Saturday, December 12, 2009

கலைஞரின் பொற்கால ஆட்சி "108"

"அவசர உதவிக்கான ஆம்புலன்ஸ் சேவை -108', உயிருக்கு போராடுவோருக்கு ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டும் உற்ற நண்பனாக திகழ்கிறது. கோவையில் கடந்த ஓராண் டில் 12 ஆயிரம் பேருக்கு உயிர்ச் சேவை அளித்துள்ளது.

தமிழகத்தில் சாலை விபத்து மற்றும் அவசர கால உதவிக்கான "ஆம்புலன்ஸ் சேவை -108', கடந்த ஆண்டு செப்டம்பரில் துவக்கப்பட்டது. ஆரம்பத் தில் 20 ஆம்புலன்ஸ்களுடன் துவங்கப்பட்ட இச்சேவை, தற்போது 350 ஆம்புலன்ஸ்களுடன் விரிவுபடுத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் இயங்குகின்றன. இச்சேவை, கோவையில் 2008 நவ., 17ல் ஒன்பது ஆம்புலன்ஸ்களுடன் துவங்கி, தற் போது 13 ஆம்புலன்ஸ்கள், 70 ஊழியர்களுடன் இயங்குகின் றன. கடந்த ஓராண்டில் மட்டும் சாலை விபத்தில் சிக்கிய 4,082 நபர்களையும், பிரசவத்துக்கு 3,150 பெண்களையும், வெவ் வேறு சம்பவங்களில் பாதிக்கப் பட்டு உயிருக்கு போராடிய 790 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இச்சேவையால் அவசர சிகிச்சை பெற்று பயனடைந் தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 803 பேர். ஆம்புலன்ஸ் என் றாலே, "அவசர உதவிக்கு கட்டணத்தின் பேரில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வாகனம்' என்ற நிலையை அடியோடு மாற்றியிருக்கிறது, ஆம் புலன்ஸ் சேவை -108. மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல் வது மட்டுமின்றி, அவசர காலத் தில் சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கவும், பிரசவம் பார்க்கவும், இதன் ஊழியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இதன் மூலமாக, அவசர சிகிச்சை வசதியற்ற கிராமப்புற மக்கள் எண்ணற்ற உதவிகளை பெற்றுள்ளனர். இச்சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், கடந்த ஆண்டில் 65 பெண்களுக்கு ஆம்புலன்ஸ்களிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். அதற் கான அனைத்து வசதிகளும் அதிநவீன ஆம்புலன்ஸ்களில் உள்ளன.

இச்சேவை குறித்து, கோவைக்கான " அவசர ஆம்புலன்ஸ் சேவை -108'ன் மண்டல மேலாளர் மோகன் கூறியதாவது: உயிருக்கு போராடுவோருக்கு, விரைந்து அளிக்கப்படும் அவசர சிகிச்சையே உயிர்காக்க உதவும். இதை மையமாக கொண்டே "108' ஆம்புலன்ஸ் சேவை செயல்படுகிறது. ஒரு டிரைவர், மருத்துவ தொழில் நுட்ப வல்லுனர், ஜி.பி.ஆர். எஸ்., வசதியுடன் மொபைல் போன் போன்ற வசதிகள் நவீன ஆம்புலன்சில் உள்ளன. மேலும், உடலில் ஆக்ஸிஜன் அளவை அறியும் "பல்ஸ் ஆக்சி மீட்டர்', நுரையீரல் ரத்த அடைப்பை சரிசெய்யும் கருவிகள், பிரசவ மருத்துவ உபகரணங்கள், இருதய நோயாளிகளுக்கான சுவாசக் கருவிகள் என, நடமாடும் அவசர சிகிச்சை பிரிவே, "108' ஆம்புலன்ஸ்களில் செயல்படுகிறது. பொதுமக்கள் எங்களை டெலிபோன் எண் "108'ல் தொடர்பு கொள்ளும் போது, "லைன் பிஸி' என்ற பேச்சுக்கே இடமில்லை. போனில் "108' ஐ டயல் செய்தவுடன் சேவை மைய அலுவலர்களுடன் பேசலாம். அவர், அடுத்த விநாடியே அழைப்பை உரிய இடத்திலுள்ள ஆம்புலன்சுக்கு தெரிவிப்பார்.

அங்கு 24 மணிநேர பணியில் தயாராக உள்ள ஆம்புலன்ஸ், சில நிமிடங்களில் மீட்பு மற்றும் துரித சிகிச்சைக்கான பணிகளை துவங்கிவிடும். சாலை விபத்து, பாம்புக்கடி, விலங்குகளால் மலைகிராம மக்கள் தாக்கப்படுதல், பிரசவம் உட்பட பல நிகழ்வுகளுக்கு, எங்களது உதவி சிறப்பானது. மக்கள் அவசர உதவிக்கு மட்டுமே "108' இலவச சேவை' ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. அதை விடுத்து, மது அருந்திவிட்டு ரோட்டில் படுத்து கிடப்போரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல, மருத்துவமவையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்ல, என தேவையற்ற காரணங்களுக்கும் எங் களை அழைக்கின்றனர்; இது தவறானது. அவ்வாறான நிகழ் வுகளுக்கு எங்களால் உதவ முடியாதது மட்டுமின்றி, அந்த நேரத்தில் மற்றவருக்கு கிடைக் கக் கூடிய அவசர உதவியும் பாதிக்கப்படும்.

மேலும், பண் டிகை நாட்கள், திருவிழா மற் றும் ஆயிரக்கணக்கானோர் பங் கேற்கும் விளையாட்டு போட்டி உள்ளிட்ட நிகழ்வுகளின் போதும், இலவச ஆம்புலன்ஸ் சேவை பெரிதும் உதவி வருகிறது. எங்களது இலவச சேவை குறித்து பள்ளிகள், கிராம மக் கள், மகளிர் சுய உதவிக்குழுக் கள் போன்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சிகளையும் அளித்து வருகிறோம். கோவையில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுடன் நேரடியான தொடர்பு வைத்துள்ளோம்; தினமும் 35 பேருக்கு அவசர உதவி சேவையளிக்கிறோம். திருப்பூரில் - 12, நீலகிரியில்- 5, பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில்- 3 என ஆம் புலன்ஸ்கள் இயங்குகின்றன. காவல்துறை, வனத்துறை மற் றும் மருத்துவமனைகள் மற்றும் மக்கள் ஆகியோர் எங்கள் சேவைப்பணிக்கு மிகுந்த ஒத்துழைப்பு அளிக்கின்றனர். இவ்வாறு, மோகன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment