Thursday, February 4, 2010

அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க முயற்சியா?


பென்னாகரம் இடைத்தேர்தல் ஜனவரி 20-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.​ பொங்கல் பண்டிகை இடையில் வந்ததால் அத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.பின்னர், பென்னாகரம் தொகுதியில் திருத்திய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.​ தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஜனவரி 1-ல் தருமபுரியில் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இடைத்தேர்தலை சந்திப்பது என்ற தீர்மான முடிவுடன் தி.மு.க.வும், பா.ம.க.​ தேர்தல் களத்தில் இறங்கியது, மற்றும் வேட்பாளரையும் அறிவித்து முழு வீச்சுடன் தேர்தல் பணியாற்றி வந்தது.​

ஆனால்,​​ பென்னாகரம் தேர்தலில் அ.தி.மு.க.​ மட்டும் ஆர்வம் காட்டவில்லை.​ மேலும்,​​ தனது ஆதரவுக் கட்சிகளைத் தூண்டிவிட்டு,​​ வாக்காளர் பட்டியலில் முறைகேடு என்று குற்றம்சாட்டியது.​ இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்,​​ அதுவரை இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க.​ ஆதரவுக் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தன.

ஜெயலலிதா ஆதரவுக் கட்சிகள் மனு அளித்த ஒரு மணி நேரத்துக்குள்,​​ வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தது.​ அதுவரை திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டாம் என்றும் அறிவித்தது.

இதன் மூலம் பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் சூழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் துணை போயிருக்கிறது.இதனால் தேர்தல் ஆணையம் நடுநிலையிலிருந்து தவறியிருக்கிறது என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க முடியாது.​ தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.


No comments:

Post a Comment