
திருச்செந்தூர் தொகுதியில் தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வெற்றிக் கனியை பறிப்பதற்காக போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தி.மு.க. தேர்தல் பணிகளை மத்திய மந்திரி மு.க.அழகிரி நேற்று ஆய்வு செய்தார். உடன்குடி பகுதியில் குலசேகரன்பட்டினம், சிறுநாடார்குடியிருப்பு, தாண்டவன் காடு, வேத கோட்டைவிளை, ஆகிய இடங்களுக்கு சென்று தி.மு.க. தேர்தல் பணி எப்படி நடைபெறுகிறது என்று அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் உடன்குடியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்¢. அதன்பிறகு தைக்காவூர், தண்டுபத்து வழியாக பரமன்குறிச்சி வந்தார். அவருடன் அமைச்சர் தங்கவேலன், நடிகரும் எம்.பி.யுமான ரித்திஷ் ஆகியோரும் உடன் வந்தனர். அங்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பணி குறித்து மு.க.அழகிரி ஆலோசனை நடத்தினார்.
இந்தகூட்டத்தில் தி.மு.க.மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி, உடன்குடி ஒன்றிய செயலாளர் சக்திவேல், காங்கிரஸ் கட்சி யை சேர்ந்த சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












No comments:
Post a Comment