Monday, December 7, 2009

குமரி கலைகூடத்திற்கு தமிழக தி மு கா-வினர் 45 லட்சம் உதவி


கன்னியாகுமரி ரெயில் நிலையத்தின் அருகில் காந்தி காமராஜ் அறக்கட்டளை சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவரும், அறக்கட்டளை நிர்வாகியுமான குமரி அனந்தன் குமரி வரலாற்று கூடம் அமைத்துள்ளார்.

இந்த வரலாற்று கூடத்தில் கனிமொழி, ஜி.கே.வாசன், ஞானதேசிகம், திருச்சி சிவா, சுதர்சன நாச்சியப்பன், ராதிகாசெல்வி ஆகியோரின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்தும், அமைச்சர் சுரேஷ்ராஜனின் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்தும் ரூ.45 லட்சம் செலவில் நூலகம் மற்றும் கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது.

இது தவிர இந்த நூல்நிலை யத்திற்கு ரூ.5 லட்சம் செலவில் மேஜை மற்றும் நாற்காலிகள் காந்தி காமராஜ் அறக்கட்டளை சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 ஆயிரம் நூல்கள் இந்த நூலகத்தில் வைக் கப்பட்டுள்ளன. இந்த நூலகம் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகம் மற்றும் கலையரங்க திறப்பு விழா வருகிற 8-ந்தேதி காலை 9 மணிக்கு குமரி வரலாற்று கூடத்தில் நடக்கிறது.

விழாவிற்கு குமரி மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ தலைமை தாங்குகிறார். குமரி வரலாற்று கூட நிர்வாகி குமரிஅனந்தன் வரவேற்று பேசுகிறார். புதிதாக கட்டப் பட்டுள்ள நூலகத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்து பேசுகிறார். கலையரங்கத்தை தமிழக சுற்றுலா மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் திறந்து வைத்து பேசுகிறார்.

விழாவில் ஹெலன் டேவிட்சன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜன், ஜெனினால்டு, ஜெயபால், ஜாண்ஜேக்கப், ஜாண் ஜோசப், லீமாறோஸ், மாவட்ட பஞ்சாயத்து தலைவி அஜிதாமனோ தங்கராஜ், மாவட்ட வேளாண்மை விற்பனை கூழு தலைவர் ஜி.எம்.ஷா, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய துணை தலைவர் இரா.பெர்னார்டு, அகஸ்தீஸ்வரம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் சோமு, தொலைபேசி ஆலோசனை குழு உறுப் பினர் தாமரை பாரதி, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவி கோல்டா எழிலன், கன்னியாகுமரி பேரூராட்சி வார்டு கவுன்சிலர் சுதந்தரி உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார்கள்.

முடிவில் கன்னியாகுமரி நகர காங்கிரஸ் தலைவர் சோரிஸ் நன்றி கூறுகிறார். மேற்கண்ட தகவலை அறக்கட்டளை நிர்வாகி குமரி அனந்தன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment