அறியாத உத்தமி தான் இந்த ஜெயலலிதா..... போட்ட கையெழுத்தையே நான் போடவில்லை என்று அந்தர் பல்டியடித்த வாய்த்த ராணி இன்று நரி போல் ஊளை இடுவதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.....

நீ நீதிபதி கண்டித்தும் எனது கையெழுத்து இல்லை என்று சாதித்தவர், நீ சொல்ல என்ன தகுதி உள்ளது என்னமோ காந்தி அவதாரம் போன்று சொல்கிறாய் ஊழலின் பொக்கிஷம் நீ உனது பழைய நாட்களை எண்ணிப்பார்....

இழப்புக்கும், ஊழலுக்கும் வித்யாசம் தெரியாத நீயெல்லாம் மனித பிறவி.....

ஜனாதிபதிக்கு தந்தி அனுப்ப சொல்லும் உனக்கு கூடவே தமிழக மக்களை இன்னொரு தந்தியும் ஜனாதிபதிக்கு அனுப்ப சொல்ல வேண்டும். அது என்னவென்றால், எதற்காக என்றால், தமிழகத்தில் ஜெயலலிதா என்பவர் அளவுக்கு அதிகமாக சொத்துகளை வாங்கிய வழக்கு ஒன்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது, குற்றவாளி ஜெயலலிதா என்பவர் வாய்தா வாங்கியே பன்னிரண்டு வருடங்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார். ஆகவே தமிழகத்தின் நலன் கருதி அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தந்தி அனுப்ப சொல்லுங்க அம்மா. அதே போல ஜெயலலிதா என்பவர் வெளிநாட்டில் இருந்து காசோலையாக பிறந்தநாள் பரிசு அந்நிய செலாவணி மோசடி வழக்கிலும் வாய்தா வாங்கி வருகின்றார். அதே போல 1993 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை வருமான வரி, சொத்து வரிகளை இந்த ஜெயலலிதா கட்டாமல் வரி எய்ப்பு செய்த வழக்கு ஒன்றும் இருக்கின்றது, அதிலும் தக்க நடவடிக்கை எடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாண்புமிகு ஜனாதிபதிக்கு தந்தி அனுப்ப சொல்லுங்கள் அம்மா. உங்களுக்கு புண்ணியமாய் போகும்.

நீதி, நேர்மை, தர்மம், வெட்க, மானம், சூடு, சொரணை பற்றி பேச இந்த ஜெயாக்கு என்ன தகுதி இருக்கு. டான்சி ஊழலில் மாட்டி நாடே காரி துப்பினபோதும் பதவியை இறுக பிடித்துகொண்டவர். சோனியாவை மதிக்காத ஜெயா இப்போ போய் காலில் விழுகிறார். தேர்தல் கமிஷன் மீட்டிங் போது டெல்லி மீட்டிங் வளாகத்தில் சோனியாவை சந்திக்க வழியில் காத்து கிடந்தார். இளங்கோவனை தூண்டிவிட்டு DMK உறவை உடைக்க பார்த்து அந்த ஆளே வெளியேறும் நிலையில் திண்டிவனம் ராமமூர்த்தி போல இருக்கிறார்.

Saturday, September 18, 2010

விஜயகாந்துக்கு சில கேள்விகள்



தே.மு.தி.க., சார்பில் நடைபெற்ற முப்பெரும்விழாவில் பேசியதில் இருந்து....

1. எனது விழுப்புரம் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலையை வைக்கவிடாமல் தடுத்து விட்டனர்.

என்னது விழுப்புரம் மாவட்டம் உங்க மாமனார் சீதனமா தந்ததோ? அப்ப விழுப்புரம் மாவட்டம் மட்டும் உனது மாவட்டமா....

2. எனது விருதகிரி படத்தை வெளிவரவிடாமல் பல்வேறு வகையில் இடையூறு செய்கின்றனர்.

என்ன ஒரு சுயநலம்......உனக்கு மக்கள் மேல் அக்கறை இல்லை உனக்கு உனது படம்தான் முக்கியம்......

3. செம்மொழி மாநாட்டால் தமிழக மக்களுக்கு என்ன பயன்?

தெலுங்கனான உனக்கு தமிழின் மீது எப்படி அக்கறை வரும்...... அதுல கேள்வி வேற......கழுதைக்கு தெரியுமா செந்தமிழ் மாநாட்டின் அருமை......

மாநாட்டு மூலமா என்ன மாதிரி பயன் வேண்டும் என்று நினைக்கிறாய்.......

4. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 66 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால், 93 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.

ஆனால் முன்னாள் முதல்வர் ஆட்சியில் வேலை வாய்ப்பு தடை சட்டம் என்று ஓன்று இருந்ததே அப்பொழுது எங்கே சென்றீர்....

5. நான் நினைத்தால் கூட்டணி அமைத்து எத்தனை கோடி வேண்டுமானும் சம்பாதித்திருப்பேன்.

நீங்கள் கட்சி ஆரம்பித்தது அதற்குதானே...... அதுதான் உண்மை..... அடுத்த தேர்தலில் ஜெயிச்சி எதனை கோடி வேண்டுமானாலும் சம்பாதிங்க....... உங்கள் கட்சியின் கொள்கையும் அதுதானோ?

6. இது முப்பெரும் விழா அல்ல; கருணாநிதி ஆட்சிக்கு முடிவு கட்டும் விழா

சரி இந்த நல்லாசி கண்டிப்பாக உனக்கு பிடிக்காது.....உனக்கு ஜெயலலிதா ஆட்ச்தான் பிடிக்கும்........சரி உன் கட்சியின் கொள்கை என்ன?

திரு விஜயகாந்த் அவர்களே, முதலில் அரசியல் பேசுவதற்கு முன்பு உங்களது தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள், தேச தந்தை காந்தியும், பெருந்தலைவர் காமராஜரும் கடைசிவரை தாங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்கள், ஆனால் உங்களிடம் அதில் எதுவும் இல்லை, அனைத்து அரசியல் கட்சியையும் குறைசொல்லித்தான் நீங்கள் கட்சி ஆரம்பித்தீர்கள் என்பதை வசதியா மறந்துவிட்டீர்கள், வாரிசு அரசியல் பற்றி பேசும் உங்களுக்கு என்ன தகுதி இருக்குது (சுதிஸ் யாரு, அவனுக்கு ஏது இவ்வளவு பணம் உன் பொண்டாட்டிக்கு என்ன தெரியும் அரசியல பத்தி), கூட்டணியே இல்லை என்ற உங்களுக்கும் இன்று நீங்கள் பேசுவதற்கும் முரண்பாடுகள் நிறைய .உங்களுக்கு என்ன தகுதி இருக்குது என்பதை மேடையில் விளக்குங்கள். தேர்தல் நெருங்க நெருங்க உங்களது பேச்சில் ஏகப்பட்ட முரண்பாடுகள்.

முரண்பாடே உன்பெயர்தான் விஜயகாந்தோ?






குமரி மாவட்டம் தி மு க வின் கோட்டை என்பது நிருபணம்



தமிழக முதல்வரின் சீரிய ஆட்சியின் பயனாக தமிழகம் முழுவதும் உள்ள மாற்று கட்சியினர்கள் சாரை சாரையாக தி மு வில் இணையும் நிகழ்ச்சிகள் அன்றாடம் நடைபெற்றுவருவது நாம் அனைவரும் அறிந்ததே.

குமரி மாவட்டத்தில் உள்ள அதிமுக கட்சியின் முன்னணியினர் (தளவாய் சுந்தரத்தின்) துரோக செயல்களால் கொதிபடையும் அதிமுகஇனர் தமிழகத்தின் பொற்கால ஆட்சியாம் தமிழக முதல்வரின் செயல்பாடுகளால் ஈர்க்கபட்டு தி மு வில் இணையும் நிகழ்ச்சிகள் நடைபெற்று குமரி மாவட்ட அதிமுகவினர் முற்றிலுமாக தி மு வில் இணைந்ததின் காரணமாக இன்று குமரி மாவட்டம் தி மு கவின் கோட்டையாக மாறியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

அதை நிரூபிப்பது போன்று மீண்டும் ஒரு சம்பவம் நாகர்கோவிலில் நடைபெறும் தி மு க முப்பெரும் விழாவில் குமரி மாவட்ட அதிமுகவில் முக்கிய புள்ளியாக வலம் வந்த குமரி ஸ்டீபன் தி.மு.க.வில் சேர உள்ளதுதான்.

கன்னியாகுமரி பேரூராட்சி தலைவராக 2 முறை பதவி வகித்தவர் குமரி எஸ்.ஸ்டீபன். இவர் குமரி மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர், துணை செயலாளர், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
1988-ம் ஆண்டு ஜெயலலிதா தனி அணியாக பிரிந்தபோது அவருடன் இணைந்தார். அதன்பிறகு அ.தி.மு.க.வில் தீவிர பணியாற்றினார். 1993-94-ம் ஆண்டுகளில் குமரி மாவட்ட பால்வள தலைவராக இருந்தார்.
2 முறை பேரூராட்சி தலைவராக பணியாற்றிய அவர் 2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி வார்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அ.தி.மு.க.வின் கோஷ்டி பூசலே தனது தோல்விக்கு காரணம் என்று குமரி ஸ்டீபன், பகிரங்கமாக தனது கருத்துக்களை தெரிவித்ததால் ஓரங்கட்டப்பட்டார். அதன்பிறகு அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.
இந்தநிலையில் அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைய முடிவு செய்துள்ளார். வருகிற 20-ந் தேதி நாகர்கோவிலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் முப்பெரும் விழா நடக்கிறது. இதற்காக கன்னியாகுமரி வரும் கருணாநிதியை சந்தித்து குமரி ஸ்டீபன், தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைகிறார்.
இதுபற்றி குமரி ஸ்டீபனிடம் கேட்டபோது “கடந்த 20 ஆண்டு அரசியல் வாழ்வில் இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டேன். என்னிடம் நெருக்கமாக இருந்தவர்களை எனக்கு எதிராக, தேர்தலில் நிற்க வைத்து என்னை தோல்வி அடைய வைத்தார்கள். கட்சிக்காக உழைத்த எனக்கு எந்த பதவியும் தராமல் இருந்தனர். இதனால் எனக்கு மரியாதை தருகின்ற இயக்கத்தில் சேர முடிவு செய்துள்ளேன். நான் எந்த பிரதிபலனையும் எதிர்பார்த்து சேரவில்லை. ஆனால் தி.மு.க.வில் எனக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.
குமரி மாவட்ட அ.தி.மு.க.வில் முக்கிய புள்ளியாக வலம் வந்த குமரி ஸ்டீபன் தி.மு.க.வில் சேர உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு முறை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கன்னியாகுமரி வந்தபோது கடலில் ராட்சத கம்புகளை கட்டி அ.தி.மு.க. கொடியை பறக்க விட்டு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியவர் குமரி ஸ்டீபன் என்பது குறிப்பிடத்தக்கது.


Friday, September 3, 2010

சாதனை ராணி ஜெயலலிதாவின் சாதனைகள்

நான்கு வருட தூக்கம் கலைந்து கொடநாட்டில் இருந்து கொண்டு அறிக்கைவிடும் அறிக்கை நாயகி வாய்தா ராணி, இன்று தமிழகத்தில் நடைபெறும் நல்லாட்சியை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் அடுத்து முதல்வர் ஆகிவிடலாம் என பகல்கனவு கொண்டிருக்கும் ஊழல் ராணியின் சாதனையை சொல்ல வார்த்தைகள் இல்லை. இதோ சில சாதனைகள் சாம்பிளுக்காக ....


டான்சி கொள்ளைய சொல்றதா? அதன் பிறகு கோர்டில் அந்தர் பல்டி அடித்ததை சொல்லவா?

ஊழல்மகாராணி பட்டம் கிடச்சத சொல்றதா?

வாஜ்பாய பதிமூணு நாளில் அரசியல் கொலை செய்து ஆட்சியை கலைச்சத சொல்றதா? அதன் பிறகு தன் வாழ் நாளில் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த அந்த பதின்மூன்று நாள்களும் தான் கருப்பு நாள்கள் என்று சொன்னதை சொல்லவா?

பாவப்பட்ட கல்லூரி மாணவிகளை எரிச்சு கொன்னத சொல்லறதா?

ஒரு ரூபாய் சம்பளத்தில் ஆயிரம் ஏக்கர் எஸ்டேட் வாங்கினத சொல்றதா அல்லது அதில் கட்டப்படும் டீ தொழிற்சாலையை சொல்லுறதா?

மணல் கொள்ளையடிச்சு, தமிழ்நாட்டை கூறுபோட்டத சொல்றதா?

சேஷன் முதல் சுப்ரமணிசாமி வரைக்கும் 'நல்ல காட்சி' காமிச்சத சொல்றதா?

ஒரே கையெழுத்தில் இரண்டு லட்சம் அரசு ஊழியர் டிஸ்மிஸ் பண்ணுனதை சொல்றதா?

சாலை பணியாளர்களை கொலைபட்டினி?

விவசாயிக்கு எலிக்கறி போட்டது?

நெசவாளர்களுக்கு காஞ்சி தொட்டி திறந்தது?

ஐநூறு கோடி செலவில் உலக புகழ் பெற்ற வளர்ப்புமகன் கல்யாணம்?

உனக்கும், உன் சசிக்கும் பெரிய்ய்ய்யய்ய இடுப்புக்கு ஒட்டியாணம் போட்டது, பல நூறு கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பதுக்கியது?

ஜோசியன் சொன்னதுக்காக கலைஞரை கொலைமுயற்சி செஞ்சு கைது செஞ்சது..செரீனா கஞ்சா கேஸ், காஞ்சிசங்காரர் கைது, சுதாகரன் கைது,

ராஜபக்சேக்கு ஆதரவு, போர் என்றால் அப்பாவி மக்கள் சாவது நியாயம் என்றது?

மகாமகம் படுகொலை..

கருணாநிதி கைது,

மாறன் தாக்கப்பட்டது,

கே.கே.எஸ்.எஸ்.ஆர் முகத்தில் ஆசிட் வீசியது,

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சட்டசபை உள்ளே தாக்கப்பட்டது,

பரிதி வேட்டியை உருவியது,

ஐ.எ.எஸ் அதிகாரி சந்திரலேகா மீது திரகவகம் வீசியது,

கருணாநிதி கைதை எதிர்த்து நடந்த பேரணியில் நிருபர்கள் உள்ளிட்ட பலர் தாக்கப்பட்டது,

முன்னாள் தலைமை தேர்தல் கமிசனர் டி.என். சேஷன் விமானநிலையத்தில் சிறை வைக்கப்பட்டது,

சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக சென்னை கோர்ட்டில் மகளிர் அணி சேலையை தூக்கி காண்பித்தது,

மணிசங்கர அய்யரை பாண்டிச்சேரி முதல் காரைக்கால் வரை துரத்தி துரத்தி அடிக்க முற்பட்டது,

ப.சிதம்பரம் மீது செருப்பை வீசியது,

முன்னாள் கவர்னர் சென்னா ரெட்டி தங்களிடம் தவறாக நடக்க முற்பட்டதாக சொன்னது,

செரீனா மீது கஞ்சா வழக்கு,....

இதெல்லாம் விட முத்தாய்ப்பாக படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும் TNPSC யை மூடி தமிழக இளைஞர் வாழ்வில் மண்ணள்ளி போட்டதை சொல்லவா?

இது போன்று இன்னும் பல நூறு சாதனைகளை சொல்லலாம்.....

Tuesday, July 13, 2010

காமெடி செய்யும் ஜெயலலிதா


ஜெ., மைக்கில் உரக்க சொல்ல, தொண்டர்கள் பின்னே தொடர்ந்து கோஷமிட்டனர். இதில் ஜெ., போட்ட கோஷங்கள் வருமாறு:

உயர்ந்து போச்சு, உயர்ந்து போச்சு நூல் விலை உயர்ந்து போச்சு, மின்வெட்டு, மின்வெட்டு,

ஆமா உங்க ஆட்சியில் நூலை விலைக்கு கொடுக்காம இலவசமாதனே கொடுத்தீங்க? நிஜமா மறந்தே போச்சு உங்க ஆட்சியில் காஞ்சி தொட்டி திறந்தது......

உங்கள் ஆட்சியில் மின் உற்பத்திக்கு என்ன செய்தீர்கள்......இன்று இருக்கும் தமிழகமும் நீ ஆட்சியில் இருந்த பொழுது இருந்த தமிழகமும் ஒன்றா....உலகமயமாக்கலுக்கு பிறகு நாட்டின் தொழில் வளர்ச்யின் வேகம் தான் தெரியுமா......


குறைந்து போச்சு, குறைந்து போச்சு, வேளாண் உற்பத்தி குறைந்து போச்சு,

கலைஞர் ஆட்சிக்கு வந்த உடன் சுமார் ஆறாயிரம் கோடி வேளாண் கடன் தள்ளுபடி செய்தாரே அதுவும் மறந்து போச்சா....எதை வைத்து கூறுகிறாய்
வேளாண் உற்பத்தி குறைந்து போச்சு என்று.....


பெருகி போச்சு , பெருகி போச்சு , வேலைஇல்லா திண்டாட்டம் பெருகி போச்சு,

உனகெல்லாம் மனசாட்சியே கிடையாதா.... உன் ஆட்சியில் டி என் பி சி மூடபட்டு வேலை வாய்ப்பையே நிருத்திவைததுதான் மறந்து போச்சா.


சுரண்டாதே, சுரண்டாதே கனிமவளத்தை சுரண்டாதே,

வெளியே வந்து பார் யாருடைய ஆள் திருடுகிறான் என்று......


தாரை வார்க்காதே ,தாரை வார்க்காதே , தமிழக நதி நீர் உரிமைகளை தாரை வார்க்காதே,

நீ பத்து வருடம் இந்த தமிழகத்தை ஆண்டாயே அப்பொழுது தமிழக நதி நீர் உரிமைக்காக என்ன செய்தாய்......

பரவுதே, பரவுதே புதுபுதுப்புது நோய் பரவுதே, கட்டுப்படுத்து,

நீதான் "டாக்டர்" புரட்சிதலைவியாசே நீயே ஒரு இதுக்கு பாதுகாப்பு முறையை சொல்


பாதுகாப்பு கொடு , பாதுகாப்பு கொடு, ரவுடிகளிடம் இருந்து பாதுகாப்பு கொடு,

கலைஞரை உன் ஆட்சியில் கைது செய்தாயே அதற்காக ஒரு பேரணி நடை பெற்றதே ...அன்று மெரினா கடற்கரை சாலையில் உன் ரவடிகள் மூலம் நடைபெற்றது என்ன அஹிம்சையா........இன்னும் சொல்லவா....

ஒழியட்டும், குடும்ப அராஜக ஆட்சி ஒழியட்டும்,

என்ன சசிகலா குடும்ப அராஜக ஆட்சியா .... ஆமா சுதாகரன், வெங்கடேஷ், நடராஜன் எல்லாரும் யாரு....

சபதமேற்போம், சபதமேற்போம், புரட்சி தலைவர் ஆட்சி அமைய சபதமேற்போம்

உனக்கு இப்பதான் புரட்சி தலைவர் துணை தேவைப்படும்......

எல்லாரும் உன்னுடைய டிராமாவை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

Friday, July 2, 2010

ஊரை ஏமாற்றும் ஜெயலலிதா........

ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத்தத்தான் அதுபோலதான் இந்த அம்மாவுக்கு இப்போதுதான் இலங்கை தமிழர்களின் கண்ணீர் தெரிகிறது. ஆமாம் கடந்த வருடம் நீங்கள் பேசியது அனைத்தும் மறந்துதான் போய்விட்டதா? அல்லது தமிழர்கள் அனைவரும் முட்டாள்கள் என்றுதான் நினைத்துவிடீர்களா?
ஜெயலலிதாவிற்கு தேர்தல் நெருங்க நெருங்க பேச்சிலும் தடுமாற்றம் அதிகமாவே காணப்படுகிறது....

விடுதலைபுலிகளுக்கு எதிராக இந்த அம்மா விட்ட அறிக்கைகளை யாரும் மறந்துவிடவில்லை. வைகோவை இந்த அம்மா ஆட்சியில்தான் ஜெயிலில் வைத்தார்கள். (ஆமா வைக்கோவை ஏன் சிறையில் அடைத்தீகள்? எங்களுக்கு மறந்து போய்விட்டது)

உன்னிடம் ஒரு கேள்வி.... அடுத்த நாட்டு உள்விவகாரங்களில் நம் எவ்வளவு தூரம் தலையிட முடியும்? (இது புரியாமல் உளறவேண்டாம் போய் கொடைநாட்டில் நிம்மதியா ஓய்வெடுங்க அல்லது டீ தொழில் பாருங்க)

ஆமா நீ தானே புலிகளை தடை செய்ய ராஜீவ் பிச்சை கேட்டது... சமீபகாலமாக காங்கிரஸ் கூட்டுக்காக இந்த போருக்கு முன்னாடி இலங்கை ராணுவம் அவங்க கடைமையைதான் செய்கிறதுன்னும் அதில் பொதுமக்கள் இறப்பது சகஜமுன்னும் நீ சொன்னது எல்லாம் மறந்து போய் இப்போ கலைஞர் போர் குற்றவாளின்னு ஆதாரம் தருவேன்னு சொன்னா தமிழன் நாங்க என்ன ஆட்டு மந்தைகள என்ன?

புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும்... சில ஆயிரம் அப்பாவி மக்கள் பலியானாலும் சரி... என்று கூறிய நாக்கு இன்று காங்கிரஸ் கூட்டணி வாய்ப்பு இல்லை என்றவுடன் ...ப்ளேட்டைமாற்றி ஐயோ தமிழினம் அழிகிறதே இதற்கு கருணாநிதிதானே காரணம் என ஒப்பாரி......உன் ஆட்சியல்தான், முதலில் சட்ட சபையில் தீர்மானம் இயற்றியதை மறந்துவிட்டாயா? தமிழ் மக்களை அழிச்சதுல உனக்குத்தான் முதல் பங்கு. கொத்து கொத்தாக குண்டு போட்டதெல்லாம் தேர்தல் நெருங்கிய உடன் தான் உனக்கு தெரிகிறதா?

ஆமா தெரியாமதான் கேட்கிறேன் நீயும் இந்த வைகோவும் பேச எதுவும் மேட்டர் இல்லேன்னா, இப்படி தில்லாலங்கடி வேலை செய்யறதுக்கு அப்பாவி இலங்கை தமிழர்களை இப்படி பயன்படுத்துறியே.... உனக்கெல்லாம் ஒரு அரசியல் ஒரு கேடா? சுருக்கமா சொன்னா உங்க ரெண்டு பேர் போதைக்கு இலங்கை தமிழர்கள் எனா ஊருகாய? ஆனால் ஒன்று நோகாமல் இப்படி அறிக்கை மட்டுமே விட்டு தேர்தலில ஜெய்க்கலாம்னு கனவு காணாதே.

பேசாம தமிழ்நாட்டில் சுனாமி வந்ததற்கு கருணாநிதி காரணம் என்று சொன்னால் இன்னும் நல்ல இருக்கும் ......நீ எல்லாம் ஒரு பொம்பள. உனக்கு அரசியல் வேறு ஒரு கேடு. பேசாம பழைய படி நடிக்க போ. எதாவது அம்மா வேஷம் கிடைக்கும்...

Monday, June 14, 2010

தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் ஜெயலலிதா



நான் கோடநாடு சென்றாலே, “ஒய்வெடுக்க செல்கிறேன்” என்று பத்திரிகைகள் தவறாமல் செய்தியை வெளியிடுகின்றன. கோடநாடு தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. நீலகிரி மாவட்டமே குளிர்ந்த பிரதேசம் தான். அப்படியென்றால், இங்கே இருப்பவர்கள் யாரும் எந்த வேலையும் செய்யாமல் சதா சர்வ காலமும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாமா?


நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இருக்கிறார். காவல் துறை கண்காணிப்பாளர் இருக்கிறார். நீலகிரி மாவட்டத்தில் எத்தனையோ அரசு அலுவலகங்கள் இருக்கின்றன. அப்படியானால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அத்தனை பேரும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆகுமா? நீலகிரி என்றாலே ஓய்வு என்று அர்த்தமா? ஆக, நான் ஓய்வெடுக்க கோடநாட்டிற்கு வரவில்லை. சதா சர்வ காலமும் கட்சிப் பணியையும், மக்கள் பணியையும் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அங்கு ஏராளமான பணியாளர்கள், குறிப்பாக பெண்கள் தினமும் காலை முதல் மாலை வரை தேயிலை பறிக்கின்றார்கள். குளிர்ந்த மலைப் பிரதேசத்தில் அவர்கள் வாழ்வதாலேயே, அவர்கள் சதா சர்வ காலமும் ஓய்வெடுக்கிறார்கள் என்று அர்த்தமா? அப்படி கூறுவது அபத்தமாகாதா? அது போலத்தான் கோடநாட்டில் நான் தங்கினால், நான் ஓய்வெடுத்துக் கொண்டு இருப்பேன் என்று சொல்லுவது அபத்தமான கூற்றாகும். (ஒரு வேளை தேயிலை தோட்டத்தில் வேலை செய்வாங்களோ?

எம்.ஜி.ஆர். இருந்தவரை, அதாவது 1987 வரை பதிவு செய்திருந்த கழக உடன்பிறப்புகளின் எண்ணிக்கை 17.50 லட்சம். இன்றோ கழக உடன் பிறப்புகளின் மொத்த எண்ணிக்கை 1.50 கோடி ஆகும். (ஒரு வேளை புரட்சிதலைவரை விட நீங்கள்தான்..........?)

Wednesday, June 2, 2010

தான் வாழ்ந்த வீட்டை தானமாக கொடுத்தார் நமது முதல்வர்

மருத்துவமனையாக பயன்படுத்த    கோபாலபுரம் வீட்டை    கருணாநிதி,இன்று    தானமாக வழங்கினார்:     அறக்கட்டளையிடம் ஒப்படைப்பு

முதல்- அமைச்சர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த 55 ஆண்டுகளாக அவர் அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் “கலைஞர் காப்பீட்டு திட்டம்” தொடக்க விழா நடந்தபோது, கோபாலபுரம் வீட்டை மக்களுக்காக தானமாக வழங்க அவர் விருப்பம் தெரிவித்தார்.

அந்த விழாவில் முதல் -அமைச்சர் கருணாநிதி பேசுகையில், நான் வாழும் கோபாலபுரம் வீட்டை எனது காலத்துக்குப் பிறகு தமிழக அரசிடமோ, அல்லது அறக்கட்டளைக்கோ தானமாக வழங்க விரும்புகிறேன். இந்த வீட்டில் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பது எனது ஆசையாகும். ஏழை-எளிய மக்களுக்கு இங்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றார்.

முதல்- அமைச்சர் கருணாநிதி தன் தூய உழைப்பால் வாங்கிய, வரலாற்றுப் பெருமைக்குரிய கோபாலபுரம் இல்லத்தை தன் வாரிசுகளுக்கு வழங்காம ல் ஏழை-எளிய மக்களுக்காக வழங்கியதை மிகப்பெரிய அருஞ்செயல் என்று நாடெங்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.


இந்தியாவில் இதுவரை எந்த மாநில முதல்- அமைச்சரும் தான் வசிக்கும் வீட்டையே தானமாக கொடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்- அமைச்சர் கருணாநிதியின் இந்த மனிதநேய நடவடிக்கையை அவரது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதோடு சில மாதங்களுக்கு முன்பு அதற்கான ஒப்புதல் பத்திரத்திலும் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்.

முதல்-அமைச்சர் கருணாநிதி நாளை (வியாழன்) தன் 87-வது பிறந்த தினத்தை கொண்டாட உள்ளார். இதையொட்டி கோபாலபுரம் வீட்டை முறைப்படி தானம் செய்ய தீர்மானித்தார். இதற்காக அவர், அன்னை அஞ்சுகம் அறக்கட்டளையை உருவாக்கினார்.

அந்த அறக்கட்டளையின் அறங்காவலர்களாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், சி.கே.ரங்கநாதன், கவிஞர் வைரமுத்து, மத்திய மந்திரிகள் ஆ.ராசா, எஸ்.ஜெகத்ரட்சகன் நியமனம் செய்யப்பட்டனர். இந்த அறக்கட்டளையிடம் கோபாலபுரம் வீட்டை ஒப்படைக்க இன்று பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

கோபாலபுரம் இல்லத்திலேயே பத்திரப்பதிவு நிகழ்ச்சி நடந்தது. முதல்- அமைச்சர் கருணாநிதி காலை 9.45 மணிக்கு தானப்பத்திரத்தில் கையெழுத்துப் போட்டார். இதன் மூலம் கோபாலபுரம் இல்லம் அதிகாரப்பூர்வமாக இன்று அன்னை அஞ்சுகம் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பத்திரத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களை முதல்- அமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் வாசித்தார்.


அதன் விவரம் வருமாறு:-

முதல்-அமைச்சர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தை 1955-ம் ஆண்டு சர்வேசுவர அய்யர் என்பவரிடம் இருந்து வாங்கினார். 1968-ம் ஆண்டு தன் மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகிய 3 பேர் பெயரில் இந்த வீட்டை கருணாநிதி எழுதி வைத்தார்.

கடந்த ஆண்டு அவர் இந்த வீட்டை ஏழை- எளிய மக்கள் பயன்பெற மருத்துவமனையாக மாற்ற விரும்பினார். இதையடுத்து கடந்த ஆண்டு மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு மூவரும் இந்த வீட்டை மீண்டும் கருணாநிதியிடம் ஒப்படைத்தனர்.

தற்போது இன்று பத்திரப்பதிவு மூலம் இந்த வீடு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

முதல்- அமைச்சர் கருணாநிதி, அவரது மனைவி தயாளு அம்மாள் காலத்துக்குப் பிறகு இந்த வீடு மருத்துவமனையாக மாறும். கலைஞர் கருணாநிதி மருத்துவமனை என்று அந்த மருத்துவமனை அழைக்கப்படும்.இந்த மருத்துவமனையை அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை நிர்வகிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு நிகழ்ச்சியில் தயாளு அம்மாள், துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, ஆ.ராசா, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, அமிர்தம், ஐகோர்ட்டு அட்கேட் ஜெனரல் ராமசாமி. வக்கீல்கள் சுதர்சனம், பழனியாண்டவன், பத்திரப் பதிவு உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் அரிகரன், ஆடிட்டர் சிவசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Sunday, May 30, 2010

நன்றி மறவாத முதல்வர் கலைஞர்

http://www.tamilnadu-online.com/wp-content/uploads/2009/09/Kalaignar_Karunanidhi.jpg

நடக்க இருக்கும் மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு இன்று மாலை அண்ணா அறிவாலயம் முரசொலி வளாகத்தல் உள்ள கூட்ட அரங்கில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கூடியது.

இந்தக் கூட்டத்தில் திமுக சார்பில் கே.பி. ராமலிங்கம், டி.எம்.செல்வகணபதி, சங்கரன் கோவில் தங்கவேல் ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.

http://parliamentofindia.nic.in/ls/lok13/biodata/13tn16.jpg

இந்த அறிவிப்பின் மூலம் தன்னை நம்பிவருபவர்களை முதல்வர் கலைஞர் கைவிடமாட்டார் என்பது மீண்டும் ஒருமுறை டி.எம். செல்வ கணபதியை தேர்வு செய்ததின் மூலம் நிருபணம்ஆகியுள்ளது. குறிப்பாக மாற்று கட்சியில் இருந்து திமுக-வில் இணையும் தொண்டர்களை ஒருநாளும் கலைஞர் கைவிடமாட்டார் என்பதை முன்னைய காலத்தில் இருந்தே நாம் அறியலாம்.

Thursday, May 27, 2010

கலைஞரின் மலரும் நினைவுகள்

“நானும் எம்.ஜி.ஆரும் நட்புடன் இருக்க  ஆர்.எம்.வீரப்பன் பாடுபட்டார்”  திருமண விழாவில் கருணாநிதி பேச்சு
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் மகன் தங்கராஜ்-தாரிணி திருமணம் சென்னை எழும்பூர் ராஜாமுத்தையா மண்டபத்தில் நடந்தது. திருமணத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி நடத்தி வைத்தார். அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.

விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

சீரோடும், சிறப்போடும் இன்று இங்கே நடைபெறுகின்ற இந்த மணவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்கள் தங்கராஜ்-தாரணி ஆகியோர் நெடிது வாழ்ந்து, நிறை வாழ்வையேற்று எல்லாம் வல்ல இறைவன் என்று சொல்ல மாட்டேன் - இயற்கை அருளால் வளம் பல பெற்று - நலமுற எய்தி வாழ வேண்டுமென்று வாழ்த்துகிறேன். அருளாளர் என்று அனைவராலும் அழைக்கப்படுகின்ற அருமைச் சகோதரர் ஆர்.எம்.வீ. இல்லத்தில் நடைபெறுகின்ற இந்த மணவிழா - நம்முடைய இல்லத்தில் நடைபெறுகின்ற ஒரு நிகழ்ச்சி என்கின்ற உணர்வோடுதான், நாமெல்லாம் இங்கே கலந்து கொண்டிருக்கிறோம்.

எம்.ஜி.ஆர். அவருக்கும், எனக்கும் உள்ள தொடர்பு நீண்டகாலத் தொடர்பு. சுருக்கமாகச் செல்ல வேண்டுமேயானால், மறைந்தும், மறையாத என்னுடைய ஆருயிர் நண்பர் எம்.ஜி.ஆரின் அணுக்கத் தொண்டர்களிலே ஒருவராக - அன்பு நண்பர்களிலே ஒருவராக - அவசியப்பட்ட ஆலோசகர்களிலே ஒருவராக விளங்கியவர் நம்முடைய ஆர்.எம்.வீ. ஆவார்கள். அவர்கள் என்னோடு கொண்டிருந்த நட்பை - இன்றுவரையிலே என்னிடத்திலே அவர் கொண்டிருக்கின்ற அன்பைப்போற்றிப் புகழ்ந்து வாழ்த்தியவர்கள் எல்லாம் பாராட்டியிருக்கின்றார்கள்.

1945-ல் குடியரசு அலுவலகத்தில் நான் தந்தைப்பெரியார் அவர்களிடத்திலே குடியரசு பத்திரிகையினுடைய துணை ஆசிரியராகப் பொறுப்பேற்று, பணியாற்றச் சென்ற அந்தக் காலந்தொட்டு, எனக்கும், ஆர்.எம்.வீ.க்கும் நெருக்கமான நட்பு - அரும்பி, மலர்ந்து, இன்றைக்கு மணம் வீசுகின்ற வகையில் - மண விழாவினை நான் நடத்தி வைக்கவும், அவர் வரவேற்கவுமான சூழல் உருவாகியிருக்கின்றது.

கலைஞருக்கும், ஆர்.எம்.வீ-க்கும் என்றைக்குமே பிணக்கு ஏற்பட்டதில்லை என்று இங்கே சொன்னார்கள். நம்முடைய திருமாவளவன் அவர்கள் பேசும்போது, கலைஞரும், ஆர்.எம்.வீ. எதிர்ப்பது என்றாலும் அதில் உறுதியாக இருப்பார்கள்; நட்பு பாராட்டுவது என்றாலும், அதிலும் உறுதியாக இருப்பார்கள் என்று சொன்னார். அதிலே ஒரு ரகசியம் ஒளிந்து கொண்டிருக்கிறது. அவர் என்னை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்ட அந்தக் காலத்திலேகூட, என்னிடத்திலே கள்ளக்காதல் கொண்டவர்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், எம்.ஜி.ஆர். தலைமையிலே இயங்கிய அ.தி.மு.க.விற்கும் இடையில் சில பிரச்சினைகள் தோன்றும்போதெல்லாம், ஆர்.எம்.வீ. எனக்கு ஒரு இரகசியக் கடிதம் வரும். இன்னும் சொல்லப்போனால், எங்களிடையே ஒரு பிரிவு ஏற்படக்கூடிய ஒரு சூழல் - 1971 ஆம் ஆண்டில் ஏற்பட்டபோது, என்னுடைய இல்லத்திற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக - அந்தச் சூழ்நிலை உருவாகக்கூடாது ; நீங்கள் இருவரும் பிரிந்து இயங்கக்கூடாது; ஒன்றாக இருந்து தான் இயங்க வேண்டும் - பிரிக்கின்றவர்கள் சில பேர் யார் என்பது எங்களுக்குத் தெரியும். ஆகவே, நீங்கள் ஒன்றுபட்டு, தமிழகத்திற்காகப் பணியாற்றுங்கள் என்று கண்ணீர் கலந்து தன்னுடைய கவலையைத் தெரிவித்தவர்களிலே மிக முக்கியமானவர் என்னுடைய அன்பிற்குரிய ஆர்.எம்.வீ. என்று சொன்னால், இது வரலாற்றுப் புத்தகத்திலே பதிய வைக்கவேண்டிய ஒரு பேருண்மையாகும்.

பல நேரங்களில் எம்.ஜி.ஆர்., எனக்கும் அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலே பிணக்கு விளைந்த போதெல்லாம், அதை சரிசெய்யப் பாடுபட்டவர் நம்முடைய ஆர்.எம்.வீ. அவர்கள் என்று சொன்னால், அது மிகையாகாது. ஏன் அவருக்கு அந்தக் கவலை இருந்தது என்றால், நான் குறிப்பிட்டேனே 1945 ஆண்டு - அந்த 1945 ஆம் ஆண்டிலே நாங்கள் இருவரும், இணைந்திருந்து உழைத்த இடம், எங்களுடைய ஆரம்பப் பள்ளிக் கூடம் தொடங்கிய இடம் ஈரோடு. அந்த ஈரோடு - தந்தைப் பெரியாருடைய குருகுலம் - அது உருவாவதற்குக் காரணம், அங்கிருந்து கிளம்பிய உணர்வுகள், நாடெங்கும் பரவியதற்குக் காரணம், திராவிட இயக்கத்தைச் செழிப்படையச் செய்ய வேண்டும்; வலுவடையச் செய்யவேண்டும் - அப்போது தான் திராவிட மக்களுக்கு உண்மையான விடுதலை - உண்மையான சுதந்திரம் கிடைக்கும் - பகுத்தறிவு பெறவேண்டும் மக்கள் - அவர்கள் யாருக்கும் அடிமைகளாக வாழக் கூடாது; சுதந்திரத்தோடு, சுயமரியாதையோடு வாழவேண்டுமென்ற அந்த உணர்வை ஊட்டிய இடம் - எங்களுக்கு ஈரோடு குடியரசு அலுவலகம் என்ற காரணத்தால், அந்தத் தாய்ப்பாலை அருந்திய எங்களுக்கு எவ்வளவுதான் அரசியலிலே மாறுபாடு கள், வேறுபாடுகள் ஏற்பட்டாலும் கூட, அந்த அடிப்படை உணர்விலேயிருந்து பதவிகளுக்காக எங்களை நாங்கள் என்றைக்கும் மாற்றிக் கொண்டதில்லை.

இங்கே தம்பி திருநாவுக்கரசு அவர்கள்கூட, ஆர்.எம்.வீக்கு பதவி கொடுங்கள் என்று சொன்னார். பதவிகளைப்பல பேருக்குக் கொடுக்கின்ற இடத்திலே இருந்தவர் ஆர்.எம்.வீ. அவருக்கு நான் பதவி கொடுப்பது என்பது, ஏதோ தட்டிக் கழிப்பதற்காகச் சொல்லுகின்ற வாசகம் அல்ல; அவர் பதவிகளைப் பகிர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டியவரே தவிர, கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டியவர் அல்ல.
அந்தளவிற்கு இந்த இயக்கத்தினுடைய ஆணி வேராக, அடிவேராக இந்த இயக்கத்தை வளர்க்கின்ற வலுவான விழுதுகளிலே ஒருவராக அன்றைக்கும் இருந்தார் - இன்றைக்கும் இருப்பவர் நம்முடைய அருமைச் சகோதரர் ஆர்.எம்.வீ. என்பதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். அவர் அதை மறக்காமல் இருக்கிறார் என்பதற்கு அடையாளம் தான் இந்த மணவிழாவிற்கு நானே வர வேண்டும், நானே திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாடிநத்த வேண்டும் என்று மிகுந்த உறுதியோடு என்னிடத்திலே சொன்னார். நான் கூடச் சொன்னேன் -நாள் முழுவதும் அளப்பரிய பணிகள், அதற்கிடையே கோவைக்கு மாநாட்டுப் பணிகளைப்பற்றி ஆய்வு செய்யச் செல்கிறோம், அங்கிருந்து உதகமண்டலம் சென்று ஓரிரு நாட்கள் ஓய்வு பெறலாமே என்று எண்ணினேன். ஆனால் சென்ற எனக்கு இந்த நினைவு வந்தது. நினைவு சாட்டையாக விழுந்தது. ஆர்.எம்.வீ. இல்லத் திருமணத் திற்குச் செல்லாமல் ஓய்வு ஒரு கேடா உனக்கு என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டு, இங்கே வந்திருக்கிறேன் என்றால் அது நட்பின் ஆழத்தை, நட்பின் உயர்வை உணர்த்தக் கூடிய ஒன்று என்பதை உங்களுக்கெல்லாம் எடுத்துச் சொல்லி, அத்தகைய ஒரு உத்தம நண்பர் என்றைக்கும் இந்த இயக்கத்தினுடைய தூணாக விளங்கிக் கொண்டி ருப்பவர், திராவிட இயக்கத்தினுடைய தோன்றல் - திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு விழுதாக இருந்து, பாதுகாத்துக் கொண்டிருப்பவர் - அப்படிப்பட்ட அருமைச் சகோதரர் இல்லத்தில் நடைபெற்றுள்ள இந்த மண விழாவில் உங்கள் அனைவருடைய வாழ்த் துக்களையும் எருவாக்கி - இந்த மண மக்கள் தழைத்து வாழ்த்துவார்கள், செழித்து வாழ்வார்கள் என்ற வாழ்த்தினை உங்களோடு இணைந்து நானும் வழங்கி விடைபெற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்- அமைச்சர் கருணாநிதி பேசினார்.

Tuesday, May 25, 2010

ஆட்டம் காணும் அ.தி.மு.க. கூடாரம்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்    முத்துசாமி தி.மு.க.வில் சேருகிறார்

அ.தி.மு.க. வை பொறுத்தவரை உண்மையான விசுவாசிகளுக்கும், எம்.ஜி.ஆர்.ன் உண்மையான தொண்டர்களுக்கும் மரியாதை என்பது கானல் நீர்தான். மானமுள்ள எந்த அரசியல்வாதியும் அ.தி.மு.க. வில் இருக்க விரும்பமாட்டான் பொதுவாக பெரிய பொறுப்பில் இருக்கும் பெரிய பருப்புகள் மட்டுமே அ.தி.மு.க. வில் வாழமுடியும், மற்றவர்களின் காலை வாருவதிலே குறியாக இருப்பார்கள். முத்துசாமி போன்ற நல்ல அரசியல்வாதிகளால் அ.தி.மு.க. வில் அவமானகளை தாங்கிக்கொண்டு இருக்கமுடியாது என்பது என்போன்றவர்களுக்கு புரியும்.


அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் முத்துசாமி தி.மு.க.வில் இணை கிறார் என்ற செய்தி மிக்க மகிழ்ச்சியானதாகும். எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டவர் முத்துசாமி. பின்னர் 1991-96-ல் ஜெயலலிதா தலைமையில் நடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி, அந்த பகுதியில் செல்வாக்கு உள்ள பிரமுகர். அ.தி.மு.க. தொண்டர்களிடமும் இவருக்கு நல்ல மரியாதை உள்ளது. தற்போது அ.தி.மு.க. மாநில அமைப்புச்செயலாளராக இருந்து வருகிறார். ஈரோடு, நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளராகவும் உள்ளார்.

சமீப காலமாக முத்துசாமிக்கு அ.தி.மு.க.வில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக முத்துசாமியும், அவரது ஆதரவாளர்களும் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தனர்.

இந்த நிலையில் முத்துசாமி அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர முடிவு செய்துள்ளார். அவரது ஆதரவாளர்களும் தி.மு.க. வில் சேருகிறார்கள்.

தி.மு.க.வில் சேருவது குறித்து முத்துசாமி இன்று மாலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் தி.மு.க.வில் சேரும் முடிவை அறிவிக்கிறார்.

முன்னாள் எம்.பி. வி.கே. சின்னசாமி, ஈரோடு முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், ஈரோட்டைச் சேர்ந்த கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் தொண்டர்களுடன் தி.மு.க. வில் இணைகிறார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் முறைப்படி இணைய முத்துசாமி முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


ஜெயலலிதாவெல்லாம் திருந்த போவதில்லை.கட்சிக்கு சமாதி கட்டிவிட்டு கொடைநாட்டில் தூங்க போய்விடுவார்.


ஒருவேளை இது நடந்தாலும் நடக்கும் ..........


எல்லோரும் அ.தி.மு.க.வை விட்டு போனாலும் கவலை இல்லை..உனக்கு என்று மன்னர்குடி சொந்தங்கள் உண்டு..அவர்கள் மட்டுமே நமக்கு போதும்..சசிகலாவை அ.தி.மு.க. தலைவர் ஆக்கு...சசிகலா அக்கா பசங்கள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலைவர் ஆக்கு..சசிகலா அண்ணன் பசங்களை..செயற்குழு உறுப்பினர் ஆக்கு..சசிகலா ஒண்ணுவிட்ட அண்ணன் பசங்கள கட்சியில் ஒவ்வொரு பதவி கொடுங்கள்..சசிகலாவின் ரெண்டுவிட்ட அக்கா பசங்கள கொள்கை பக்கத்தில் வைத்து கொள்ளுங்கள்..உங்கள் முன்னாள் வளர்ப்பு மகனையும் கூட வரசொல்லி விடுங்கள்..எல்லாம் சரியாகி விடும்..உண்மையான தொண்டர்களுக்கு இனி என்ன வேலை இருக்கு..அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு...எல்லாமே மன்னார்குடி கும்பலுக்கு மட்டும்தான்..அவர்களை வைத்து நீங்கள் கட்சியை வளர்க்க வாழ்த்துக்கள்.....

ஆனால் இதுதான் உண்மை என்பது எல்லா அ.தி.மு.க காரனுக்கும் தெரியும் ........




Wednesday, May 5, 2010

பகைமை பாராட்டாத தலைவர் கலைஞர்

திராவிட சமுதாயத்தை காக்கும்    ஒரே இயக்கம் தி.மு.க.தான்;    திருமண விழாவில் கருணாநிதி பேச்சு
முன்பெல்லாம்-ஏன் இப்போதும் கூட- சித்தூரார் என்றால், அது சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை யைத் தான் குறிக்கும். முசிறியார் என்றால் முசிறி சுப்பிரமணிய அய்யரைக் குறிக்கும். திருவாடுதுறையார் என்றால் திருவாடுதுறை ராஜரத்தினத்தைக் குறிக்கும். திருவெண்காட்டார் என்றால் திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளையைக் குறிக்கும். அதைப் போலவே திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேடப்பட்டியார்’’ என்றால், அது தம்பி முத்தையாவைக் குறிக்கும். (பலத்த கைதட்டல்) யாரும் முழுப் பெயரையும் ஊரோடு இணைந்த பெயரை உச்சரிப்பதில்லை, சேடப்பட்டி என்று தான் சொல்வார்கள்.

என்னிடத்திலே அவர் வேறு இடத்திலே இருந்து- நம்மை வசை பாடுகிறார் என்ற செய்தியை என்னிடத்திலே சொல்லுகின்ற தோழர்கள் கூட யார் அப்படி பேசியது என்று நான் கேட்டால், சேடபட்டி’’ தான் அப்படிப்பேசினார் என்று அவ்வளவு மரியாதையாகத் தான் சொல்வார்களே தவிர, முத்தையா என்று முழுப் பெயரையும் யாரும் சொன்ன தில்லை. அதனால் தான் எனக்குக் கூட திடீரென்று சேடபட்டி முத்தையா என்று சொன்னால், இவர் வேறு யாரோ ஒருவர் என்று கருதுகின்ற அளவிற்கு நிலைமை இருந்தது. ஆனால் தம்பி ஸ்டாலின் என்னிடத்திலே சேடபட்டி முத்தையா கூட தி.மு. கழகத்திலே சேருவதற்குத் தயாராக இருக்கிறார், சேருகிற நாளைச் சொல்லுங்கள், வசதியான நாளைச் சொல்லுங்கள் என்று கேட்ட போது, இது எப்படி நடந்தது என்று கேட்டேன். அவர் சொன்னார், அவர் மனதைத் திருத்தியது, அவருடைய மகன் மணிமாறன் என்று என்னிடத்திலே (கைதட்டல்) தம்பி ஸ்டாலின் சொன்னார். ஸ்டாலின் இளைஞர் அணி தொடங்கியதில் ஒரு லாபம் இருக்கிறது என்பதை நான் அப்போது தான் புரிந்து கொண்டேன்.

என்னுடைய கருத்தைக் கேட்காமலே கூட சேடபட்டியை திராவிட முன்னேற்றக் கழகத்தில் மீண்டும் இணைத்துக் கொள்ள ஸ்டாலினும், மணி மாறனும் கூட்டாகச் சதி செய்து- எனக்குத் தெரியாமலே அவரை இங்கே கொண்டு வந்து இணைத்து விட்டார்கள். நாங்கள் பாதை தவறியவர்கள், திரும்பி வந்திருக்கிறோம், எங்களிடம் அன்பு காட்டுங்கள்’’ என்று மிகுந்த பணிவன்போடு, மிகுந்த உணர்ச்சியோடு இங்கே தம்பி சேடப்பட்டி பேசியதை நீங்கள் எல்லாம் கேட்டீர்கள்.

நான் சென்று திரும்பியவர்களிடம் எப்போதுமே பகை பாராட்டியதில்லை, இன்னும் சொல்லப் போனால் காணாமல் போன பிள்ளைகளைக் கண்டுபிடித்து விட்டால் (கைதட்டல்) அந்தப் பிள்ளையும் ஓடி வந்து அம்மா’’ என்று மடியில் விழும். தாயும் ஓடி வந்து கண்ணே, மணியே’’ என்று முத்தங்கள் கொடுத்து சீராட்டி பாராட்டுவாள். அப்படித் தான் காணாமல் போன பிள்ளையாக இருந்து மீண்டும் கழகத்திலே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, கழகத்தின் பணிகளைச் செய்வதற்காக தன்னைத்தயார்படுத்திக் கொண்டு அதற்கேற்ற வகையிலே அந்த வட்டாரத்திலே உள்ள கழகத் தோழர்களின் பேரன்பைப்பெற்று இன்றையதினம் நம்முடைய இயக்கத்தின் சமுதாயப் புரட்சியாக, தொடர்ந்து நடைபெற்று வருகின்ற இத்தகைய திருமண முறையைக்கடைப்பிடித்து இன்று அவருடைய மகனுக்கு சுயமரியாதைத் திருமணத்தை இந்த மேடையிலே நடத்தி வைத்திருக்கிறார்.

சுயமரியாதை என்பது ஒரு இயக்கம்-நான் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியிலே பெரியார் பெயரால் அமைந்துள்ள மய்யத்தைத் திறந்து வைத்தேன். பெரியார் மய்யம் திறக்கப்பட்ட போது நான் சொன்னேன்- மய்யம் கொள்வதென்பது புயலுக்குத் தான் சொல்வார்கள்-பெரியார் மய்யம் கொண்டிருக்கிறார், டெல்லியிலும் மய்யம் கொண்டு விட்டார் என்று குறிப்பிட்டுச் சொன்னேன்.

மய்யம் கொண்ட புயல், அதோடு நின்று விடாது. பக்கத்திலே உள்ள பிரதேசங்களிலும் வீசும். பக்கத்திலே உள்ள பகுதிகளிலும் அதனுடைய தாக்கம் இருக்கும். அதைப் போல டெல்லியிலே மய்யம் கொண்ட பெரியார் மய்யத்தின் வேகம் பக்கத்து மாநிலங்களில், ஏன் அகில இந்தியாவிலே நிச்சயமாக வீசும், அந்தத் தாக்கம் இருக்கும், அந்தப் பாதிப்பு இருக்கும்.

பாதிப்பு என்பது பலன் தருகின்ற பாதிப்பாக- பகுத்தறிவுக்கு மேலும் மேலும் வலுவூட்டுகின்ற பாதிப்பாகத் தான் இருக்கும் என்ற கருத்தில் நான் இதைச் சொன்னேன். அதைப் போல தமிழகத்தில், தந்தை பெரியாரின் கொள்கைகள், சுயமரியாதை இயக்கத்தின் பெயரால், தன் மான இயக்கத்தின் பெயரால், இனத்தின் பெயரால், இன உணர்வின் பெயரால் எந்த அளவிற்கு இன்றைக்கு ஆரியம் ஆதிக்கம் பெற்றிருக்கின்றன என்பதை நீங்கள் எல்லாம் மிக நன்றாக அறிவீர்கள். அதைத் தான் இங்கே தம்பி சேடபட்டி பேசும்போது சொன்னார். தான் போன இடத்திலிருந்து-பாதை தவறி விட்டோம் என்று உணர்ந்த போது பாழும் கிணற்றிலே விழ நேரிட்டது என்று குறிப்பிட்டார்.

பாழும் கிணறோ, நல்ல கிணறோ அதைப்பற்றிக் கவலை இல்லை. இன்றைக்கு கிணற்றிலேயிருந்து தம்பி சேடபட்டி! உன்னை மீட்டு விட்டோம், நீ எங்களுடைய கரங்களிலே பத்திரமாக இருக்கிறாய் என்பதை எடுத்துச் சொல்லி-இந்தப் பகுத்தறிவு பாசறையில், சமதர்மப் பூங்காவில் தந்தை பெரியார் அன்றைக்கு விதைத்த விதை-பேரறிஞர் அண்ணா பரப்பிய மணம் - இவைகள் எல்லாம் கெடாமல் தொடர்ந்து காப்பாற்றுகின்ற சமுதாயப் பணியிலே ஈடுபட்டிருக்கின்ற இந்த இயக்கத்தில்-நீயும் எல்லா தம்பிமார்களைப் போல- ஒரு தம்பியாக இருந்து திராவிட இயக்கத்தைக் கட்டிக்காப்பாற்ற வேண்டு மென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அப்படிக் காப்பாற்றுகின்ற அந்தப் பொறுப்பும்-அந்த நிலையும்-நிச்சயமாக நம்முடைய சேடபட்டி முத்தையா அவர்களுக்கு உண்டு (கைதட்டல்) என்பதை நிரூபிக்கின்ற வகையிலே தான் அவரே சொன்னார்- திருமங்கலத்திலே நடைபெற்ற தேர்தலிலே எல்லா ஒன்றியங்களையும் விட தன்னுடைய மகன் மணிமாறன் ஒன்றியச் செயலாளராக இருந்து பணியாற்றிய அந்தப் பகுதியிலே தான் அதிக வாக்குகள் நமக்குக் கிடைத்தன என்று சொன்னார்.

இப்போது தான் எனக்குப் புரிகிறது-மணி,’’ மணி,’’ அதனால் இவர்கள் ஜெயித்தார்கள் என்று சில எதிர்க்கட்சிக்காரர்கள் சொன்னார்களே, இந்த மணி’’யினால் தான் நாம் ஜெயித்திருக்கிறோம் (பலத்த கைதட்டல்) என்பது எனக்குப் புரிகிறது. அப்படிப்பட்ட திறமையான ஒரு குடும்பம்- பகுத்தறிவு இயக்கத்திலே அறிவு வளமையான ஒரு குடும்பம். இடையிலே ஏற்பட்ட சில மனக்கசப்புகள்-உள்ளூரால் ஏற்பட்ட சில கொந்தளிப்புகள்- அல்லது நண்பர்களிடம் ஏற்பட்ட சில கசப்புகள்- அதன் காரணமாக பலர் நம்மிடமிருந்து பிரிய நேரிட்டிருக்கிறது. அப்படிப் பிரிந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு திராவிடர் சமுதாயத்தைக் கட்டிக் காக்கக் கூடிய ஒரேயொரு இயக்கம் திராவிட முன்னேற்றக்கழகம் தான் என்பதை உணர்ந்து-இங்கே வந்து கொண் டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் வருக வருக என்று நான் வரவேற்றிருக்கிறேன். அதைப்போல அந்தக் குடும்பத்தில் இன்றைக்கு நடைபெறுகின்ற இந்த இனிய மணவிழாவில் மணமக்களாம் மணிமாறன் அவர்களையும் அன்புச் செல்வி பாரதியையும் வாழ் வாங்கு வாழ வாழ்த்தினார்.


இன்று சென்னையில் தி.மு.க. தேர்தல் பணி செயலாளர் சேடப்பட்டி முத்தையா மகன் திருமணத்தை இன்று முதல்- அமைச்சர் கருணாநிதி நடத்தி வைத்து முதல்வர் பேசினார்.

Friday, April 30, 2010

மனித நேயமே நீதான் மு க ஸ்டாலினோ?

Latest indian and world political news information










காய்ச்சலுக்கு உட்கொண்ட மாத்திரையால் பார்வையிழந்த மாணவி சுரேகாவின் நிலைமையை நாளிதழ் செய்திகளின் வாயிலாக அறிந்த துணை முதல்வர் ஸ்டாலின், மாணவிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் கிடைக்க ஏற்பாடுகள் செய்தார்.

சுரேகாவுக்கு ஐதராபாத்தில் உள்ள பாஸ்டோன் மருத்துவமனையில் லென்ஸ் பொருத்தப்பட இருப்பதால், அங்கு செல்வதற்கு முன், தனக்கு உதவிக்கரம் நீட்டிய துணை முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்பினார். இதையறிந்த ஸ்டாலின், நேற்று மாலை 5 மணியளவில் மாணவி சுரேகா, அவரது பெற்றோர் தேவேந்திரன், கலாவதி, சகோதரர் நவீன்குமார் ஆகியோரை சந்தித்தார்.

மாணவியின் உடல்நலன், அவருக்கு இதுவரை அளிக்கப்பட்ட சிகிச்சை ஆகியவற்றை கேட்டறிந்த துணை முதல்வர், மேற்கொண்டு நடைபெறவுள்ள சிகிச்சைகள் நல்ல முறையில் நடைபெறும் என நம்பிக்கையும், வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொண்டார். சுரேகாவும், குடும்பத்தினரும் ஐதராபாத் செல்வதற்காக 10 ஆயிரம் ரூபாய் வழங்கிய துணை முதல்வர், மாணவிக்கு பார்வை கிடைப்பதற்கான அனைத்து செலவுகளையும் தானே ஏற்பதாகத் தெரிவித்து, வழியனுப்பி வைத்தார்.


விழிகொடுத்து உலக மக்களின் இதயத்தில் நீங்க இடம்பிடித்த வருங்கால தமிழகத்தை வழிநடத்தி செல்ல இருக்கும் துணை முதல்வரே நீர் பல்லாண்டு வாழ்க!