Saturday, September 18, 2010

குமரி மாவட்டம் தி மு க வின் கோட்டை என்பது நிருபணம்



தமிழக முதல்வரின் சீரிய ஆட்சியின் பயனாக தமிழகம் முழுவதும் உள்ள மாற்று கட்சியினர்கள் சாரை சாரையாக தி மு வில் இணையும் நிகழ்ச்சிகள் அன்றாடம் நடைபெற்றுவருவது நாம் அனைவரும் அறிந்ததே.

குமரி மாவட்டத்தில் உள்ள அதிமுக கட்சியின் முன்னணியினர் (தளவாய் சுந்தரத்தின்) துரோக செயல்களால் கொதிபடையும் அதிமுகஇனர் தமிழகத்தின் பொற்கால ஆட்சியாம் தமிழக முதல்வரின் செயல்பாடுகளால் ஈர்க்கபட்டு தி மு வில் இணையும் நிகழ்ச்சிகள் நடைபெற்று குமரி மாவட்ட அதிமுகவினர் முற்றிலுமாக தி மு வில் இணைந்ததின் காரணமாக இன்று குமரி மாவட்டம் தி மு கவின் கோட்டையாக மாறியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

அதை நிரூபிப்பது போன்று மீண்டும் ஒரு சம்பவம் நாகர்கோவிலில் நடைபெறும் தி மு க முப்பெரும் விழாவில் குமரி மாவட்ட அதிமுகவில் முக்கிய புள்ளியாக வலம் வந்த குமரி ஸ்டீபன் தி.மு.க.வில் சேர உள்ளதுதான்.

கன்னியாகுமரி பேரூராட்சி தலைவராக 2 முறை பதவி வகித்தவர் குமரி எஸ்.ஸ்டீபன். இவர் குமரி மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர், துணை செயலாளர், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
1988-ம் ஆண்டு ஜெயலலிதா தனி அணியாக பிரிந்தபோது அவருடன் இணைந்தார். அதன்பிறகு அ.தி.மு.க.வில் தீவிர பணியாற்றினார். 1993-94-ம் ஆண்டுகளில் குமரி மாவட்ட பால்வள தலைவராக இருந்தார்.
2 முறை பேரூராட்சி தலைவராக பணியாற்றிய அவர் 2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி வார்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அ.தி.மு.க.வின் கோஷ்டி பூசலே தனது தோல்விக்கு காரணம் என்று குமரி ஸ்டீபன், பகிரங்கமாக தனது கருத்துக்களை தெரிவித்ததால் ஓரங்கட்டப்பட்டார். அதன்பிறகு அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.
இந்தநிலையில் அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைய முடிவு செய்துள்ளார். வருகிற 20-ந் தேதி நாகர்கோவிலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் முப்பெரும் விழா நடக்கிறது. இதற்காக கன்னியாகுமரி வரும் கருணாநிதியை சந்தித்து குமரி ஸ்டீபன், தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைகிறார்.
இதுபற்றி குமரி ஸ்டீபனிடம் கேட்டபோது “கடந்த 20 ஆண்டு அரசியல் வாழ்வில் இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டேன். என்னிடம் நெருக்கமாக இருந்தவர்களை எனக்கு எதிராக, தேர்தலில் நிற்க வைத்து என்னை தோல்வி அடைய வைத்தார்கள். கட்சிக்காக உழைத்த எனக்கு எந்த பதவியும் தராமல் இருந்தனர். இதனால் எனக்கு மரியாதை தருகின்ற இயக்கத்தில் சேர முடிவு செய்துள்ளேன். நான் எந்த பிரதிபலனையும் எதிர்பார்த்து சேரவில்லை. ஆனால் தி.மு.க.வில் எனக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.
குமரி மாவட்ட அ.தி.மு.க.வில் முக்கிய புள்ளியாக வலம் வந்த குமரி ஸ்டீபன் தி.மு.க.வில் சேர உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு முறை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கன்னியாகுமரி வந்தபோது கடலில் ராட்சத கம்புகளை கட்டி அ.தி.மு.க. கொடியை பறக்க விட்டு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியவர் குமரி ஸ்டீபன் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment