Tuesday, December 22, 2009

முதல்வர் கலைஞரும் காவேரி நதியும்



கா‌வ‌ி‌ரி‌ப் ‌பிர‌ச்சனை ஆர‌ம்பமான 1924ஆ‌‌ம் ஆ‌ண்டுதா‌ன் நானு‌ம் ‌பிற‌ந்தே‌ன். ‌பிற‌ந்தது முத‌ல் இதுவரை அ‌ந்த‌ப் ‌பிர‌ச்சனை‌க்காக‌த்தா‌ன் நா‌ன் போராடி‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறே‌‌ன் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.


செ‌ன்னை தலைமை‌ச் செயல‌‌க‌த்‌தி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்ற மே‌ட்டூ‌ர் அணை‌ பவள ‌விழா ‌நிக‌ழ்‌ச்‌சி‌‌யி‌ல் காணொ‌லி கா‌ட்‌சி மூல‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி பேசுகை‌யி‌ல், மே‌ட்டூ‌ர் அணை‌யி‌ன் பவள ‌விழா ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் காணொ‌லி கா‌ட்‌சி வா‌‌யிலாக‌க் கல‌ந்து கொ‌ண்டு வா‌ழ்‌த்துரை வழ‌ங்குவ‌தி‌லு‌ம், பவள ‌விழா‌க் கோபுர‌ம் க‌ட்டிட கா‌ல்கோ‌ள் இடுவதிலு‌ம் ‌மிகு‌ந்த ம‌கி‌ழ்‌ச்‌சி அடை‌கிறே‌ன்.

'உழவ ரோதை மதகோதை
உடைந‌ீ ரோதை த‌ண்பத‌ங்கொ‌ள்

‌விழவ ரோதை ‌சிற‌ந்தா‌ர்‌ப்ப
நட‌ந்தா‌ய் வா‌ழி காவே‌ரி'

'மரு‌ங்கு வ‌ண்டு ‌சிற‌ந்தா‌ர்‌ப்ப
ம‌ணி‌ப்பூ ஆடை அது போ‌ர்‌‌த்து‌க்

கரு‌ங்கய‌ற்க‌ண் ‌விழ‌ி‌த்தொ‌ல்‌‌கி
நட‌ந்தா‌ய் வா‌ழி காவே‌ரி'

எ‌ன்று‌ம், கா‌வி‌ரி‌யி‌ன் வெ‌ள்ள‌ம் பாயு‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சியை ‌சில‌ப்ப‌திகார‌ம் ‌‌சிற‌ப்பாக எடு‌த்து‌க் கா‌ட்டு‌கிறது.

த‌மி‌ழ் இல‌க்‌‌கிய‌த்‌திலு‌ம், த‌மிழ‌ர் த‌ம் வா‌ழ்‌விலு‌ம் வள‌ம் சே‌ர்‌த்த கா‌வி‌ரியா‌ற்‌றி‌ல் வெ‌ள்ள‌ம் பெரு‌க்கெடு‌த்து வரு‌ம் வேளைக‌ளி‌ல் அதனை‌த் தடு‌த்து, சே‌மி‌த்து வை‌த்து அறுவடை‌க் கால‌ம் வரை தேவையான நேர‌ங்க‌ளி‌ல் ‌‌நீரை‌ப் பய‌ன்படு‌த்துவத‌ற்கு அணை ஒ‌‌ன்று க‌ட்ட‌ப்பட வே‌ண்டு‌ம் எனு‌ம் எ‌ண்ண‌ம் 19ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் எழு‌ந்தது.

அதனை‌த் தொட‌ர்‌‌ந்து, நமது நா‌ட்‌டி‌லிரு‌ந்த அ‌ன்றைய ஆ‌ங்‌கிலேய ஆ‌ட்‌சி, கா‌வி‌ரி‌‌யி‌ல் அணை க‌ட்டுவத‌ற்கு‌ரிய இட‌த்தை ஆ‌‌ய்வு செ‌ய்து சேல‌ம் மாவ‌ட்ட‌த்தை‌ச் சே‌ர்‌‌ந்த பா.வெ.மா‌ணி‌க்க நாய‌க்க‌ர் கு‌றி‌ப்‌பி‌ட்ட இடமான மே‌ட்டூரை‌த் தே‌ர்வு செ‌ய்தது. க‌ர்ன‌ல் ட‌பி‌ள்யூ எ‌ம்.எ‌ல்‌லி‌ஸ் எ‌ன்ற புக‌ழ்பெ‌ற்ற இராணுவ‌‌ப் பொ‌றியாள‌ர் 1910 ஆ‌‌ம் ஆ‌ண்டி‌ல் அணையை வடிவமை‌த்து, உ‌ரிய ம‌தி‌ப்‌பீடுகளோடு ஆ‌ங்‌கிலேய அர‌சி‌ன் ஒ‌ப்புதலு‌க்கு அனு‌ப்‌பினா‌ர்.

அதே கால‌க‌ட்ட‌த்த‌ி‌ல், அ‌ன்றைய மைசூ‌ர் சம‌ஸ்தானமு‌ம், பொ‌றியாள‌ர் ச‌ர்.எ‌ம்.‌வி‌ஸ்வே‌ஸ்வர‌ய்யா உத‌வியுட‌ன் கா‌வி‌ரி‌யி‌ல் மைசூ‌ர் அருகே க‌ிரு‌ஷ்ணராஜசாக‌ர் ந‌ீ‌‌ர்‌த் தே‌க்க‌த்தை அமை‌த்‌திட ஆ‌ங்‌கிலேய அர‌சிட‌ம் அனும‌தி கோ‌ரியது.

எனவே, கா‌வி‌ரி ‌நீரை‌ப் பய‌ன்படு‌த்துவது தொட‌ர்பாக அ‌ப்பொழுதே ‌பி‌ர‌ச்சனைக‌ள் எழு‌ந்து, ப‌ல்வேறு முய‌ற்‌சிகளுக‌்கு‌ப் ‌பி‌ன் 1924 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் செ‌ன்னை மாகாண அரசுக‌்கு‌ம், மைசூ‌ர் அரசு‌க்கு‌ம் இடையே ஓ‌ர் உட‌ன்படி‌க்கை ஏ‌ற்ப‌ட்டது. 1924ஆ‌‌ம் ஆ‌ண்டுதா‌ன் கா‌வ‌ி‌ரி‌ப் ‌பிர‌ச்சனை ஆர‌ம்பமானது. அதே 1924ஆ‌ம் ஆ‌ண்டு தா‌ன் நானு‌ம் ‌பிற‌ந்தே‌ன். ‌பிற‌ந்தது முத‌ல் இதுவரை அ‌ந்த‌ப் ‌பிர‌ச்சனை‌க்காக‌த்தா‌ன் நா‌ன் வாதாடி‌க் கொ‌ண்டிரு‌‌க்‌கிறே‌ன். போராடி‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறே‌ன். அ‌ந்த உட‌ன்படி‌க்கை‌க்கு‌ப் ‌பி‌ன், கா‌வி‌ரி‌யி‌‌ல், மே‌ட்டூ‌ர் அணை க‌ட்டுவத‌ற்கு 6 கோடியே 12 இல‌‌ட்ச‌ம் ரூபாயை அனுமத‌ி‌த்து 3.3.1925 அ‌ன்று இங‌்‌கிலா‌ந்‌தி‌ல் ஆணை ‌பிற‌ப்‌பி‌க்க‌ப்‌ப‌ட்டு ப‌ணிக‌ள் தொட‌ர்‌ந்து நடைபெ‌ற்றன.

அதனை‌த்தொட‌ர்‌ந்து, பொ‌றியாள‌ர் ச‌ர்.‌‌கிளமெ‌ண்‌ட் மு‌ல்ல‌ி‌ங்‌ஸ் (Clement Mullings) எ‌ன்பவரது தலைமை‌யி‌ல் த‌மிழக‌ப் பொ‌றியாள‌ர்க‌ள், தொ‌ழிலாள‌ர்க‌ள், கு‌றி‌ப்பாக சேல‌ம் மாவ‌ட்ட‌த்தை‌ச் சே‌ர்‌ந்த க‌ல் த‌ச்சு‌த் தொழ‌ிலாள‌ர்க‌ள் ஆ‌யிர‌க்கண‌க்‌கி‌ல் கூட மே‌ட்டூ‌ர் அணை‌யி‌ன் க‌ட்டுமான வேலைகளை 20.7.1925இ‌ல் தொட‌ங்‌கி, 1934ஆ‌ம் ஆ‌ண்டு ஜூலை‌த் ‌தி‌ங்க‌ளி‌ல் ‌நிறைவே‌ற்‌றி முடி‌த்தா‌ர்க‌ள்.

