Wednesday, December 30, 2009

அமைச்சர் சுரேஷ்ராஜன் நடவடிக்கை


அஞ்சுகிராமம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கன்னியாகுமரி அருகே உள்ள விவேகானந்தா கல்லூரியில் ஏராளமான மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு செல்வதற்கு உரிய பஸ் வசதியின்றி சிரமப்பட்டு வருவதால் விவேகானந்தா கல்லூரி வழியாக பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.

ஹெலன் டேவிட்சன் எம்.பி. மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று விவேகானந்தா கல்லூரி வழியாக பஸ் இயக்க முயற்சி மேற்கொண்டதன் அடிப்படையில் அமைச்சர் சுரேஷ்ராஜன் அறிவுரையின்பேரில் கால்கிணறில் இருந்து அஞ்சுகிராமம் வழியாக கன்னியாகுமரிக்கு இயக்கப்பட்டு வருகின்ற பஸ்சை விவேகானந்தா கல்லூரி வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த பஸ் தினமும் காலை 8.30 மணிக்கு காவல்கிணறிலிருந்து புறப்பட்டு அஞ்சுகிராமம், விவோகானந்தா கல்லூரி வழியாக கன்னியாகுமரி செல்லும். பஸ்வழித்தட தொடக்க விழா அஞ்சுகிராமம் பஸ் நிலைய வளாகத்தில் நடந்தது. ஹெலன்டேவிட்சன் எம்.பி.முன்னிலை வகித்தார். அமைச்சர் சுரேஷ்ராஜன் பஸ்வசதியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அஞ்சுகிராமம்பேரூராட்சித்தலைவர் வேலாயுத பெருமாள், போக்குவரத்துக்கழக துணை மேலாளர் (வணிகம்) சாம்ஜெயராஜ், கன்னியாகுமரி கிளை மேலாளர் அழகேசன், செய்து மக்கள் தொடர்பு அலுவலர்தமிழ்இனியன்,போக்குவரத்துக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் தாணப்பா, வார்டு உறுப்பினர் ஜெயகொடி, விவேகானந்தா கல்லூரி மாணவர் பேரவை தலைவர் பார்த்தீபன், மாணவிகள் பிரதிநிதி ஸ்ரீஜா, செந்தில் முருகன், முன்னாள் மாவட்ட வேளாண் விற்பனைக்குழுத்தலைவர் சுயம்புலிங்கம், தொலபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் தாமரைபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment