Thursday, December 31, 2009

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நிகழ்வுகள்


உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வருகிற ஜூன் மாதம் கோவையில் நடக்கிறது. ஜூன் 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை 5 நாட்கள் இந்த மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி ஆலோசனைப்படி, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநாட்டு பணிகளை பல்வேறு பிரிவுகளாக நிறைவேற்ற 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இதன் மூலம் மாநாட்டு பணிகள் பிரித்து கவனிக்கப்படுகிறது. மாநாட்டை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து முடிவு எடுப்பதற்கான உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கலந்தாய்வு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடந்தது. முதல்- அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

மாநாட்டுக்கான 21 குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள், எம்.எல்.ஏ.க்கள், பத்திரிகையாளர்கள், கலைத்துறையினர் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்துவது பற்றி குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் கருத்துக்கள் அறியப்பட்டன. ஒவ்வொரு குழுவும் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.

முதல்- அமைச்சர் கருணாநிதி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். உலகம் முழுவதும் இருந்து மாநாட்டுக்கு வருபவர்கள் தங்குவதற்கான வசதிகள் செய்வது உள்பட பல்வேறு கருத்துக்கள் குறித்து ஆலோ சிக்கப்பட்டன.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ் அறிஞர்கள் பங்கேற்று சிறப்பிக்க தங்களது ஒப்புதல்களை தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், சவுதி அரேபியா, கென்யா, நார்வே, பின்லாந்து, பிரான்ஸ், வங்காளதேசம், நியூசிலாந்து, தென்கொரியா, ரஷியா, செக்குடியரசு, மொரீசியஸ் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து 1200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.

அவர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிப்பார்கள். அவர்களது சொற்பொழிவும் நடைபெறும். இவை அனைத்தும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.இவ்வாறு முதல்- அமைச்சர் கருணாநிதி தனது பேச்சில் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள் விவரம்:-

அமைச்சர்கள் அன்பழகன், துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, பொன்முடி, மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சுதர்சனம், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தி.க. தலைவர் கி.வீரமணி, மூவேந்தர் முன்னணி கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், இந்திய கம்யூனிஸ்டு சிவபுண்ணியம், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன்.

கவிஞர்கள் வாலி, வைரமுத்து, கனிமொழி எம்.பி., பா.விஜய், குமரி அனந்தன், ஜெயகாந்தன், பட அதிபர்கள் ஏவி.எம்.சரவணன், அபிராமி ராமநாதன், நடிகர் சரத்குமார், ராமநாராயணன்.

தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்திஆதித்தன், இந்து என்.ராம், நக்கீரன் கோபால், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜேந்திரன், எம்.ஏ.எம்.ராமசாமி, சுப.வீரபாண்டியன், நன்னன், அவ்வை நடராஜன், காதர் மொய்தீன், பொன்னம்பல அடிகளார், பால் தினகரன், எம்.எல்.ஏ.க்கள் யசோதா, காயத்திரி தேவி, சிறப்பு அதிகாரி அலாவுதீன் உள்பட 21 குழுக்களின் தலைவர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Wednesday, December 30, 2009

அமைச்சர் சுரேஷ்ராஜன் நடவடிக்கை


அஞ்சுகிராமம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கன்னியாகுமரி அருகே உள்ள விவேகானந்தா கல்லூரியில் ஏராளமான மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு செல்வதற்கு உரிய பஸ் வசதியின்றி சிரமப்பட்டு வருவதால் விவேகானந்தா கல்லூரி வழியாக பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.

ஹெலன் டேவிட்சன் எம்.பி. மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று விவேகானந்தா கல்லூரி வழியாக பஸ் இயக்க முயற்சி மேற்கொண்டதன் அடிப்படையில் அமைச்சர் சுரேஷ்ராஜன் அறிவுரையின்பேரில் கால்கிணறில் இருந்து அஞ்சுகிராமம் வழியாக கன்னியாகுமரிக்கு இயக்கப்பட்டு வருகின்ற பஸ்சை விவேகானந்தா கல்லூரி வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த பஸ் தினமும் காலை 8.30 மணிக்கு காவல்கிணறிலிருந்து புறப்பட்டு அஞ்சுகிராமம், விவோகானந்தா கல்லூரி வழியாக கன்னியாகுமரி செல்லும். பஸ்வழித்தட தொடக்க விழா அஞ்சுகிராமம் பஸ் நிலைய வளாகத்தில் நடந்தது. ஹெலன்டேவிட்சன் எம்.பி.முன்னிலை வகித்தார். அமைச்சர் சுரேஷ்ராஜன் பஸ்வசதியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அஞ்சுகிராமம்பேரூராட்சித்தலைவர் வேலாயுத பெருமாள், போக்குவரத்துக்கழக துணை மேலாளர் (வணிகம்) சாம்ஜெயராஜ், கன்னியாகுமரி கிளை மேலாளர் அழகேசன், செய்து மக்கள் தொடர்பு அலுவலர்தமிழ்இனியன்,போக்குவரத்துக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் தாணப்பா, வார்டு உறுப்பினர் ஜெயகொடி, விவேகானந்தா கல்லூரி மாணவர் பேரவை தலைவர் பார்த்தீபன், மாணவிகள் பிரதிநிதி ஸ்ரீஜா, செந்தில் முருகன், முன்னாள் மாவட்ட வேளாண் விற்பனைக்குழுத்தலைவர் சுயம்புலிங்கம், தொலபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் தாமரைபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tuesday, December 29, 2009

கலைஞரின் காப்பிட்டு திட்டம்



ஏழை எளிய மக்களைப் பாதித்திடும் கொடிய நோய்களிலிருந்து அரசு மேற்கொண்டுவரும் பல் வேறு மருத்துவ நலத்திட்டங்களில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பினை பெற்றுப் பாராட்டுகளை குவித்து வருகிறது.


இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை 22 ஆயிரத்து 443 பேருக்கு ரூ. 76 கோடியே 63 லட்சம் செலவில் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த சிகிச்சைகளை அளிப்பதில் தனியார் மருத்துவ மனைகளில் பங்கு பாராட்டத்தக்கது.


கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் வெற்றிக்கு மிகுந்த ஒத்துழைப்பு நல்கி வரும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சென்னை செனாய் நகரிலுள்ள “பில்ராத்” மருத்துவமனை, ரத்தினவடிவு என்ற ஏழை விவசாயிக்கு இத் திட்டத்தின்கீழ் முதல் இருதய அறுவை சிகிச்சையை பெற்றிகரமாகச் செய்த மருத்துவமனை. இங்கு இதுவரை 400-க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு அறுவை சிகிச்சைகளைச் செய்து சாதனை படைத்துள்ளது.


இதனையொட்டி “பில் ராத்” மருத்துவமனையின் இயக்குநர்கள் நாராயண சாமி, கோபி, அறுவை சிகிச்சை நிபுணர் தியாகராஜ மூர்த்தி, மயக்க மருந்து நிபுணர்கள் நெடுமாறன், மகாதேவன் ஆகியோர் இன்று முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப் படுத்தியமைக்காக தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.


அப்போது அவர்கள் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் கூறியதாவது:-


பில்ராத் குடும்பத்தின் சார்பில் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மிகச்சிறந்த முறையில் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களின் ஆதரவோடு செயல்பட்டு வருகிறது.


இந்த திட்டம் வெற்றியடைவதற்கு முக்கிய காரணமாக செயல்பட்டு வரும் தாங்களும், தங்கள் தலைமையின் கீழ் செயல் படுகின்ற தமிழக அரசுதான் காரணம்.


மேலும், நல்ல முறையில் நடைபெற்று வரும் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் எங்களையும் பங்கு பெறச்செய்து 400-க்கும் மேற்பட்ட ஏழை எளியோர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய அரிய வாய்ப்பை ஏற்படுத்தியக் கொடுத்த தங்களுக்கு, எங்கள் பில்ராத் மருத்துவமனையின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழ்நாட்டு மக்களுக்கு தாங்கள் செய்யும் சீரிய பணி மேலும் பல்லாண்டு காலம் தொடர எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Wednesday, December 23, 2009

தி.மு.க. அமோக வெற்றி - மக்களின் கருத்து


நடைபெற்று முடிந்த இடை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதின் விளைவாக பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளுக்கு மக்களிடம் உண்டான கருத்துகளை இப்பகுதில் பதிவிடுகிறேன்.

மாலைமலர்

Balasuresh said: அனிதா எங்கள் ஏரியாவுக்கு நல்லது செய்தார், அதனால் அவருக்கு இவ்வளவு மிக பெரிய வெற்றி கார்த்திக் said: இனி உங்களுக்கு வெற்றி தான் தளபதி..... எஸ்.வெள்ளைசாமிMA said: டாக்டர் கலைஞர் ஆட்சி நடக்கும் போதாவது இலவச தொலைகாட்சி பெட்டி இலவச எரிவாய்வு அடுப்பு இலவச i08 அவசர அம்புலன்ஷ் உதவி ஒரு ரூபாய்க்கு படி அருசி இன்னும் என்னில் அடங்க நலத்திட்டம் மீண்டும் நாளை தேர்தல் வைத்தாலும் நடக்கும் அரசுதான் வரும் இலங்கை தமிழன் வாழ்வு கலைஞர் ஒருவரால் மட்டும் முடியும் இவர் என் வயதையும் சேர்த்து நீண்டநாள் வாழவேண்டும்
ishaq said: இது அ.தி.மு.க வின் வீழ்ச்சியை காட்டுகிறது.

Karthik said: இனி எவனாலும் தி.மு.க வை ஒன்னும் பண்ண முடியாது.......... வாழ்த்துக்கள் துணை முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் .அவர்களே ..........

வே முருகன் said: இடை தேர்தல் முடிவுகள் தமிழ் நாட்டில் பலமான எதிர் கட்சி மக்களுக்காக போராடும் எதிர்க்கட்சி இல்லாததை நிரூபித்துள்ளது. எனவே எதிர் கட்சிகள் சுய நலம் இன்றி பொது நலத்துடன் உழைத்து வரும் பொது தேர்தலில் நல்லாட்சி அமைய வேண்டும்.

சோகம் ஷபீக் said: இது மக்களின் நல்லதொரு தீர்ப்பு. இனியேனும் நல்லதொரு அரசியல் போட்டி வர வேண்டும். தேவை இல்லாத குற்றச்சாட்டுகளை நிறுத்தி, நல்லவற்றை பாராட்டி, தவறு செய்யும்போது சுட்டிக்காட்டும் நல்லதொரு அரசியல் பண்பாடு வரவேண்டும். முன்பு இருந்த தி.மு.க. இப்போது இல்லை என்பதை உணரவேண்டும். நல்லது செய்யும்போது பாராட்ட வேண்டும், அது இனிவரும் அரசியல் தலைவர்களுக்கு ஒரு உதாரணமாக அமையும். மரியாதைக்குரிய தலைவர், முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், துணை முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களது நல்வாழ்த்துக்கள். போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் தொடருங்கள் உங்களின் நல்லதொரு அரசியல் பணியை. இன்னும் சிறப்பாக உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.

Fareed Indonesia said: This is good result for tamil nadu. Congratulation Mr. Stalin. Following party no more in tamil nadu in futher election TMDK, PMK, MDMK, CPI,and CPI-M, BJP.

வாலி சுலைமான் said:
த‌மிழ‌க‌ம் ந‌டிக‌ர் ந‌டிகைக‌ளின் கூடார‌ம‌ல்ல‌ என்றும் இனி அது ஒரு சுய‌ சிந்த‌னையுட‌ன் கூடிய‌ அர‌சிய‌ல் பார்வையுட‌ன் ந‌டைபோட‌ ஆர‌பித்துள்ள‌து என்ப‌துவுமே இந்த‌ தேர்த‌லின் முடிவு. இனி தேவையில்ல‌ம‌ல் EVம் மெசினில் குற்ற‌ம் சொல்வ‌து , க‌லைஞ‌ருக்கு புத்தி சொல்வ‌து போன்ற் காம‌டிக‌ளை நிறுத்திக்கொன்டு க‌லலைஞ‌ருக்கு இணையான‌ அதாவ‌து தெளிவான‌ அர‌சிய‌ல் செய்தால் ம‌ட்டுமே திமுகவை வெல்ல‌ முடியுமென்ப‌தை ம‌ற்ற‌ க‌ட்சிக‌ள் உணர வேண்டும். தெளிவான‌ தீர்ப்பு த‌ந்த‌ திருசெந்தூர் வ‌ந்த‌வாசி ம‌க்க‌ளுக்கு ந‌ண்றி. தேமுதிகவென்ப‌து ம‌க்க‌ளையும் க‌ட‌வுளையும் ந‌ம்பி நின்று ரெண்டுபேருமே ஏமாற்றிவிட்ட‌ன‌ர் என்ப‌தால் இந்த‌ அசிங‌க‌த்தை ம‌றைத்து இத்துட‌ன் மூடுவிழா ப‌ன்னுவ‌து சால‌ சிற்ந்த‌து. அல்ல‌து இந்த‌ அறைத்த‌மாவையே அறைக்காம‌ல் இருப்பது ந‌ல்ல‌து.
தினேஷ் (ராசிபுரம் ) நாமக்கல் said: மக்கள் நல்ல தீர்ப்பு periasamy.l said: social welfare scheemes reached towards the downtrodden especially health insurance. which ushered victory for DMK, this is the token victory for forthcoming general election 2011.

