Friday, December 11, 2009

கலைஞரின் பொற்கால ஆட்சி





சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த முறை தி.மு.க. ஆட்சியில் இருந்த போது 10 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும். மேலும் பல பாலங்கள் மற்றும் போக்கு வரத்துக்கான சுரங்கப்பாதைகள் அமைக்க முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.

அதன்படி 2008-ஆம் ஆண்டு சென்னையில் ரூ.46 கோடி செலவில் 3 மேம் பாலங்கள் கட்டப்பட்டன. அதை முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.அது தவிர மேலும் 4 மேம்பாலங்கள், 2 சுரங்கப்பாதைகள் கட்டப்படுகின்றன. ரூ.150 கோடி செலவில் இந்த பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது சென்னை மாநகராட்சி சார்பில் ஆலந்தூர் சாலை மேம்பாலம், டர்ன்புல்ஸ் சாலை - செனடாப் சாலை சந்திப்பு மேம்பாலம், ஜோன்ஸ் சாலை வாகன சுரங்கப்பாதை ஆகியவை ரூ.37 கோடியே 85 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு நந்தனம் பசும்பொன் முத்து ராமலிங்கம் சாலையில் நடைபெற்றது.

முதல்-அமைச்சர் கருணாநிதி இவற்றை திறந்து வைத்து பேசினார். துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். மேயர் மா.சுப்பிரமணியன் விழாவுக்கு தலைமை தாங்கினார்.

விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். சென்னை மாநகராட்சி இணை ஆணையர் ஆசிஷ் சாட்டர்ஜி நன்றி கூறினார்.

விழாவையொட்டி புதிய பாலங்கள், சுரங்கப்பாதை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்க வரும் முதல்-அமைச்சர் கருணாநிதி, துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது.

No comments:

Post a Comment