ஏற‌த்தாழ 9 ஆ‌ண்டு கால‌த்‌தி‌ல் 120 அடி உயர‌த்‌திற‌்கு‌த் த‌ண்ண‌ீரை‌த் தே‌க்கு‌ம்வகை‌யி‌ல், 5 ஆ‌யிர‌‌‌த்து 300 அடி ‌‌நீளமு‌ம், 171 அடி அகலமு‌ம் உடையதாக க‌ட்டி முடி‌க்க‌ப்ப‌ட்ட இ‌ந்த மே‌‌ட்டூ‌ர் அணை‌யி‌லி‌ரு‌ந்து 12.6.1934 அ‌ன்று முத‌ன்முத‌ல் பாச‌ன‌த்‌தி‌ற்காக‌த் த‌ண்ண‌ீ‌ர் ‌திற‌ந்து ‌விட‌ப்ப‌ட்டது.

Monday, December 21, 2009

தமிழ்த் தலைமகன்' விருது:முதல்வர் கருணாநிதி ஆற்றிய ஏற்புரை


கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்த் தலைமகன் என்னும் விருது வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் துணைவேந்தர் வி.சி. குழந்தைசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், கொல்கத்தா தமிழ்ச் சங்க ஆலோசகர் த. ஞானசேகரன், கருணாநிதிக்கு விருதினை வழங்கினார்.

முதல்வர் கலைஞர் ஆற்றிய ஏற்புரை

கொல்கத்தா தமிழ்ச் சங்கம், தில்லி தமிழ்ச் சங்கம், மும்பை தமிழ்ச் சங்கம் என தமிழுக்கு சேவை செய்யும் அனைத்து தமிழ்ச் சங்கங்களுக்கும் தி.மு.க. அரசு துணை நிற்கும்.

அரசியல் மேடைகளில் மாற்றுக் கட்சியினர் கூட என்னைப் பாராட்டியுள்ளனர். ஆனால், இந்த விழாவில் எனக்கு ஏன் இந்த விருது வழங்கப்படுகிறது என்பது குறித்து பேசிய விழா தலைவர் வி.சி. குழந்தைசாமி, தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்படும் சமத்துவபுரம் திட்டத்தை ஒரு காரணமாகக் குறிப்பிட்டார்.

இது உண்மையிலேயே என்னை ஒருபடி மேலே உயரச் செய்தது.கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 95 சமத்துவபுரங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது ஒரு சமுதாய மறுமலர்ச்சித் திட்டம். இங்கு சாதி, மத பேதங்கள் இல்லை என்ற நிலை ஏற்படும் வரை சமத்துவபுரங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.

செம்மொழி மாநாடு: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு முன்னோட்டமாக இந்த விழா நடைபெறுவதாக இங்கே குறிப்பிட்டார்கள். தமிழன் தலை நிமிர்ந்து வாழும் நிலை ஏற்பட வேண்டும் என்பதற்காக செம்மொழி மாநாட்டை நடத்துகிறோம்.இந்த மாநாட்டுக்கு வர இயலாது, முடியாது என சிலர் கூறியுள்ளனர். அந்த ஓரிருவர் இல்லாவிட்டாலும்கூட, அவர்கள் இருந்தால் எந்த அளவு சிறப்போடு நடைபெறுமோ, அதே சிறப்போடு, உரிய பண்பாட்டோடு மாநாடு நடைபெறும்.

தமிழ்ப் பெருங்குடி மக்கள் உரிய ஒத்துழைப்பு அளித்தால், நாம் விரும்புகிற தமிழ்ச் சமுதாயத்தை அமைக்க முடியும். அது ஒரு புரட்சிகர, பகுத்தறிவு நிறைந்த சமுதாயமாக இருக்கும்.அப்படியே உள்ளது: எனக்கு இப்போது 86 வயதாகிறது. நான் இருக்கின்றவரை தமிழ் மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். இடையில் அரசுப் பொறுப்பிலிருந்து சற்று ஒதுங்கி செயல்படுவேன் என்று நான் முன்பு சொன்னது என்ன ஆனது என சிலர் கேட்கலாம். அதை நான் ஒதுக்கிவிடவில்லை. முன்பு சொன்னது அப்படியேதான் உள்ளது என்றார் கலைஞர்.

விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், நடிகர் சிவகுமார், கவிஞர் வைரமுத்து ஆகியோர் விருது பெற்ற கருணாநிதியை வாழ்த்திப் பேசினர்.முன்னதாக கொல்கத்தா தமிழ்ச் சங்க ஆலோசகர் எஸ். மகாலிங்கம் வரவேற்றார். நிறைவில் அதன் செயலாளர் இரா. ஸ்ரீதரன் நன்றி கூறினார்.விழாவில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு தமிழ்ச் சங்க நிர்வாகிகள், கல்வியாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Sunday, December 20, 2009

மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறந்​தி​ருக்​காது: கலைஞர்


மார்க்​சிஸ்ட் கட்​சிக்​காக அனு​ச​ர​ணை​யோ​டும்,​​ நேசத்​தோ​டும் தி.மு.க.​ செய்​த​தை​யெல்​லாம் அக்​கட்சி மறந்​தி​ருக்​காது என நம்​பு​வ​தாக முதல்​வர் கரு​ணா​நிதி தெரி​வித்​துள்​ளார்.​

இது குறித்து அவர் தி.மு.க.​ தொண்​டர்​க​ளுக்கு சனிக்​கி​ழமை எழு​திய கடி​தத்​தில் கூறி​யுள்​ள​தா​வது:​திண் ​டுக்​கல்​லில் மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யி​னர் ஒரு மாநா​டும்,​​ பேர​ணி​யும் நடத்​து​கின்​ற​னர்.​ திரி​புரா மாநில முதல்​வர் பங்​கேற்​கும் அம்​மா​நாட்​டுக்கு போலீ​சார் அனு​மதி தர மறுப்​ப​தா​க​வும்,​​ முதல்​வர் தலை​யிட்டு அனு​மதி வழங்க வேண்​டும் என​வும் மார்க்​சிஸ்ட் செய​லா​ளர் என்.​ வர​த​ரா​ஜன் வெள்​ளிக்​கி​ழமை மதி​யம் எனது செய​லா​ள​ரி​டம் தொலை​பே​சி​யில் பேசி​யுள்​ளார்.​

அச்​ செய்​தியை அறிந்த நான்,​​ மார்க்​சிஸ்ட் கட்சி மாநாட்​டுக்​கும்,​​ பேர​ணிக்​கும் அனு​மதி வழங்க காவல்​துறை அதி​கா​ரி​க​ளி​டம் கூறு​மாறு,​​ எனது செய​லா​ள​ரி​டம் கூறி​னேன்.​அ​தன் பின்,​​ வெள்​ளிக்​கி​ழமை வெளி​யான மார்க்​சிஸ்ட் கட்சி நாளி​தழை படித்​தேன்.​ அதில்,​​ "மதுரை தொகு​தி​யில் மு.க.​ அழ​கிரி வெற்றி பெற்​றது செல்​லாது என அறி​விக்​கக் கோரி,​​ மார்க்​சிஸ்ட் வேட்​பா​ளர் மோகன் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தி​ருந்​தார்,​​ மோகன் மறைந்​து​விட்​ட​தால்,​​ மார்க்​சிஸ்ட் மாற்று வேட்​பா​ள​ராக மனு செய்த ஏ.​ லாசர் அந்த வழக்கை தொடர்ந்து நடத்​து​வார்" என செய்தி வந்​துள்​ளது.​

வ​ழக்கு நடை​பெ​றட்​டும்.​ நீதி​மன்​றம் தீர்ப்பு கூறட்​டும்.​ தீர்ப்பை ஏற்க தி.மு.க.​ தயா​ராக உள்​ளது.​ ஆனால்,​​ மார்க்​சிஸ்ட் கட்சி தலை​மை​யில் உள்ள சில​ரின் உணர்​வு​க​ளை​யும்,​​ தி.மு.க.​ தலை​மை​யின் உணர்​வு​க​ளை​யும் ஒப்​பிட்​டுப் பார்ப்​ப​தற்​காக சில​வற்றை கூறு​கி​றேன்.​

தி.மு.க.​ ஆட்​சி​யில் இருந்​த​போது,​​ 23.4.1997}ல் மதுரை மாந​க​ராட்சி மார்க்​சிஸ்ட் உறுப்​பி​னர் லீலா​வதி கொலை செய்​யப்​பட்​டார்.​ இது குறித்து லீலா​வதி கண​வர் அளித்த புகா​ரின் பேரில்,​​ மாந​க​ராட்சி தேர்த​லில் லீலா​வ​தியை எதிர்த்​துப் போட்​டி​யிட்ட வள்ளி என்​ப​வ​ரின் கண​வர் கரு​ம​லை​யான்,​​ அவ​ரது சகோ​த​ரர் முத்​து​ராம​லிங்​கம் மற்​றும் 4 பேர் கைது செய்​யப்​பட்​ட​னர்.​

வ​ழக்​கில் குற்​ற​வா​ளி​கள் தி.மு.க.வின​ராக இருந்​த​போ​தும்,​​ அப்​போது ஆளுங்​கட்​சி​யாக தி.மு.க.​ இருந்​த​போ​தும்,​​ அந்த வழக்கு முறை​யாக நடை​பெற்​றது.​ அரசு வழக்​க​றி​ஞ​ருக்​குப் பதில் மார்க்​சிஸ்ட் கட்சி வழக்​க​றி​ஞர் ஆஜ​ரா​க​வும் ஒப்​புக்​கொண்​டோம்.​ நீதி​மன்​றத்​தில் தி.மு.க.வைச் சேர்ந்த குற்​ற​வா​ளி​கள் தண்​டிக்​கப்​பட்​டார்​கள்.​

ஆ​னால் அதற்கு இரண்டு ஆண்​டு​க​ளுக்கு முன்பு,​​ அ.தி.மு.க.​ ஆட்​சிக் காலத்​தில்,​​ குட​வாச​லில் தங்​கய்யா என்ற மார்க்​சிஸ்ட் தொண்​டர் கொல்​லப்​பட்​டார்.​ அந்த வழக்​கிலே குற்​றஞ்​சாட்​டப்​பட்​ட​வர்​கள்,​​ அந்த ஆட்​சி​யில் இருந்த ஒரு அமைச்​ச​ரின் காரி​லேயே பாது​காப்​பாக அழைத்​துச் செல்​லப்​பட்​ட​னர்.​ தி.மு.க.​ ஆட்சி வந்​த​பி​ற​கு​தான்,​​ அந்த வழக்​கி​லும் நட​வ​டிக்​கை​கள் எடுக்​கப்​பட்​டன.​

மார்க்​சிஸ்ட் கட்சி நண்​பர்​கள் இதை​யெல்​லாம் மறந்​தி​ருக்க மாட்​டார்​கள் என நம்​பு​கி​றேன்.​2006 சட்​டப்​பே​ரவை தேர்த​லின்​போது செய்​து​கொண்ட உடன்​ப​டிக்​கை​படி,​​ 2007 மாநி​லங்​க​ள​வைத் தேர்த​லில் இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யின் டி.​ ராஜா​வுக்கு தி.மு.க.​ வாக்​க​ளித்து வெற்றி பெறச் செய்​தது.​ மார்க்​சிஸ்ட் கட்​சி​யு​டன் அத்​த​கைய உடன்​ப​டிக்கை எது​வும் செய்து கொள்​ள​வில்லை.​ எனி​னும் தோழ​மைக் கட்​சி​க​ளி​டம் கொண்​டுள்ள தோழமை உணர்வு கார​ண​மாக,​​ 2008 மாநி​லங்​க​ள​வைத் தேர்த​லில் மார்க்​சிஸ்ட் கட்சி வேட்​பா​ளரை தி.மு.க.​ ஆத​ரித்​தது.​

அக்​கட்சி வேட்​பா​ளர் டி.கே.​ ரங்​க​ரா​ஜ​னின் வேட்பு மனுவை நானே முன்​மொ​ழிந்​தேன்.​ அப்​போது பேட்​டி​ய​ளித்த ரங்​க​ரா​ஜன்,​​ "மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் சார்​பில் தமிழ்​நாட்டி​லி​ருந்து மாநி​லங்​க​ள​வைக்கு தேர்ந்​தெ​டுக்​கப்​பட்ட பி.​ ராம​மூர்த்தி,​​ எம்.ஆர்.​ வெங்​கட்​ரா​மன்,​​ நல்​ல​சி​வம்,​​ இப்​போது நான் ​(ரங்​க​ரா​ஜன்)​ ஆகிய நால்​வ​ருமே தி.மு.க.​ ஆத​ர​வில் தேர்ந்​தெ​டுக்​கப்​பட்​ட​வர்​கள்.​ கூட்​டணி கட்​சி​க​ளி​டையே ஒற்​று​மையை பாது​காக்க வேண்​டும் என்ற உணர்​வோடு முதல்​வர் கரு​ணா​நிதி தேர்​தல்​க​ளுக்​கான ஒதுக்​கீ​டு​களை செய்​துள்​ளார்" எனத் தெரி​வித்​தார்.​

தோ​ழ​மைக் கட்​சி​க​ளோடு,​​ அவர்​கள் தோழ​மை​யாக இல்​லாத காலத்​தி​லும் கூட,​​ நேச உணர்​வோடு,​​ விட்​டுக் கொடுத்து,​​ அனு​ச​ர​ணை​யாக நடந்து கொள்ள வேண்​டும் என்​ப​தற்கு உதா​ர​ண​மாக தி.மு.க.​ நடந்து கொள்​கி​றது.​அதே நேரத்​தில் மற்ற கட்​சி​கள்,​​ குறிப்​பாக மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி எப்​படி நடந்து கொள்​கி​றது என்​பதை அக்​கட்சி தொண்​டர்​களே தெரிந்து கொள்ள வேண்​டும் என கரு​ணா​நிதி கூறி​யுள்​ளார்.

Saturday, December 19, 2009

அமைச்சர் அன்பழகன் 88-வது பிறந்தநாள்


நிதி அமைச்சர் அன்பழகன் 88-வது பிறந்தநாளை இன்று எளிமையாக கொண்டாடி னார். இதையொட்டி அவ ருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

முதல்-அமைச்சர் கருணாநிதி தொலைபேசி மூலம் அமைச்சர் அன்பழகனை தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

துணை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகன் வீட்டுக்கு நேரில் சென்றார். அங்கு அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி. மணி, பரிதி இளம்வழுதி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர். பாலு, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஜெ. அன்பழகன், வி.எஸ். பாபு, காங்கிரஸ் சார்பில் சுதர்சனம் எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்தினார்கள். போன் மூலமும் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Wednesday, December 16, 2009

அ தி மு க.,வின் லட்சணம்......


இன்று வாய் கிழிய பேசிவரும் அதிமுக தான் முதல் முதலில் தேர்தல் காலங்களில் ஜிமிக்கி, குடம், சேலை என்று வாக்காளர்களை கவரும் அற்புதமான மார்கெட்டிங் நடவடிக்கையை முன்னோடியாக அறிமுகம் செய்தது.


வந்தவாசி
வந்தவாசி தொகுதியில் அ.தி.மு.க.,வினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய துவங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு முதல் அ.தி.மு.க.,வினர் வீடு, வீடாக சென்று ஒரு வாக்காளருக்கு 200 ரூபாய் வீதம் பட்டுவாடா செய்து வருகின்றனர்.

வந்தவாசி தொகுதியில், அ.தி.மு.க.,வினர் பண வினியோகம் செய்த போது, கரைவேட்டியை கழற்றி விட்டு லுங்கி, பேன்ட்டில் வலம் வந்தனர். நேற்று முன்தினம் முதல், அ.தி.மு.க.,வினர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், ஓட்டுக்கு 200 ரூபாய் வீதம் பண வினியோகம் செய்யத் துவங்கி உள்ளனர்.பண வினியோகத்தின் போது, தி.மு.க.,வினர் பிடித்து போலீசிலோ, தேர்தல் ஆனையத்திடமோ ஒப்படைக்கலாம் என்கிற சந்தேகம் அ.தி.மு.க.,வினருக்கு உள்ளது. இதனால், பண வினியோகத்தின் போது கரை வேட்டிகளை கழற்றி விட்டு லுங்கி, பேன்ட்டில் செல்கின்றனர்.இத்தனை நாள் கரைவேட்டிகளால் நிறைந்து வழிந்த தேர்தல் அலுவலகங்களில், பண வினியோகம் நடக்கும் போது அடையாளத்திற்கு கூட கரை வேட்டியைக் காண முடியவில்லை.

திருசெந்தூர்
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரின் ஓட்டலில் இருந்து, 31 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சுற்றுலா துறை ஓட்டல் உள்ளது. இதனை தற்போது அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தனது நண்பரின் பெயரில் குத்தகைக்கு எடுத்து, விஜய் கிளாசிக் என்ற பெயரில் நடத்தி வருகிறார். நேற்று அந்த ஓட்டல் அறைகளில் கோடிக்கணக்கில் பணம் மறைத்து வைத்திருப்பதாகவும், திருச்செந்தூர் தேர்தலில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க உள்ளதாகவும், போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. துணைகமிஷனர் மாணிக்கராவ் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.


ஒரு அறையில் ஒரு லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் இருந்தது. ஆனால், அந்த பணத்திற்கு யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. ஊத்துமலை சுப்பிரமணியன், அப்பாத்துரை ஆகியோர் தங்கியிருந்த அறையில் 31 லட்சத்து 32 ஆயிரத்து 800 ரூபாய் இருந்தது. அதையும் பறிமுதல் செய்தனர். அதே போல நெல்லை ஆர்யாஸ் ஓட்டலில் நடத்தப்பட்ட சோதனையில் மதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் ஏ.கே.ஓ.சண்முகம் என்பவரது அறையில் இருந்து, ஏழு லட்சத்து 70 ஆயிரம் இருந்தது. இதையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Monday, December 14, 2009

யார் துரோகி.....?

எம்.ஜி.ஆர்.,நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதா, அப்போதைய பிரதமர் ராஜிவுக்கு எழுதிய கடிதத்தில், செயல்படாத முதல்வராக எம்.ஜி.ஆர்., உள்ளார். எனவே அவருக்கு பதிலாக தம்மை முதல்வர் பதவியில் உட்கார வைக்க கூறிய துரோகி ஜெயலலிதா. எம்.ஜி.ஆர்., இறந்து அவர் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்த இடத்தில், ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், "ஜானகியம்மாள் தான் எம்.ஜி.ஆருக்கு மோரில் விஷம் கலந்துகொடுத்து கொன்றதாக கூறினார்.

அது போல அரசியல் அரிச்சுவடி கற்று கொடுத்த ஆசான் கலைஞரை முதுகில் குத்தி காட்டிகொடுத்த எட்டப்பன் தான் வைகோ. இப்படி பட்ட துரோகங்களுக்கு மத்தியில் எல்லா துரோகங்களையும் நெஞ்சில் தாங்கி, எத்தனையோ சோதனையான காலங்களிலும் திமுகவை பெரிய ஆலமரமாக வளர்த்து, உண்மையிலேயே, காமராஜரும், அண்ணாவும், காந்தியும் கண்ட ஒரு நல்ல நாட்டை உருவாக்கி வழி நடத்தி கொண்டிருப்பவர் தான் கலைஞர். தமிழக நண்பர்களே, அரசியல் மன மாச்சரியங்களை கடந்து, விரோத மனப்பான்மையை களைந்து பாருங்கள், கலைஞரின் சமூக தொண்டையும், ஏழைகளின் வாழ்வில் கலைஞரின் பங்கையும். உண்மையிலேய பாராட்ட படவேன்டிய உன்னத மனிதர் கலைஞர். அவருக்கு பிறகும் சரி அவருக்கு முன்பும் சரி, அவருக்கு நிகர் அவர்தான். வாழ்க கலைஞர், வளர்க அவரின் மக்கள் தொண்டு.

தமிழக மக்கள் இந்த கபட வேஷ முன்னாள் நடிகையை மறந்து ரொம்ப நாள் ஆச்சு. கலைஞர்னு ஒருத்தர் இல்லையென்றால் எம் .ஜி. ஆர் .இல்லை .எம். ஜி. ஆரை வளர்த்து விட்டதே கலைஞர்தான் எம்.ஜி.ஆர் துவங்கிய அதிமுக இப்போது அழிவு பாதை நோக்கி வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. நாட்டிற்கும் மக்களுக்கும் எந்த பயனுமில்லாத தேச விரோத அதிமுக விரைவில் முற்றிலும் வேரோடும், வேரோடு மண்ணோடும் அழியும். குமரி மாவட்ட அதிமுக தளவாய் சுந்தரம் எனும் துரோகியால் அழிந்தே விட்டது.

Sunday, December 13, 2009

ஜெயலலிதாவின் ஏமாற்று ஆர்பாட்ட நாடகம்



தமிழகத்திலே உள்ள அனைத்துக் கிராமங்களிலும் தனது கட்சிக்காரர்களை விட்டு போராட்டங்கள் -ஆர்ப்பாட்டங்களை நடத்தி முடித்துவிட்ட எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா வருகிற 18-ந்தேதி டெல்லியிலே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிக்கை விடுத்துள்ளார்.


மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் மீனவர்களுக்கு விரோதமான கடல் மீன் தொழில் (ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை) வரைவு சட்டமுன் வடிவை எதிர்த்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போகிறாராம்.

மீனவர்களுக்கு விரோதமாக இப்படியொரு மசோதாவை மத்திய அரசு கொண்டு வரப்போவது தெரிந்த உடனேயே நவம்பர் 19-ந்தேதியன்று தமிழக அரசின் சார்பில் மத்திய அமைச்சர் சரத்பவாருக்கு தமிழக முதல்வர் அவர்கள் கடிதம் அனுப்பினார்கள்.


அந்தக் கடிதத்தில் கடல்சார் மீன் வளம் (முறைப்படுத்தல் மற்றும் நிர்வாகம்) நகல் சட்டம் 2009 குறித்து தமிழக மீனவர்களின் ஐயப்பாடுகளையும், அச்சத்தையும் மத்திய வேளாண்துறை நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் சரத்பவாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு, இந்தப் பிரச்சினைகள் குறித்து மீன்பிடி தொழிலிலே தொடர்புடையவர்களோடு விரிவாகக் கலந்து பேசிய பிறகுதான் அனைத்தையும் உள்ளடக்கிய முற்போக்கான சட்டத்தைக் கொண்டு வரவேண்டுமென்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதா அறிக்கையிலே அவர் கடிதம் எழுதியதோடு அவருடைய எதிர்ப்பு நாடகத்தை முடித்துக்கொண்டார் என்று அவருக்கே உரிய பாணியில் எழுதியிருக்கிறார். அதுவும் தவறான செய்தி. கடிதத்தை எழுதியதோடு அவர் நின்று விடவில்லை. மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை தொடர்பு கொண்டு, உடனடியாக மத்திய அமைச்சர் சரத்பவாரை சந்தித்து மீனவர்களின் பிரச் சினைகள் குறித்து விரிவாக பேசுமாறு கேட்டுகொண்டார்.

மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் உடனடியாக டிசம்பர் 10-ந்தேதியன்று மத்திய அமைச்சர் சரத்பவாரை சந்தித்து மீனவர்களின் நிலைமைகளை விளக்கியிருக்கிறார். கொண்டுவர உத்தேசித்த மசோதாவின் காரணமாக மீனவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதையும் விரிவாக மத்திய அமைச்சரிடம் சொல்லியிருக்கிறார்.

இப்பிரச்சினை குறித்து சரத்பவாருக்கு தமிழக முதல்வர் எழுதிய கடிதம் பற்றியும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். அத்தனையையும் கேட்டு விட்டு, மத்திய அமைச்சர் தமிழக மத்திய அமைச்சர் தயாநிதிமாறனிடம், தமிழக முதல்-அமைச்சரின் கோரிக்கைபடி, கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மசோதாவை நடப்பு பாராளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யமாட்டோம். இந்த மசோதா பற்றி அனைத்து முதல்வர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகளின் கருத்து கேட்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். இந்தச் செய்தி 11-ந்தேதிய அனைத்து ஏடுகளிலும் பெரிதாக வெளிவந்துள்ளது.

இத்தனை செய்திகளையும் தெரிந்து கொண்டு எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா இது மீனவர்களை ஏமாற்றும் செயல் என்றும், இதற்காக டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அறிவிக்கின்றார் என்றால் உண்மையில் மீனவர்களை ஏமாற்றுகின்ற செயல் எது, ஏமாற்றுகின்றவர் யார் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ளலாம்.

நவம்பர் மாதம் மசோதா வரப்போகிறது என்று தெரிந்ததும் நவம்பர் 19-ந்தேதியன்றே தமிழக முதல்வர் அவர்கள் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி அவரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். ஆனால் ஜெயலலிதா இந்த ஒரு மாத காலமும் சும்மாயிருந்து விட்டு, தற்போது திருச்செந்தூர் இடைத்தேர்தல் என்றதும், அங்கேயுள்ள மீனவர்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக டெல்லியிலே ஆர்ப்பாட்டம் என்று அறிக்கை விடுகிறார். ஆனால் தமிழக மீனவப் பெருமக்களுக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரியும்.


எத்தனை காலம்தான் ஜெயலலிதா மக்களை ஏமாற்றுவாரோ?