தினமலர்
this is a greatest win for dmk party , because dmk govt provide some good activities to the pepple so only he win the election
by s kannan,madurai,India

கலைஞருக்கு கிடைத்த நியாய வெற்றி. அவர் நல்லாச்சிக்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள்
by n ஷீலா தேவி ,chidambaram,இந்திய

தி.மு.க.// வெற்றிக்கு. தமிழ் நெஞ்சங்கள்லுக்கு நன்றி.// ஜெயலலிதாவுக்கு. ஜனநாயகம்.என்ன. என்று தெரியாது
by மு.வைரக்கண்ணு.,Doha Qatar,India

Great job done by Mr. Anitharathakrishnan. Good Luck to stay with DMK in future
by T Sooravan,Tiruchendur,India

தலைவர் கலைஞர் நல்லாட்சியில் நல்ல பல திட்டங்கள் அறிவித்து செய்தும்கட்டியுள்ளர்கள் அதற்கு கிடைத்த வெற்றி தன இது
by j சங்கர்,kanchipuram,India

மு.க. அழகிரியை நம்பினால் தி.மு.க எந்த தேர்தலிலும் தோற்காது.
by s sundar,MADURAI,இந்திய

ஆயிரம் பேர் அயிரம் சொல்லட்டும், தி மு க வெற்றி பெற்றது அவர்களின் நல்லாட்சி தான் காரணம். எல்லாம் மக்களும் பணம் வாங்கி கொண்டு ஒட்டு போட்டார்கள் என்பது மகா மகா முட்டாள்தனமான சிந்தனை. மக்கள் எப்பொழுது யாருக்கு ஒட்டு போடா வேண்டும் என்பது நன்றாக தெரியும்.
by G ASHOKAN,sudan,சுடன்

இடைத்தேர்தல் வெற்றி பற்றி கலைஞர் வார்த்தைகளில் கூற வேண்டுமானால்:
''''சொல்லெடுத்துப் புகழ் மாலை சூட்டுவோர் சூட்டட்டும்
கல்லெடுத்துப் பழிதூற்றி காய்ந்திடுவோர் காயட்டும்
நில்லாது உன் பயணம் நெஞ்சுக்கு நீதியெனில்
வெல்லாது விடுவதில்லை வேள்வியது ஈதேகாண்''''
by அ ஜெயப்பிரகாஷ்,Dindigul,இந்திய

என்ன தான் ஆளுங்கட்சி பணம் கொடுத்தாலும், இவ்வளவு பெரிய வித்தியாசத்தை பணத்தால் பெற முடியாது. மக்கள் அடிப்படை வசதிகளுடன் அன்றாட பிரச்சைனகள் இல்லாமல் இருப்பதனால் தான் இவ்வளவு பெரிய வித்தியாசம்.. முந்திய அதிமுக வின் வாக்குகளுக்கும் இப்போதைய வாக்குகளுக்கும் வித்தியாசம் பாருங்கள். அதிமுக 28 சதவீதம் வாக்கு உள்ள கட்சி என்றால் அந்த வாக்குகள் எங்கே போயிற்று, அவர்கள் ஏன் கட்சி மாறினார்கள். அனிதா ராதா கிருஷ்ணன் மீதுள்ள பாசமா?. ஜெயலலிதா அவரை போன்ற வேகமாக பனி புரியும் ஒருவரை கட்சியில் இருந்து நீக்கியது பெரிய தவறு. அது தான் திருசெந்தூர் இல் தெரிந்த உண்மை. உள்ளூர் மக்கள் நன்கு அறிவார்கள்.
by R சூர்யா,Chicago,United ஸ்டேட்ஸ்

வாழ்க டாக்டர் கலைஞர் தொடரட்டும் அவரது வெற்றிகள்
by S MURUGAN,SIVAKASI,இந்திய

அய்யா நான் திமுக, அதிமுக ரெண்டு கட்சியும் கிடையாது. ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்கள் கடும் உழைப்பு, விடா முயற்சி, சுறுசுறுப்பு etc. கலைஞருக்கு மிகுதியாக உள்ளன. ஆனால் ஜெஜே ஆண்டுக்கு அறுபது முறை ஓய்வு எடுக்கச்சென்று விடுகிறார். கலைஞர் சிறுவயதில் இருந்தே தன்னை மக்களோடு மக்களாக தன்னை இணைத்து உழைத்து வருகிறார். அதற்கு மக்கள் அளித்த பரிசு தான் இந்த வெற்றி. 2001 பொது தேர்தல் தோல்விக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்பதாக கலைஞர் அறிவித்தார். ஆனால் ஜெஜே என்றுமே மக்கள் தீர்ப்பை ஒப்புக்கொண்டதில்லை என்பதே இன்று வரை உள்ள வரலாறு. தேர்தல் கமிஷன் நடந்து முடிந்த தேர்தலை எந்தளவுக்கு நியாயமாக நடத்த முடியுமோ அந்தளுவுக்கு நியாயமாகவும் transparent- ஆகவும் நடத்தி உள்ளது. இவ்வளவுக்குப்பிறகும் இந்தம்மா தோல்வியை ஒப்புக்கொள்ள மறுப்பது வேடிக்கையாக உள்ளது. தோல்வியை ஒப்புக்கொள்ள தைரியம் இல்லாத ஒரு கோழையிடம் நாம் நாட்டை ஆள்வதற்கு இரண்டு முறை ஒப்படைத்தோம். வெட்கக்கேடு!
திமுக மற்றும் கலைஞருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
by S வினோராதேஷ்,chennai,India

கலைஞரின் வெற்றி பயணங்கள் தொடரட்டும்.
by T காளிதாஸ்,DINDIGUL,India

கலைஞர் வாழ்க ! இதே போல் பொது தேர்தலிலும் அதிகமான வெற்றி பெற வாழ்த்துக்கள்
by p Siddharthan,Doha ,கத்தார்

அண்ணன் அழகிரி அவர்களே
சாதிக்க பிறந்தவன் நீங்கள்
தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்
உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி இனி உங்களுக்கும் திமுகவுக்கும் வெற்றி தான்
by விஜி,chennai maduravoyal ,India

Though I am an AIADMK sympathiser, I too believe that DMK this time is not doing anything bad and hence people opting for it in by-elections. Also it is good for any constituency to vote for ruling party rather than opposition for its development. A request to Madam Jayalalitha - If you want to win, comeout of the van during electioneering, mingle with people, and stop giving routine speeches. To other political parties, especially for DMDK actior Mr. Vijayakanth, please leave politics, you are not popular and you can never become Chief Minister. Though both DMK and AIADMK are to be blamed for issuing money, gits etc during elections, I request both these big parties to please not spoil public opinion indirectly.
by D. Srinivasan,Abu Dhabi,United Arab எமிரேட்ஸ்

வெற்றி என்பது பட்டாம்பூச்சி....மாறி மாறி மலர்களில் அமரும்....ஆனால் அத்தனை மலர்களும் தி.மு.க வின் தோட்டத்தில் தான் மலரும்....
by S SASIKUMAR,VALAYAPALAYAM,ATHIPALAYAM,P.O KARUR DT,இந்திய

நிச்சயமாக இந்த வெற்றி திமுக அரசின் சாதனைகளுக்கான வெற்றியே..
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டீவி, கலைஞர் காப்பீட்டு திட்டம் இன்னும் பல திட்டங்களின் மூலமே இந்த வெற்றி கிடைத்துள்ளது...

பணம் கொடுத்து வெற்றி பெற்றார்கள் என்று கூறும் மாக்கள் தயவு செய்து சிந்தியுங்கள்.. அதிமுகவும் தேமுதிகவும் ஒரு பைசா கூட கொடுக்காமல் தான் இருந்தார்களா? இடைத்தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் என்றாலும் பணம் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான்.. இது அதிமுக ஆட்சியில் இருந்த போதும் நடந்தது தானே?

மக்களுக்கு நல்லது செய்பவர் யாராகினும் வரவேற்போம் வாழ்த்துவோம்..
தொடரட்டும் கலைஞரின் நல்லாட்சி..
by M Mohamed Rafiq,Dubai,United Arab எமிரேட்ஸ்

தி.மு.க வின் வெற்றிக்கு வாழ்த்துக்கள், இங்கே சிலபேர் தி.மு.க வின் வெற்றியை குறை கூறுகின்றனர். தி.மு.க வை தவிர இப்போதைய சூழ்நிலையில் எந்த கட்சி நல்ல திட்டங்களை தீட்ட செயல்படுத்தமுடியும். நான் ஒன்றும் தி.மு.க மிக சிறந்த ஆட்சி புரிகிறது என்று சொல்லவில்லை. ஆனால் மற்ற கட்சி ஆட்சிகளை விட நல்ல ஆட்சி புரிகிறது. அ.தி.மு.க விற்கு துணை நிற்கும் தொண்டர்களே எனக்கு கூறுங்கள் கடந்த ஐந்து ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேறிய மிக சிறந்த திட்டங்களை பட்டியலிட முடியுமா. ஆனால் என்னால் தி.மு.க ஆட்சியில் நடந்துள்ள நல்ல திட்டங்களை என்னால் பட்டியலிட முடியும். மேம்பாலங்களில் ஊழல் உள்ளது ஆனால் எத்தனை பயன் நமக்கு.

இப்போது நமது துணை முதல்வர் அடுத்த முதல்வர் ஆக நாம் தான் உதவ வேண்டும். அவர் அவரது மேயர் பதவி காலத்தில் எவ்வாறு பணி புரிந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போதுள்ள நிலையில் தமிழகத்தில் சிறந்த ஆட்சி செய்யும் திறமை நமது தளபதி அவர்களால் மட்டுமே முடியும்.
by A மணிகண்டன்,Singapore,சிங்கப்பூர்

இந்த வெற்றி என்பது தமிழக மக்கள் கொடுத்த நல்ல உண்மையான வெற்றி தான். இது கலைஞரின் சாதனைக்கு கிடைத்த வெற்றி. இது பணத்திற்கு கிடைத்த வெற்றி அல்ல. நம் மக்கள் எவ்வலவே பணம் வாங்கினாலும் வோட்டு என்பது எந்த கட்சிக்கு போட வேண்டுமோ அங்கு தான் போடுவார்கள். வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்.
நடுவிக்கோட்டை கே. குமார், நியூ டெல்லி
by K Kumar,New Delhi ,இந்திய


Congratulation Mr. DCM & Mr. Alagiri Sir,

Now you have shut those people’s mouth, who speaks abusively about you and your father. You have proved time and time again, you could do it.
This is the victory for your rule and your achievements. It’s clearly proved that all your recent plans reached common person, that’s why the outcome was reflected on the election result.

I don’t think JJ could stand in front of you. She should just quit her political life and take rest in KODANADU, as she does now.

Those stupidest people comment as below must stop talking, as the voting fully covered by video coverage and the central force had been used and ADMK had given money to people too.

1. The votes are bought over for money
2. The booths are captured by DMK
3 .The police helps DMK

So, Tamil Nadu people have wake up from sleep and no one could win by their empty promises, those fulfill their promise only could win and sustain.
by T jopet,singapore,Singapore

புரட்சி தலைவர் ஆரம்பித்த கட்சி, இன்று காணும் விழ்ச்சிக்கு முழு காரணம் ஜெயலலிதா அம்மையார் தான். கட்சி நடத்துவதை விட்டு விட்டு அம்மா நிம்மதியாக கொடநாட்டில் ஓய்வு எடுக்கலாம். புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாகிவிட்டது கேப்டனின் கதி. இனி திமுக.வை யாராலும் வீழ்த்த இயலாது என்பது தெளிவாகத தெரிகிறது. வாழ்க,வளர்க குடும்ப அரசியல்...மக்ககளுக்கு நல்லது செய்தால் சரி
by K இசக்கி முத்து,Kharagpur,இந்திய

இது திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் கலைஞர் அரசின் அரும் பெரும் சாதனைக்கும் கிடைத்த வெற்றி
by குரு,chennai,India

IT IS A VICTORY FOR PERFORMANCE. DMK Govt. implemented the 6 th pay commision reports and enhanced pension and family pension for about 15 lakh people. If we account for the family members, then the total benefitted will be higher than 50 lakhs. Further people who benefitted by the free tv and gas stove programme will vote only for DMK.
On the other hand nobody would have forgotten the termination order issued by JJ for the govt. servants...It is certain that DMK will win in future elections also. The trend will change only when DMK commits a gross mistake.
Tamil nadu People are not idiots.They are very clever and honest. Only the persons who call them as idiots are idiots..
Please realize.
by P.A. Subramanian,எதியோபியா

அய்யா அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனம்மார்ந்த வாழ்த்துக்கள். இந்த வெற்றிக்கு வித்திட அண்ணன் அய்யா அழகிரி அவர்களை வணங்குகிறோம். நல்ல ஒரு மனித நேய மனிதருக்கு வாக்களித்த திருச்செந்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி .
by D Ramaraj. M.C,tenkasi,India

தி மு க வின் சொன்னதை செய்வோம். செய்வதை சொல்வோம் பாலிசிக்கும் தி மு க வின் தொண்டர்களின் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும். இந்த வயதிலும் அயராது உழைக்கும் தி மு க வின் தலைவருக்கு பாராட்டுக்கள்.
by R.V சுப்பையா,doha,Qatar

இந்த மேட்டுக்குடி மக்களுக்கு கலைஞரை பார்த்தாலே எரிச்சல். அவர் செய்யும் நல்ல செயல்களை தூற்றுவார்கள். வெற்றி கண்டால் சாபம் கொடுப்பார்கள். இவர்களை திருத்தவே முடியாது. எத்தனையோ கூரை வீடு குடியானவர்கள் படித்து காரை வீட்டுக்கு முன்னேறியுள்ளர்கள். தற்பொழுது மேலை நாடுகளுக்கும் செல்கிறார்கள். இதெல்லாம் dmk வின் நாற்பது ஆண்டு சாதனை. இதுதான் உண்மை.
by GR KRIS,chennai,India

தமிழக முதல்வரின் மக்கள் நல திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி.
100% பாதுகாப்புடன் எந்த வித சம்பவங்களும் இல்லாமல் நடந்த தேர்தல் என்று அனைத்து ஊடகங்களிலும் கூறப்பட்டது.
அம்மா கொடநாடு சென்று உண்டு ஒய்வு எடுக்கலாம். நடிகர்கள் புது பட பூஜை போட்டு கதாநாயகியோடு டூயட் பாடலாம்.
வாழ்த்துகள்
by K Tamilan,DOHA,கத்தார்

இது திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் கலைஞர் அரசின் அரும் பெரும் சாதனைக்கு கிடைத்த வெற்றி. இனியாவது மற்ற அரசியல் கட்சிகளும் பொது மக்களும் இந்த நல்ல அரசை குறை சொல்வதை நிறுத்த வேண்டும். எல்லா இலவசங்களையும் அனுபவித்து கொண்டு இந்த அரசை குறை கூறுபவர்களை என்ன வென்று சொல்ல. மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் , மு.க.அழகிரி மற்றும் தொண்டர்களின் சீரிய அரசியல் பணியே இந்த முழு வெற்றிக்கு காரணம். இந்த அரசை குறை கூறுவதை விட்டு விட்டு இனி ராமதாஸ், வைகோ, நல்ல கண்ணு, பாண்டியன் போன்றோர்கள் தங்கள் கட்சி ஏன் தோல்வியுற்றது என்பதை பற்றி ஆராய வேண்டும். முக்கியம்மாக ராமதாசின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது என்றே கருதலாம. கண்டிப்பாக கலைஞர் இனி அவரை கூட்டணியில் சேர்த்து கொள்ளவே கூடாது. ஏனென்றால் ராமதாசை என்றுமே நம்ப முடியாது. இந்திய அரசியலில் ஏன் உலக அரசியலிலே அவரை போல் கட்சி மாறியவர்கள் யாவருமே இருக்க முடியாது. வாழ்க கலைஞர்.. வளர்க இந்த அரசின் நற்பணிகள்...
by V ஜோசப் இம்மானுவேல் ,Chennai,India

இதோ அம்மாவின் அறிக்கை தயார் ''பணநாயகம் ஜெயித்துவிட்டது, நாங்கள் தோற்கவில்லை, நரேஷ் குப்தா மின்னணு இயந்திரத்தில் எல்லா வாக்குகளும் தி மு க விற்கு விழும்படி செய்து விட்டார்.
by A.M ரபீக்,kuwait,Kuwait