Wednesday, December 16, 2009

அ தி மு க.,வின் லட்சணம்......


இன்று வாய் கிழிய பேசிவரும் அதிமுக தான் முதல் முதலில் தேர்தல் காலங்களில் ஜிமிக்கி, குடம், சேலை என்று வாக்காளர்களை கவரும் அற்புதமான மார்கெட்டிங் நடவடிக்கையை முன்னோடியாக அறிமுகம் செய்தது.


வந்தவாசி
வந்தவாசி தொகுதியில் அ.தி.மு.க.,வினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய துவங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு முதல் அ.தி.மு.க.,வினர் வீடு, வீடாக சென்று ஒரு வாக்காளருக்கு 200 ரூபாய் வீதம் பட்டுவாடா செய்து வருகின்றனர்.

வந்தவாசி தொகுதியில், அ.தி.மு.க.,வினர் பண வினியோகம் செய்த போது, கரைவேட்டியை கழற்றி விட்டு லுங்கி, பேன்ட்டில் வலம் வந்தனர். நேற்று முன்தினம் முதல், அ.தி.மு.க.,வினர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், ஓட்டுக்கு 200 ரூபாய் வீதம் பண வினியோகம் செய்யத் துவங்கி உள்ளனர்.பண வினியோகத்தின் போது, தி.மு.க.,வினர் பிடித்து போலீசிலோ, தேர்தல் ஆனையத்திடமோ ஒப்படைக்கலாம் என்கிற சந்தேகம் அ.தி.மு.க.,வினருக்கு உள்ளது. இதனால், பண வினியோகத்தின் போது கரை வேட்டிகளை கழற்றி விட்டு லுங்கி, பேன்ட்டில் செல்கின்றனர்.இத்தனை நாள் கரைவேட்டிகளால் நிறைந்து வழிந்த தேர்தல் அலுவலகங்களில், பண வினியோகம் நடக்கும் போது அடையாளத்திற்கு கூட கரை வேட்டியைக் காண முடியவில்லை.

திருசெந்தூர்
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரின் ஓட்டலில் இருந்து, 31 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சுற்றுலா துறை ஓட்டல் உள்ளது. இதனை தற்போது அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தனது நண்பரின் பெயரில் குத்தகைக்கு எடுத்து, விஜய் கிளாசிக் என்ற பெயரில் நடத்தி வருகிறார். நேற்று அந்த ஓட்டல் அறைகளில் கோடிக்கணக்கில் பணம் மறைத்து வைத்திருப்பதாகவும், திருச்செந்தூர் தேர்தலில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க உள்ளதாகவும், போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. துணைகமிஷனர் மாணிக்கராவ் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.


ஒரு அறையில் ஒரு லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் இருந்தது. ஆனால், அந்த பணத்திற்கு யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. ஊத்துமலை சுப்பிரமணியன், அப்பாத்துரை ஆகியோர் தங்கியிருந்த அறையில் 31 லட்சத்து 32 ஆயிரத்து 800 ரூபாய் இருந்தது. அதையும் பறிமுதல் செய்தனர். அதே போல நெல்லை ஆர்யாஸ் ஓட்டலில் நடத்தப்பட்ட சோதனையில் மதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் ஏ.கே.ஓ.சண்முகம் என்பவரது அறையில் இருந்து, ஏழு லட்சத்து 70 ஆயிரம் இருந்தது. இதையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment